வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday, 23 July 2024

பரதவரின் வணிகம்


ரோமாபுரி, கிரேக்கம், எகிப்து நாடுகளுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்த பரதவர்கள்:

கிபி1774-1789 இடைப்பட்ட ஆண்டுகளில் மலையாள தேசம் வந்திருந்த "பார்த்தலமேயுவின் பவுலீனுஸ்" என்ற ஆஸ்திரிய நாட்டு பயணி தமது நூலில் கிரேக்க, ரோமாபுரி, எகிப்து போன்ற நாடுகளுடன் பரவர்கள் கொண்டிருந்த வர்த்தக தொடர்பை பற்றி விவரிக்கிறார்.

அவற்றுள் சில....

கன்னியாகுமரிக்கு மேற்கே அமைந்துள்ள பரவர்களின் கோவளம் கிரேக்கர்களால் பண்டைய காலம் தொட்டு கொண்டாடப்பட்ட நகரமாகும். கிரேக்கர்கள் பரவர்களின் கோவளத்தை, "கோலிஸ்", "கோலியாஸ்" என்ற பெயர்களில் அழைத்தனர். கிறிஸ்து வாழ்ந்த முதலாம் நூற்றாண்டு முதலே பெருமளவிலான வர்த்தகம் நடைபெறும் நகரமாக பரவர்களின் கோவளம் விளங்கியது.

கோவளத்து பரவர்கள் ரோமாபுரி, கிரேக்கம், எகிப்து நாட்டவர்களுடன் வர்த்தக தொடர்பு கொண்டிருந்தபடியால் பாண்டியநாடு, சோழநாடு, இலங்கை, வங்காளம், பர்மா போன்ற நாடுகளில் உள்ள வணிகர்கள் தங்களுடைய வர்த்தக சாதனங்களை மேற்கண்ட ரோமாபுரி, கிரக்கம், எகிப்து தேசங்களுக்கு ஏற்றுமதி செய்ய முதலில் கோவளம் நகருக்கு அவ்வர்த்தக சாதனங்களை நிலம், நீர் வழியாக அவர்கள் கொண்டு வருதல் அவசியமாக இருந்திருக்கிறது.

ரோமாபுரி, கிரேக்கம், எகிப்து நாட்டு மாலுமிகள் பாதுகாப்பு கருதியும், இயற்கையான விரிகுடா அமைப்பையும் கொண்டுள்ள கோவளம் நகரின் துறைமுகத்திலேயே தான் பெரும்பாலும் தங்களுடைய கப்பல்களை நங்கூரமிடுவது வழக்கம். பாண்டிய நாட்டு வணிகர்கள் பெரும்பாலும் பருத்தி சாதனங்களையே ரோமாபுரி, கிரேக்கம், எகிப்து தேசங்களுக்கு ஏற்றுமதி செய்தனர்.

பாண்டிய நாட்டு வணிகர்கள் அனைத்து வகையான பருத்தி சாதனங்களையும் எருதுகள் மீது ஏற்றிக்கொண்டு கோவளம் நகருக்கு வந்து சேர்வர். இதேபோல் சோழநாடு, இலங்கை, வங்காளம், பர்மா போன்ற நாடுகளில் உள்ள வணிகர்களும் நீர் வழியாகவோ, நிலம் வழியாகவோ தங்களுடைய வர்த்தக சாதனங்களை கோவளம் நகரில் வந்து சேர்ப்பர்.

பின்னர் பரவர்களுக்கு சொந்தமான கோவளம் துறைமுகத்திருந்து ரோமாபுரி, கிரேக்கம், எகிப்து தேசங்களுக்கு செல்லவிருக்கும் கப்பல்களில் பாண்டியநாடு, சோழநாடு, இலங்கை, வங்காளம், பர்மா போன்ற நாடுகளிலிருந்து வந்த வர்த்தக சாதனங்கள் ஏற்றப்படும்.

அதன்பிறகு கோவளம் துறைமுகத்திலிருந்து மேற்சொன்ன நாடுகளின் வர்த்தக சாதனங்களை ஏற்றிக்கொண்டு கப்பல்கள் புறப்பட தொடங்கி செங்கடல் வழியாக பயணித்து எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா துறைமுகத்தில் நங்கூரமிடும். அலெக்சாண்டிரியா துறைமுகத்தில், எகிப்தில் இறக்க வேண்டிய சாதனங்களை இறக்கியபிறகு கப்பல்கள் அங்கிருந்து பயணப்பட தொடங்கி பெர்சிய வளைகுடா வழியாக ஈராக் நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள அல்-பாமா நகரை அடையும்.

யூப்ரடீஸ், டைக்ரிஸ் நதிநீர் போக்குவரத்து:

யூப்ரடீஸ், டைக்ரிஸ் நதிகளில் சரக்கு கப்பல்கள் வந்து செல்லும்படி நீர்வழி போக்குவரத்து அமைக்கப்பட்டிருந்தது. யூப்ரடீஸ், டைக்ரிஸ் நதிகள் துருக்கி நாட்டில் உற்பதியாகி சிரியா நாட்டு வழியாக ஓடி ஈராக் நாட்டில் ஒன்றிணைந்து அந்நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள அல்-பாமா நகரில் பெர்சிய வளைகுடாவில் கடலில் கலக்கிறது.

எகிப்தின் அலெக்சாண்டிரியா துறைமுகத்தில் சரக்குகளை இறக்கிவிட்டு பெர்சிய வளைகுடா வழியாக அல்-பாமா நகர் வரும் கோவளத்து கப்பல்கள் அந்நகரில் இணைக்கப்பட்டுள்ள யூப்ரடீஸ், டைக்ரிஸ் நதிநீர் போக்குவரத்து வழித்தடத்தில் பயணிக்க தொடங்கி அது முடியும் இடமான துருக்கி நாடு வரை செல்லும்.

பின்பு கோவளத்து கப்பல்களில் வந்துள்ள பாண்டியநாடு, சோழநாடு, இலங்கை, வங்காளம், பர்மா போன்ற நாடுகளின் வர்த்தக சாதனங்கள் அங்கு இறக்கப்பட்டு துருக்கியின் துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்படும். இறுதியாக துருக்கி தேசத்து துறைமுகங்களிலிருந்து அந்த வர்த்தக சாதனங்கள் கிரேக்க, ரோமாபூரி நாடுகளுக்கு கொண்டு சென்று சேர்க்கப்படும்.

இதன்மூலம் பரவர்கள் எப்படி வர்த்தக சாதனங்களை எகிப்து, கிரேக்கம், ரோமாபூரி போன்ற நாடுகளுக்கு கப்பல்களில் கொண்டு சேர்த்தனர் என்பதனை ஆதாரபூர்வமாக அறியமுடிகிறது.

______________________________________________________

ஆதாரம்:-

VOYAGE TO EAST INDIES BY FRA PAOLINO DA SAN BARTOLOMEO Pg.56, 57, 120









- UNI
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com