வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 5 June 2020

தொல் தமிழர்களின் வணிகக்குழுக்கள்
தமிழர்களின் கடல் வழி வாணிகம் உலகெங்கும் பரவியிருந்தவிடமெல்லாம் இந்த வணிக குழுக்கள் இயங்கி வந்துள்ளனர். இவ்வணிகர் குழுக்கள், அக்காலத்திய Chambers of Commerce போல செயல்பட்டதும் தம் வணிகத்தின் விதிமுறைகளையும் வரிகளையும் தாமே நிர்ணயித்துக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. . இத்தகைய தமிழ் வணிக ஆளுமை, சாதுர்யம் இப்போதைய வளர்ந்த நாடுகளின் வணிகக்குழுக்களைவிட மிக சிறப்பாக இருந்தது. அன்பால் தொல்தமிழரின் வணிகத்தில் அறம் இருந்தது.


தமது நாட்டில் விளைந்த அரியப் பொருட்களை, அதுதேவைப்படும் தூரத்து மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும் என்ற அன்பு இருந்தது, அதில் செல்வம் சேர்க்கும் சாதுர்யம் இருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவர் வணிகத்திற்கு இலக்கணம் வகுத்துக்கூறிய பாடல்களைப் பாருங்கள், அதற்கு என ஒரு அதிகாரமே தந்திருக்கிறார், அதில் இருந்து அந்த நாளைய தமிழர் வாழ்வில் வாணிகம் பெற்றிருந்த சிறப்பை உணரலாம். ஆனால் இத்தகைய சாகசப்பயணங்களை சாத்தியம் ஆகிய நெய்தல் நில கடலோடிகளைப்பற்றி தக்க புரிதல் தான் இல்லை

கடல் கடந்த நாடுகளிலும் சுமத்ரா தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டு ஒன்று அது கி.பி. 1010-ல் பொறிக்கப்பட்டது. அதில் ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் வணிகக்குழு கொடுத்த கொடை பற்றி சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது. இது சுமத்ரா தீவில் தமிழர் வணிகர் குழு ஒரு முக்கிய இடத்தைத் தம் இடமாகக் கொண்டு அங்கு இறங்கும் கப்பல் தலைவனும், மரக்காயர் எனும் முஸ்லீம் வணிகர்களும் எவ்வளவு தங்கம், கஸ்தூரி செலுத்திய பிறகே தரை இறங்கவேண்டும் என்ற வரிவிதித்து வசூலித்ததைப் பற்றிய செய்தியைக் கூறுவது ஆகும். அத்துணை வணிக மேலாண்மையையும் ஆதிக்கமும் தமிழர்கள் செலுத்தியத்தை பற்றியும் அவர்கள் செயல்படும் விதிமுறைகளையும் இது சொல்கிறது.

சீன நாட்டிலும் 1281-ல் சம்பந்தப்பெருமாள் என்னும் தமிழ் வணிகன் அந்நாட்டு அரசன் செக்கா சைக்கான் (குப்ளே கான்) அனுமதியுடன் சிவபெருமானின் உருவத்தை நிறுவுகிறான். அரசனின் நன்மையை முன்னிட்டு இக்கோவிலின் பெயர் திருக்கானேஸ்வரம் என்று அழைக்கப்பட்டது .

இதற்கு முன்னோடிகளுண்டு. கி.மு. 140-86-ல் ஹவாங் சு (காஞ்சீபுரம்) வோடு வணிக தொடர்புகள் இருந்தன. சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச் சக்கரவர்த்திகள் சம்பந்த பெருமாள் என்பதாகும். சக யுகம் சித்ரா பவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது.

இதை குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் சோழர் கால சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமானத் தமிழ்க் கல்வெட்டு இதுவாகும்.

கியோ தங்க் சு என்ற சீன நூல், சீன வணிகர்களுக்காக, பல்லவர்கள் கோவில் கட்டித் தந்ததாகச் சொல்கிறது. இம்மாதிரியான பரிமாறல்கள் மனித உறவுகளுக்கும், நாடுகளிடையே உறவுக்கும், வணிக வளர்ச்சிக்கும் உதவுகின்றன. மேலும் இம்மாதிரியான குழுக்கள் கி.பி. ஓன்றாம் நூற்றாண்டிலிருந்து 9ம் - நூற்றாண்டு வரை தொடர்ந்து. செயல்பட்டதும் பின் படிப்படியாக குறைந்துள்ளதாகத் தெரிகிறது ஏன் குறைந்தது என்பதற்கு காரணங்கள் இருக்கின்றன, அதில் இன்னம் அதிக ஆய்வுகள் தேவை இவையெல்லாம் பழங்கால இடைக்கால கடல்வழி வாணிகம், தமிழ் வணிகக் குழுக்களும் வணிகப் பெருமக்களின் உயர்பட்ச சாதனையை தெரிவிக்கிறது

கம்போடியாவில் பல வணிகக்குழுக்களின் பெயர்கள் கல்வெட்டுகளில் இடம் பெற்றிருப்பதை பிரெஞ்சு ஆய்வாளர் கோடாஸ் விவரிக்கிறார். வாப், வணிக என்ற இரண்டு பெயர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளது.

