வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday 31 August 2020

பரவரின் ஆபரணங்கள் - 1

2007 ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின்  வெளியிடான  
அணிகலன்கள் அகராதி என்ற நூல்  கூறும் 
பரவரும், பரவ மகளீரும் அணியும் ஆபரணங்கள் பட்டியல் 

1. ஐந்துவிரன் மோதிரம்: பரவ மகளீர் ஒரு விரலுக்கு நான்கைந்து வீதம் ஐந்து விரலிலும் அணியும் மோதிரம். Five kinds of finger rings worn by Parava women on the five fingers (Parav). 

2. கற்பூ: பரவ மகளீரின் காதின் மேற்பகுதியில் அணியும் அணி வகை. (An upper ear ornament of Parava women (Parav). 

3. குச்சுமணி: பரவ மகளீர் அணியும் கழுத்தணி வகை; A neck ornament of Parava women (Parav). 

4. கைக்கட்டுபவளம்: பரவ மகளீர் அணியும் பவளத்தாலான ஒருவகை வளையல்; Cora bracelet won by Parava women (Parav). 

5. கொண்டிக்கடுக்கன்: பரவர்களின் காதணி வகை; A kind of ear rings worn by Paravars (Parav). 

6. கொத்தமல்லி மணி: பரவ மகளீரால் அணியப்படுவதும் கொத்தமல்லி விதை வடிவிலான மணிகளாலானதுமான கழுத்தணி; A necklace worn by Parava women made up of small beds (Parav). 

7. சங்க காப்பு: பரவ மகளீர் கையிலணியும் சங்கு வளை. A bracelet made of conch shells worn by women by Parava caste. (Parav). 

8. சங்கு தாலி: பரவ மகளீர் அணியும் சங்கினாலான தாலி; Tali made of shell, worn by Parava women. (Parav). 

9. சர்வ கடையம்: பரவ இனத்தவர் அணியும் கையணி வகை; A kind of bracelet (Parav). 

10. சலங்கை முன் தாங்கி: பரவ மகளீர் காலின் இரண்டாம் விரலில் அணியும் ஐவர்ண அணிகளுள் ஒன்று. Ring worn on the second toe by women, one of ai-varnam (Parav). 

11. சனி வளையம்: பரவ மகளீர் அணியும் காதணி வகை; A kind of ear ornament worn by Parava women (Parav). 

12. கடைமணி: பரவ மகளீர் கையணி வகை; A bracelet of Parava women (Parav). 

13. சிலுவணி: பரவ மகளீர் அணியும் காதணி வகை; An ear ornament (Parav). 

14. தொந்தி: பரவ மகளீர் கையிலணியும் காப்பு; Bracelet of women in Parava caste (Parav). 

15. நகமுடி: பரவ மகளீர் வலக்காற் பெருவிரலில் அணியும் ஐவர்ண அணியினுள் ஒன்று; A ring worn on the right toe by Parava women, one of ai-varnam (Parav). 

16. நகரமீன்: பரவ மகளீர் தம் காலின் சுண்டுவிரலில் பூணும் ஐவர்ண அணியினுள் ஒன்று; A ring worn on the little toe by Parava women, one of ai-varnam (Parav). 

17. நாகாசுமணி: பரவ மகளீர் அணியும் கழுத்தணி; Necklace worn by parava women (Parav). 

18. பிலாக்காய் கொத்துமணி: பரவ மகளீர் அணியும் கழுத்தணி வகை; A kind of Necklace worn by parava women (Parav). 

19. பிள்ளைத்தாலி: பரவரில் திருமணமாகாத சிறு மகளீர் கழுத்தையொட்டி அணியும் கழுத்தணி வகை; Necklace worn close to the neck by parava girls before marriage (Parav). 

20. பூக்கடுக்கன்: பரவர் அணியும் மலர் வடிவிலான காதணி வகை; A kind of ear ring worn by Parava women, which looks like a flower (Parav). 

21. பூசணிக்காய் கொத்துமணி: பரவ மகளீர் அணியும் பூசணிக்காய் வடிவிலான மணிகளைக் கொண்ட கழுத்தணி வகை; Necklace having pumpkin shaped beats. 

22. மத்தாள மணி: பரவ இனத்தவர் அணியும் ஒரு கழுத்தணி வகை; A necklace of Parava Caste (Parav). 

23. மிளகுப் பட்டுமணி: பரவ மகளீர் சிறப்பாக அணியும் மிளகு போன்ற சிறு மணிகளைக் கோர்த்த மாலை; A necklace made up of beads in the shape of pepper seeds (Parav). 

24. மேற்பணி: பரவ மகளீர் காதணி வகை; An ear ornament worn by parava women (Parav). 

25. கப்பற்கன்மணி: பரவ மகளீர் அணியும் கழுத்தணி வகை; A necklace worn by parava women (Parav). 

26. கரண்டைக்காய் மோதிரம்: பரவ மகளீர் ஒரு விரலுக்கு நான்கைந்து வீதம் அணியும் மோதிரம். A kind of ring worn by Parava women on all the five fingers, four or five such rings being worn on each finger (Parav). 

27. கலசப்படை: பரவ மகளீர் அணியும் காதணி வகை; An ear ornament worn by parava women (Parav). 

28. உச்சிப்பிறை: பரவ மகளீர் தலையில் அணியும் பிறை நிலவு வடிவிலான ஒருவகை அணிகலன்; Crescent shaped head ornament, a common ornament among women of Parava caste (Parav). 

29. உட்கட்டு: பரவ சிறுமியர் முதலியோர் குழந்தைப் பருவத்தில் அணியும் சிறு தாலி; A kind of necklace worn especially by Parava girls (Parav). 

30. எருக்கிலைமணி: பரவ மகளீர் இடுப்பில் அணியும் கழுத்தணி வகை; Necklace worn by Parava women (Parav). 

31. ஏலரிசிமணி: பரவ மகளீர் கழுத்தணிகளுள் ஒன்று; A kind of Necklace worn by parava women (Parav).


Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com