திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் கோவில் மகாமண்டபத் தெற்குப் படிகட்டுத் தூணில் ஒரு பாடல் கல்வெட்டு உள்ளது. அது,
"ஸ்வஸ்திஸ்ரீ திருக்கிருந்த வில்லா
லுங் கல்லாலுந் தாளாலுந்த
ணியா வெள்ள விருப்பிருந்தச
டையிலே மணிமாறும் உற
கும் வீடளித்த தெண்ணியிரு
க்கிருந்து நின்றேத்துந் திரு
நெல்லி நகரீசற்கி தழிதோம
சத்ருக் கிருந்துவச் சடை மேற்
செய்ய மீனவன்மகுடஞ்சூ
ட்டினானே"
பாண்டிய மன்னர் ஒருவர் மகுடஞ் சூட்டியது பற்றிக் கூறும் பாடல் கல்வெட்டு.
தகவல் : திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகள் - 1.
கொல்லம் பரதவர் குடியேற்றம்
Johan Nieuhof என்னும் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் தளபதி கிபி 1662 ஜனவரி மாதம் கொல்லம் வருகிறார். இவர் தனது குறிப்பில் ரோமாபுரியை தலைமையிடமாக கொண்ட கத்தோலிக்க திருச்சபையின் அங்கத்தினரான ஏசுசபை கொல்லம் நகரின் தெற்கு பகுதியில் கடற்கரையோரம் பரதவர்களுக்கு ஒரு பெரிய கிராமத்தை கட்டியிருந்தனர்.
இங்கு திருவாங்கூர் மகாராஜாவின் ஆளுநர் மற்றும் திருவாங்கூர் மகாராஜாவின் குறுநில மன்னர் வரியத்த பிள்ளை தங்கள் அரண்மனைகளை இங்கு அமைத்து வாழ்ந்து வருகின்றனர். அரசர் வரியத்த பிள்ளை மற்றும் திருவாங்கூர் அரசரின் ஆளுநர் அரண்மனைகள் அமைத்து வாழ்ந்து வந்த இந்த பரதவர் கிராமம் ஒரு மையில் சுற்றளவு கொண்டதாக இருந்தது.
இதனை சுற்றி கோட்டையரண்கள் எழுப்பபட்டு கொத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மீது பெரிய பீரங்கிகளை பொருத்திய உள்ளனர். அரசர் வரியத்த பிள்ளையின் அழைப்பை ஏற்று டச்சு தளபதி Johan Nieuhof அவரை சந்திக்க அவர் அரண்மனைக்கு சென்றார்.
அங்கு அரசர் வரியத்த பிள்ளை அவருக்கு விருந்து அளித்து அவருக்கு தங்க கை சங்கிலி பரிசு அளித்தார். திருவாங்கூர் மகாராஜாவின் ஆளுநர் அவருக்கு பட்டாலான ஆடையை பரிசளித்தார்.
இந்த புதிதாக உருவாக்கப்பட்ட பரதவர் குடியேற்றம் இன்றைய கொல்லம் மாநகரில் மூதாக்கரை ஊராகும்.
Foot Notes:
1.Voyages to East Indies and Brazil by Johan Nieuhof, Pg. 220,232.
2.Jesuits in Malabar by Ferroli, Vol 1,Pg.14, 15.
மூதாக்கரை குடியேற்றம்
Dev Anandh Fernando
04:17
