வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 4 February 2016

திருக்கை மீன் குழம்பு


தேவையான பொருட்கள்



தேங்காய் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
திருக்கை மீன் - 250 கிராம்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

இஞ்சி - 2துண்டு(மெல்லியதாக நறுக்கியது)
பூண்டு - 4 பற்கள்(மெல்லியதாக நறுக்கியது)
வெங்காயம் - 1 பெரியது(மெல்லியதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 நீளமாக நறுக்கியது
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் பால் - 1.5 கப்
கெட்டித்தேங்காய் பால் - 1 கப்
தக்காளி - 1நடுத்தர அளவு(நறுக்கியது)



செய்முறை

தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும்

மஞ்சள் தூளை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு நீர் சேர்த்து கலக்கி தனியே வைக்கவும்.

திருக்கை மீனை மேல் தோல் நீக்கி நன்கு சத்தம் செய்து படத்தில் உள்ளது போல சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

சிறிதளவு உப்பு சேர்த்து மீன் முழுவதுமாக படும் படி நன்கு கலந்து சிறிது நேரம் வைக்கவும்

கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடாக்கி அதனுடன் மஞ்சள் தூள் கலந்த நீரை சேர்க்கவும்

10 விநாடிகள் வைத்த பின்பு மீன் துண்டுகள் சேர்த்து, மீனின் இருபுறமும் படும்படி பிரட்டி எடுக்கவும்

பின்பு ஒரு பாத்திரத்தில் தனியே வைக்கவும்

மீதமுள்ள எண்ணெயில் சிறிது நேரம் வதக்கவும், மீதமுள்ள எண்ணெயில் இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கவும்

பின்பு வெங்காயம் கறி வேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்

தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்

வெங்காயம் மெல்லியதாகும் வரை வதக்கவும்

பின்பு தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும்

கொதிக்க தொடங்கியதும் மீன் துண்டுகளை போடவும்

நன்கு கலக்கி வேக வைக்கவும்

மீன் நன்கு வேகும் வரை வேக வைக்கவும்

பின்பு கெட்டித் தேங்காய் பால் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

பின்பு தக்காளி சேர்த்து சிம்மில் வேக வைக்கவும்

பின்பு தீயை அணைக்கவும்பின்பு 10 நிமிடம் மூடி வைக்கவும்

சூட்டில் தக்காளி வெந்து விடும்

இப்போது சுயைான திருக்கை மீன் குழம்பு ரெடி.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com