பட்டு (கடல்) வழி

உலகின் முதன் முதலில் பட்டுப்புழுவை வளர்த்துப் பட்டினை உற்பத்தி செய்தவர்கள் சீனர்களே. பட்டு உற்பத்தியின் இரகசியத்தை உலகில் யாருக்கும் இவர்கள் கற்றுத்தரவில்லை. பட்டுநூலை உற்பத்தி செய்து யவன நாடுகளுக்கு இவர்கள் விற்றனர். அவரகள் சென்ற பெருவழி பட்டுபெருவழி என அழைக்கப்பட்டது. இவ்வழி மத்திய ஆசியா வழியாக சென்றது. மேலும் சுமத்ரா, மலேசியா, பர்மா, வங்கம், கலிங்கம், சாதவானநாடு, தமிழ்நாடு, செங்கடல் வழியாக யவனநாட்டிற்கு சீனத்துபட்டினை வணிகம் செய்தனர். இந்த கடல்வழியை பண்டைய நாளில் பட்டு (கடல்) வழி என்று அழைத்தனர். இந்த பட்டு பெருவழியும், பட்டு (கடல்) வழியும் பட்டு வணிகத்திற்கு மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளச் செய்யும் தகவல்களை உள்ளடக்கிய செய்தித் தொடர்பு வழியாகவும் விளங்கின.

குறிப்பாக ஆட்சி முறைகள், ஆட்சி மாற்றம், கலகம், இயற்கை அழிவுகள் ஆகிய செய்திகளை தாங்கி செல்வதாக அமைந்தது. பட்டினப்பாலை (189) 'குணக்கடல் துகிரும்' என்றும், அர்த்தசாஸ்திரம் 'சீனப்பட்டா' என்றும் சீனபட்டினை சிறப்பித்துக் கூறுகிறது. அர்த்தசாஸ்திரத்தில் சீனப்பட்டிற்கும் உள்ளூர் பட்டுக்கும் இடையேயான தரம் பற்றிக் கூறுப்படுகிறது. 'பட்ட' என்ற சொல் பட்டு என்பதன் திரிபாக எடுத்துக் கொண்டால் கி. மு.4 ஆம் நூற்றாண்டிலேயே சீனத்துப்பட்டு தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டது எனக் கூற முடியும். அவ்வாறே கடல் வழியாக யவனதேசத்திற்கு தென்னிந்தியா மூலமே சீனப்பட்டு சென்றிருக்க வேண்டும்.
பட்டு (கடல்) வழி
Dev Anandh Fernando
19:10