வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 15 February 2020

பரிசுத்த பனிமய அன்னை பேரில் கழிநெடிலடி விருத்தம்



பனிமய அன்னை திருவிழா நிறைவு
மங்கள தின இறுதி மன்றாட்டு மணிமாலை

அனந்தசு போதன் ஆகண்டவி ணோதன்
ஆனந்த ஞானச மேதன்
அமலஉற் பவம்நீ விமலகற்  பகம்நீ
ஆதிசு கந்தமும் நீயே !

அம்புவி நிலவும் அணிமறைத் தருவில் 
அற்புத மானபைங் கனிநீ
அருமைநீ எமது இகபர சுகம்நீ
அன்புயர் அன்னையும் நீயே !

மனந்தனிவ் புகுந்து மறைநலம் புகன்று
வரந்திகழ் எமதுநல் லாயன்
மாதவன் சவியேர் முனிவரன் உனையே
மைந்தரெம் கெதிஎனத் தந்தே
மந்த்ரமா நகர்நீ வந்தநா ளிருந்தே
மாபெருங் கருணையால் எம்மை
மகிழ்வுடன் காவல் புாியும்நின் தயவை
மறக்கவும் முடியுமோ அம்மா !

கனந்தனில் மிகுந்த எமதுபாப் பரசும்
கவினுயர் மேற்றிரா சனமும்
கன்னியர் குருக்கள் சந்நியாசிகளும்
கலைபயில் மாணவர் நெறியும்
கடலிலும் கரையிலும் தொழில் புாிபவரும்
கருதும்நல் லெண்ணமும் இனிதே
கலங்கறத் துலங்க கண்கண்ட தாய்நின்
கமலபொற் பதம்பணிந் தோமே !

தினந்தினம் உந்தன் தொிசனம் வேண்டும்
தீயவர் திருந்தவும் வேண்டும்
திகிலுறு பஞ்சம் பசிகொள்ளை நோயும்
தீர்ந்துநல் லிதம்பெற வேண்டும்
திகழும்பொன் ரதத்தில் பவனியாய் எழுந்த
தேவிஉன் திருவருள் வேண்டும்
திருமந்த்ர நகாில் இலங்கும் தெய்வீக
திவ்யதஸ் நேவிஸ் மாதாவே !

- பாவலர் மாிய அலங்காரம் பீாிஸ்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com