வேம்பாற்றின் பாதுகாவலராக வேம்பார் பரிசுத்த ஆவி ஆலயத்தில் கொலுவீற்றிருக்கும் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் மகோற்சவப் பெருவிழா, வரும் 11 ஆம் தேதி திங்கள்கிழமையன்று மாலை 6.30 மணியளவில் திருக்கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகி, வரும் 21 ஆம் தேதி வியாழக்கிழமையன்று காலை 6.30 மணியளவில் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் திருத்தலத்தில் பெருவிழாத் திருப்பலியுடன் நிறைவடைகிறது.
பெருவிழா காலங்களில் அன்றாடமும் காலை 6.30 மணியளவில் வேம்பார் பரிசுத்த ஆவி ஆலயத்தில் சிறப்பு திருப்பலிகளும் மாலை 6.30 மணியளவில் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் அருளிக்க ஆசீர்வாதமும், திவ்ய நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறும். 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலையில் மாலையாராதனையும், தொடர்ந்து ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் மகோற்சவ சப்பரப் பவனியும் நடைபெறும். மறுநாள் 20 ஆம் தேதி புதன்கிழமை 6.00 மணியளவில் மீண்டும் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் மகோற்சவ சப்பரப் பவனியும் 11.00 மணியளவில் ஆடம்பர பெருவிழாத் திருப்பலியும் நடைபெறும்.
20 ஆம் தேதி புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் திருத்தலத்தில் மாலையாராதனையும், அதனைத் தொடர்ந்து மறுநாள் 21 ஆம் தேதி வியாழக்கிழமையன்று காலை 6.30 மணியளவில் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் திருத்தலத்தில் பெருவிழாத் திருப்பலியும் நடைபெறும். பெருவிழா நிகழ்வுகளில் அனைவரும் திரளாக கலந்து கொண்டு இறையருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.
நேரடி ஒளிப்பரப்பு...
SCV :159
VK :723
APPLE :112
ATHAR :158
TCL ;727
என்ற எண்களில் அற்புதர் இயேசு தொலைக்காட்சியில் காணலாம்.
https://youtube.com/user/arputharyesutv
ஒளிபரப்பு நேரங்கள்:
11.01.2021 மாலை 5.30 மணிக்கு கொடியேற்றம் முதல் இரவு 9.00 வரை
19.01.2021 மாலை 6.00 மாலை ஆராதனை முதல் இரவு 1.00 மணி சப்பரம் சுற்றுபிரகாரம் வரை.
20.01.2021 காலை 11.00 திருவிழா திருப்பலி மதியம் 1.00 மணிவரை.
20.01.2021 மாலை 5.30 திருத்தல மாலை ஆராதனை மற்றும் இரவு கலை நிகழ்ச்சி வரை
அழைப்பில் மகிழும்
நிம்ப வாசிகள், வேம்பாறு.
பாடல் 366
தாழ் சினை மருதம் தகை பெறக் கவினிய
நீர் சூழ் வியன் களம் பொலிய, போர்பு அழித்து,
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி,
கடுங் காற்று எறிய, போகிய துரும்பு உடன்
5
காயல் சிறு தடிக் கண் கெடப் பாய்தலின்,
இரு நீர்ப் பரப்பின் பனித் துறைப் பரதவர்
தீம் பொழி வெள் உப்புச் சிதைதலின், சினைஇ,
கழனி உழவரொடு மாறு எதிர்ந்து, மயங்கி,
இருஞ் சேற்று அள்ளல் எறி செருக் கண்டு,
10
நரை மூதாளர் கை பிணி விடுத்து,
நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன,
நலம் பெறு பணைத் தோள், நல் நுதல் அரிவையொடு,
மணம் கமழ் தண் பொழில் அல்கி, நெருநை
15
நீ தற் பிழைத்தமை அறிந்து,
கலுழ்ந்த கண்ணள், எம் அணங்கு அன்னாளே
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிய இடத்து,தோழி சொல்லியது.
- குடவாயிற் கீரத்தனார்
அகநானூறில் பரதவர்
Dev Anandh Fernando
05:55

நெய்தல் நில மீனவர்களிடம் மீன் பிடிக்கும் போது பாடும் அம்பா பாட்டுஎன்ற வகை பாட்டு உண்டு அவ்வாறே உப்பு தயார் செய்யும் போது உழைப்பின் கடுமை தெரியாமல் இருக்க பாடும் உப்பளப் பாட்டும் உண்டு. அப்பாடலில் ஒன்று பின்வருமாறு ......
