வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 9 January 2021

பெருவிழா அழைப்பிதழ்


வேம்பாற்றின் பாதுகாவலராக வேம்பார் பரிசுத்த ஆவி ஆலயத்தில் கொலுவீற்றிருக்கும் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் மகோற்சவப் பெருவிழா, வரும் 11 ஆம் தேதி திங்கள்கிழமையன்று மாலை 6.30 மணியளவில் திருக்கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகி, வரும் 21 ஆம் தேதி வியாழக்கிழமையன்று காலை 6.30 மணியளவில் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் திருத்தலத்தில் பெருவிழாத் திருப்பலியுடன் நிறைவடைகிறது.

பெருவிழா காலங்களில் அன்றாடமும் காலை 6.30 மணியளவில் வேம்பார் பரிசுத்த ஆவி ஆலயத்தில் சிறப்பு திருப்பலிகளும் மாலை 6.30 மணியளவில் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் அருளிக்க ஆசீர்வாதமும், திவ்ய நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறும். 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலையில் மாலையாராதனையும், தொடர்ந்து ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் மகோற்சவ சப்பரப் பவனியும் நடைபெறும். மறுநாள் 20 ஆம் தேதி புதன்கிழமை 6.00 மணியளவில் மீண்டும் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் மகோற்சவ சப்பரப் பவனியும் 11.00 மணியளவில் ஆடம்பர பெருவிழாத் திருப்பலியும் நடைபெறும்.

20 ஆம் தேதி புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் திருத்தலத்தில் மாலையாராதனையும், அதனைத் தொடர்ந்து  மறுநாள் 21 ஆம் தேதி வியாழக்கிழமையன்று காலை 6.30 மணியளவில் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் திருத்தலத்தில் பெருவிழாத் திருப்பலியும் நடைபெறும். பெருவிழா நிகழ்வுகளில் அனைவரும் திரளாக கலந்து கொண்டு இறையருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.

நேரடி ஒளிப்பரப்பு...

SCV :159
VK :723
APPLE :112
ATHAR :158
TCL ;727

என்ற எண்களில் அற்புதர் இயேசு தொலைக்காட்சியில் காணலாம். 

https://youtube.com/user/arputharyesutv

ஒளிபரப்பு நேரங்கள்: 

11.01.2021 மாலை 5.30 மணிக்கு கொடியேற்றம்  முதல்  இரவு 9.00 வரை

19.01.2021 மாலை 6.00 மாலை ஆராதனை  முதல்  இரவு 1.00  மணி சப்பரம் சுற்றுபிரகாரம்  வரை.

20.01.2021 காலை 11.00 திருவிழா திருப்பலி மதியம் 1.00 மணிவரை.

20.01.2021 மாலை 5.30 திருத்தல மாலை ஆராதனை மற்றும் இரவு கலை நிகழ்ச்சி வரை

அழைப்பில் மகிழும் 
நிம்ப வாசிகள், வேம்பாறு.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com