சங்கரா மீன் மிளகு வறுவல்
தேவையானவை :
- சங்கரா மீன்-1/2 கிலோ
- மிளகு பொடி-2 டீ ஸ்பூன்
- சீரகம் பொடி - 2 டீ ஸ்பூன்
- சோம்பு பொடி -1 டீ ஸ்பூன்
- இஞ்சி பூண்டு -தேவையான அளவு .
- எலுமிச்சை- 1
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:
சுத்தம் செய்து மீனை நன்கு நறுக்கி வைக்கவும். மிளகு, சீரகம், சோம்பு பொடி அனைத்தையும் வறுத்து நைசாக அரைக்கவும். இஞ்சி, பூண்டையும் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் மீனைப் போட்டு, அதில் அரைத்த மிளகு, சீரகம், சோம்பு, இஞ்சி பூண்டு விழுது,எலுமிச்சை சாறு,உப்பு, போட்டு பிசையவும். அதனை அப்படியே ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின்னர், அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் மீன் துண்டங்களில் ஒவ்வொன்றாய் போடவும். மீன் துண்டங்களை ஒவ்வொன்றாய் நகர்த்தி விடவும்.... ஒரு பக்கம் வெந்ததும், அவற்றை மிக மெதுவாக உடையாமல் அப்படியே புரட்டிப் போடவும். இரு பக்கமும் வெந்ததும் மீனை எடுத்து விடவும்.
நன்றி: தினகரன்