கன்னியாகுமரி
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் மாகாண இராணுவ பிரிவு அதிகாரிகளில் ஒருவரான கர்னல் "ஜேம்ஸ் வெல்ஷ்" என்பவர் தனது நூலில் பரதவர்களின் கன்னியாகுமரியை பற்றி குறிப்பிட்டவைகளை இப்பதிவிலே பார்ப்போம்....
(குறிப்பு: கிழக்குலகு, மேற்குலகு என்று இவ்வுலகம் இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தது.)
கிழக்குலகில் சூரிய உதயமாவதையும், அஸ்தமனமாவதையும் கன்னியாகுமரி கடலில் மட்டுமே பார்த்து ரசிக்க முடியும். வெளிநாட்டவர்களால் இந்நகரம் "கேப் காமரின்" என்றும் உள்ளூர் மக்களால் கன்னியாகுமரி என்றும் அழைக்கப்பட்டு வந்தது.
பரதவர்களின் வீடுகளையும், சில வணக்கத்திற்குரிய இந்து சமய கோயில்களையும் மற்றும் ஒரு தேவாலயத்தையும் உள்ளடக்கியதே புகழ்பெற்ற கன்னியாகுமரி நகரம்.
००००००००००००००००००००००००००००००००००००००
கன்னியாகுமரி தேவாலய வரலாறு:-
கன்னியாகுமரியில் முன்பு பரதவர்களுக்கு சொந்தமான மகிழ்ச்சி மாதா குடிசை கோவில் இருந்துள்ளது. இது பதினேழாம் நூற்றாண்டில், அலங்கார மாதா கோயிலாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது.
கோவளத்தை தலைநகராக கொண்டு நாஞ்சில் நாட்டை ஆட்சி புரிந்து வந்த செண்பகராமன் காலிங்கராயன் என்னும் பரதகுல மன்னர் மேற்சொன்ன அலங்கார நாயகி கோவில் கட்ட உதவிகள் பல செய்துள்ளார்.
பின்னாட்களில் அலங்கார மாதா கோவிலை பரதவர்கள் மேலும் விரிவுபடுத்தி பிரமாண்டமாக கட்டியெழுப்பினர். இது இன்று அலங்கார உபகார மாதா கோயில் என்று அழைக்கப்படுகிறது.
----------------------------------------
ஆதாரம்:-
MILITARY REMINISCENCES Vol I By Colonel James Welsh. Pg 217
- UNI