விருத்தாப்பாகள் - 1
அர்ச்சியசிஷ்ட சிலுவை மந்திரம்

சுத்த திருச்சிலுவை தூயடையாளத்தா லெஞ்
சத்துருவை நீக்கி ரட்சைதான் புரியும்
நித்தியனே
எங்கள் பிதாசுதனோடிஸ்பிரீத்து சாந்தின்
மங்கள நாமத்தா லாமென்.
பரமண்டல மந்திர விருத்தம்

உம்முடைய நாமமே அர்ச்சிப்பதாகவே
உனது ராச்சியம் வருகவே
நின்னரிய சித்தம் விண்ணுலகிற் செய்யப்படுவதென்ன
மன்னிலத்துமாகவே
நித்தநித்தமு மெங்களுக்குள்ள வப்பமே நீ
இன்று தந்தருள்வாய்
முன்னறிய வெங்களுடைய
கடனதை நாங்கள் முன்னம் பொறுக்குமது போல
முற்றுமெமததிய கடனைப் பொறுத்தெங்களை
மொய்த்து மேவிய சோதனைதன்னிற்
பிரவேசியாமலே மிகுதீமை தனின்று ரட்சை செய்வாய்
தற்பரனே! சுர்வேசுரா! எங்களைத் தற்காக்க வாமென்.
பிரியத்த மந்திர விருத்தம்
பொற்பிலகுகற் பிரியதத்தத்தினால் பூரணக் கன்னிமரியே
பொன்னுலக சர்வேச னெம்மை ரட்சிக்கவே
புகழ் கர்த்தரும்மிடத்தில், கற்பிலகுமாதர்க்குளாசீர்
வதித்திடுங் கனமுலகு பெற்றவளுநீர்
கருதிருவயிற்றிலே கனிவளாதற்புதங்
காக்கவருள் பெற்ற நீரே!
சொற்பிசகிலா வளருமாச்சியசிஷ்ட மரி
தூயசருவேசனையே தொல்லுலகில்
சொல்லறிய பாவிகளாகிய தொண்டரெங்கள்காகவே
தப்பிலா தும்முடைய அருள்தந்து வேண்டியே
தயைபுரிந்திவ் வேளையும் சாகின்ற மரணநேரத்திலும்
வேண்டியே தான் காக்கவாமனேசு.