மேமிகு கலாநிதி இம்மானுவேல் பர்னாந்து ஆண்டகைக்கு வாழ்த்துப்பா
மேமிகு கலாநிதி இம்மானுவேல் பர்னாந்து ஆண்டகை
அவர்களின் பட்டாபிஷேகத்தின் போது
இலங்கை வாழ் நிம்பவாசிகள் பாடிய வாழ்த்துப்பா
பண்ணிசையில் சின்னக்குயில்கள் ஆலாபனை
புண்ணிய பூஜையில் சிரம் தாழ்ந்த ஆராதனை
விண்ணரசாசனம் ஏந்தினீர் செங்கோல்தனை

வெண்மேகமே! ஒரு நிமிடம் நின்ரெமை நனை
வண்ணம் எண்ணம் ஆயர் ஒன்றென நினை
கண்மலர் பின்னர் திருமுழுக்கு சம்பாவனை
மாண்புறு ஜனிப்பினில் தெளித்தாரே ஆசீரினை
பண்டைய வேம்பாற்று பொன்னேட்டில் பெருஞ்சாதனை
அண்ணார்ந்து பார்க்க நமதூர்க்குக் கோபுரமுனை
உண்டோ வேறில்லங்கள் துறவியர் இத்தனை?
நீள் ஆயுள் வேண்டி மண்டியிட்டோம் இறைவனை
மண்ணில் மலர்ந்தோர்க்கு எல்லாம் ஏது இலச்சினை
ஆண்டவன் அர்ச்சிப்பு அவர்க்கே அர்ச்சனை
தொண்டும் இறையன்பும் வற்றாதோர் நீர்ச்சுனை
திண்ணம் வான் ஒன்றே நிம்பைக்கினி கொடுப்பினை
தண்ணென்ற சூரியனே! ஆயரே! வந்தனை - 2