வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 6 June 2015

பரதவ குலத்தவர்களுக்கே உரிய கௌரவக் கட்டியங்கள்
பண்டைய காலத்தில் மன்னர் நகர்வலம் மற்றும் அரசவைக்கு வரும் போதும், போகும் போதும் அடுக்கு மொழியில் அமைந்த சில சொற்றொடர்களை உயர்தொனியில் உரக்கக் கூவுவர். இதற்கு கட்டயம் கூறுதல், ஸ்துதி பாடுதல், அல்லது கீர்த்தி கூறுதல் என்பர். உதாரணமாக 'ராஜாதி ராஜ, ராஜ கெம்பீர, ராஜ குலதிலக, ராஜ பராக்கிரம, ராஜ குலோத்துங்க (மன்னன் பெயர்) அரசவைக்கு வருகிறார்" எனக் கூறஇதற்கு ‘பராக், பராக், பராக்’ என்று மக்கள் கூறுவது பதிலாக அமையும். 

அவ்வாறே மன்னனின் வெற்றிகளை, புகழ்ச்சிகளை கல்வெட்டுகளில் பொறிக்கும் போது மெய்கீர்த்தி என்பது முதலாவதாக அமையும். மெய்கீர்த்தி மன்னனின் பெருமையை பறைசாற்றும். மன்னனுக்கு பாடப்படும் ஸ்துதியைக் கொண்டு மன்னனின் வீர தீர செயல்களையும், பெருமையையும் அறியலாம். அதனடிப்படையில் பரதவ கடலோர கிராமங்களில் வெகு காலம் தொட்டு சமீப காலம் வரை திருமண வைபவம், பட்டின பிரவேசம் மற்றும் பற்பல சுற்றுப்பிரகாரங்களில் இத்தகைய கட்டயம் கூறுவது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வாறே நமதூரான வேம்பாற்றில் கூறப்படும் கட்டயங்கள் சில……

1.   ஆனாள் சேயே, அன்னை தஸ்நேவிஸ் மரியே, அமல உற்பவியே, அருள் மழை பொழியும் அம்மா…

2.   திருமந்திர நகர் சேகரம், பாண்டிய நாட்டில் திடமுடன் அரசு புரிகின்ற துரையே….

3.   தென் கஸ்பார் அந்தோணி தெக்குருஸ், வாள் ஏந்தும் மன்னா….

4.   மண்ணால் படகு வைத்து, அந்நாள் இவனுக்கு முப்பூசை பாடி வைத்த துரையே…

5.   பொன்னால் மின் அமைத்துஅந்நாள் இவனுக்கு மாலை அணிவித்த மணியே…

6.   வங்காளம், டில்லி, மதுராபுரி, யாழ்பாணம் சங்கம் மகிழ்ந்த துரையே…

7.   அந்நாளில் அயோத்தி விட்டு, பாதி நாளில் பாண்டி வந்த பங்கமில்லா தங்கமே….

8.   காட்டைக் கலக்கி, கடிநாயை ஏவி விட்டு, கடலுக்கு அரசனான பரதகுல பாண்டியன் திருமுடி சூடி பவனி வருகிறார்….

9.   உத்திரகோச மங்கையில் கல் தேர் ஓட்டிய ஜெயவீரா…

10.  எட்டுகுடையும், பதினாறு கோணமும், எழுகடலும் வெற்றி கொண்ட தீரா…

11.  சிங்கக் கொடி, சேவற்கொடி, அன்னக்கொடி கொண்ட சுமூகா…

12.  முத்து மாலை கழுத்தில் அணிந்து, தங்க மகுடம் தலையில் தரித்து, சங்கையுடன் பவனி வரும் ராஜ கெம்பீரா…

13.  சீரான வாத்தியம் ஒலிக்கின்ற ஒலி திடீர் திடீரென வரு தேவே…

14.  செம்பொன் இங்கீலிஸ் கொம்பன் துன் கபிரியேல் லாசரஸ் மோத்தா வாஸ் புதல்வா…….








Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com