கழுத்து அளவு தண்ணிலே
நீந்தத் தெரியாம
நிற்கிறாளே என் தோழி
கங்காணி கோவத்துக் கோ
கடல் தண்ணி ஏத்தத்துக்கோ
நம்மளோட கோபத்துக்கோ
நடந்திட்டாலும் குத்தமில்லே
சம்பங்கி எண்ணெய் தேய்த்து
சாட்டைபோல முடிவளர்த்து
பந்துபோல கொண்டைபோட்டு
பாத்திக்காடு வாரதெப்போ
கருவலம்பூ கட்டை வெட்டி
கைக்கிரண்டு பலகை சேர்த்து
இன்பமான பாத்திக்குள்ளே
தங்க நின்னு வாரேனே
சாப்பிட்டுக்கை கழுவி
சமுக்கத் துண்டு கையிலெடுத்து
வாராங்க எங்க மச்சான்
வரளி மணி உப்பளக்க
இரும்பு இரும்பு திராசிகளாம்
இந்திர மணி தொட்டிகளாம்
சரிபார்த்து திராசி விடும்
தங்க குணம் எங்கமச்சான்
கண்ணாடி கால் ரூவா
காவக் கூலி முக்கால்ரூவா
தூப்புக் கூலி ஒத்தரூவா
துலங்குதையா மச்சாது அளம்
மதுரையிலே குதிரை வாங்கி
மல்லிகைப்பூ லாடம்கட்டி
அடிக்கிறாரையா கங்காணம்
அளத்து மண்ணு தூள் பறக்க
வேலை செய்யும் பாத்திக்காடு
விளையாடும் தட்டு மேடு
கூலி வாங்கும் கிட்டங்கிகளாம்
கூட்டம் போடும் சாயாக் கடைக
காலுலே மிதியடியாம்
கனத்த தொரு கங்காணி
நாவிலொரு சொல்லு வந்தா
நாலாயிரம் பெண் வருவோம்.
நீந்தத் தெரியாம
நிற்கிறாளே என் தோழி
கங்காணி கோவத்துக் கோ
கடல் தண்ணி ஏத்தத்துக்கோ
நம்மளோட கோபத்துக்கோ
நடந்திட்டாலும் குத்தமில்லே
சம்பங்கி எண்ணெய் தேய்த்து
சாட்டைபோல முடிவளர்த்து
பந்துபோல கொண்டைபோட்டு
பாத்திக்காடு வாரதெப்போ
கருவலம்பூ கட்டை வெட்டி
கைக்கிரண்டு பலகை சேர்த்து
இன்பமான பாத்திக்குள்ளே
தங்க நின்னு வாரேனே
சாப்பிட்டுக்கை கழுவி
சமுக்கத் துண்டு கையிலெடுத்து
வாராங்க எங்க மச்சான்
வரளி மணி உப்பளக்க
இரும்பு இரும்பு திராசிகளாம்
இந்திர மணி தொட்டிகளாம்
சரிபார்த்து திராசி விடும்
தங்க குணம் எங்கமச்சான்
கண்ணாடி கால் ரூவா
காவக் கூலி முக்கால்ரூவா
தூப்புக் கூலி ஒத்தரூவா
துலங்குதையா மச்சாது அளம்
மதுரையிலே குதிரை வாங்கி
மல்லிகைப்பூ லாடம்கட்டி
அடிக்கிறாரையா கங்காணம்
அளத்து மண்ணு தூள் பறக்க
வேலை செய்யும் பாத்திக்காடு
விளையாடும் தட்டு மேடு
கூலி வாங்கும் கிட்டங்கிகளாம்
கூட்டம் போடும் சாயாக் கடைக
காலுலே மிதியடியாம்
கனத்த தொரு கங்காணி
நாவிலொரு சொல்லு வந்தா
நாலாயிரம் பெண் வருவோம்.
வட்டார வழக்கு: மச்சாது-உப்பளச் சொந்தக்காரர்
சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
உப்பளப் பாடல்
Dev Anandh Fernando
00:01