9-ம் நூற்றாண்டில் "மணிக்கிராமம்" என்னும் தென்னிந்திய வர்த்தகக் குழு வங்கக்கடலைக் கடந்து எதிர்க் கடற்கரை ஓரத்தில் இயங்கத் தொடங்கிய செய்தியை அங்குள்ள தகுவாபா என்னுமிடத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது. சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமல்ல வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில் - புகழ்பெற்ற வணிகக் குழமான திசை ஆயிரத்து ஐய்நூற்றுவர் எனும் குழுவினர் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், சித்திரமேழிப் பெரியநாட்டவர், மணிகிராமத்தார், அஞ்சுவண்ணத்தார் போன்றோர் அவ்வகையில் முக்கியமானவர்கள். சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்கு பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

'நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் கண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
- (புறநானூறு - பாடல் 66)

இன்றைய பன்னாட்டு நிறுவங்களுக்கு இணையாக தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வணிகத்தில் கொடிகட்டிப் பறந்ததை அறியும் போது, இன்றைய நிலைகுறித்து ஏக்கமும் சோகமும் மிஞ்சுகிறது. எங்கே சென்றது அத்துணை திறமையும், ஆற்றலும்? எனும் பெரு மூச்சுதான் மிஞ்சுகிறது. திறன் மிக்க கடலோடிகள் இப்போது மீனவர் என்றப் பெயரால் இழிவாகப் பார்க்கப்படுகிறார்கள். உள்நாட்டு மீனவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள்தான், கடல்வரை வந்து சேரும் சாத்துகளை, நதிகளின் மூலம் உலகத்தின் பல இடங்களுக்கு கொண்டு சேர்க்கும் இணையற்ற சமூகமாக இருந்திருக்கிறார்கள். இவர்களைப்பற்றி விரிவான புத்தகம் எழுதும் அளவிற்கு தரவுகள் உள்ளது. இப்போதெல்லாம் வணிகக் குழுக்களைப் பற்றியும், அவர்களின் குறியீடு, பெயர் குறித்து கல்வெட்டுகள் தமிழ் நாட்டிலும் அயல் நாட்டிலும் கிடைத்து வருகின்றன .

another interesting phrase that might need additional analysis is ‘khlon jnval vanik’, mentioned in Khmer epigraphy. Coedes deciphers in his Inscriptions du Cambodge vol.3 (inscriptions in Prasat Prav) – the various words that refer to merchants. A few special words decoded by Coedes –

Khlon Jnval – residing vendor/local merchant

Khlon Jnval Vanik – Travelling merchant

Travan Vanik – Merchant Quarter

Vap Champa – Cham merchant

Vap China – China Trader

Pg. 321, Hall, Kenneth R. “Khmer Commercial Development and Foreign Contacts under Sūryavarman I.” Journal of the Economic and Social History of the Orient, vol. 18, no. 3, 1975, pp. 318–336. JSTOR link : www.jstor.org/stable/3632140.

As deciphered by Coedes, ‘Vap’ could refer to a trader from a foreign country, and ‘Vanik’ might indicate a merchant traveling throughout the territory of the Khmer ruler . According to Hall, among the inscriptions found at Vat Baset and Svay Chek (Bantay Prav), ‘Khlon Jnval’ denoting the local merchants in khmer language seem to dominate in Vat Baset, proving it to be an important local communication center; whereas Bantay Prav inscriptions show that ‘khlon jnval vanik’ denoting traveling merchant, occupies a greater place. Hence, Bantay Prav could have been an important center of communication and exchange between the Khmer core and its western provinces, with Lopburi becoming part of Khmer Land after Suryavarman I’s expansion.

Six of seven inscriptions of a commercial nature from these two temples date to Suryavarman’s reign, while the seventh, an inscription from the reign of Harshavarman III (1071), is the latest inscription examined.

- அண்ணாமலை சுகுமாரன் 

 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com