வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 30 March 2018

ஆசந்திப் பவனி பாடல் - 2

பாவத்தின் காத்திரமே – ஓசுவாமி எங்கள்
பாவத்தின் காத்திரமே

பூங்காவிலேகிய – நீங்காத சோகத்தால்
தாங்காமல் செந்நீர் வேர்த்ததும் – உள்ளம் நடுங்க
தாங்காமல் செந்நீர் வேர்த்ததும்

பன்னிருசீஷரில் – துன்மன யூதாசு
கன்னத்தில் முத்தம் செய்ததும் – காட்டிக் கொடுத்து
கன்னத்தில் முத்தம் செய்ததும்

பின்னமிலா உமை – அன்னாசு வீட்டினில்
கன்னத்தடிக்க நேர்ந்ததும் – துஷ்டன் கரத்தால்
கன்னத்தடிக்க நேர்ந்ததும்

பற்றில்லாப் பாதகர் – கற்றூணில் சேர்த்துமை
நிஷ்ரேமாயடித்ததும் – செந்நீரொழுக
நிஷ்ரேமாயடித்ததும்

முண்முடி சூட்டவும் – கண் மறைத்தாட்டவும்
எண்ணில்லா நிந்தை சாட்டவும்  - யூதர்கள் கூடி
எண்ணில்லா நிந்தை சாட்டவும்

முரணுற்ற பாதகக் கரணிக்கன் பிலாத்துவால்
மரணத் தீர்வையை ஏற்றதும் – சிலுவை தன்னில்
மரணத் தீர்வையை ஏற்றதும்

நீளச்சிலுவையை -தோளினில் தாங்கியே
தாழ விழுந்தெழுந்ததும் – கால்கள் தள்ளாடி
தாழ விழுந்தெழுந்ததும்

திருத்துகிலானத்தை – உரித்தலால் நாணியே
பெருத்தவமான முற்றதும் – தலை கவிழ்ந்து
பெருத்தவமான முற்றதும்

அருள் கருணாகர – திருக்கரங்கால்களில்
உருகாணிகள் அறைந்ததும்  - சிலுவை மீது
உருகாணிகள் அறைந்ததும்

குருசினில் தொங்கியே – திருவுரைபோதித்து
இறுதி மரண முற்றதும் – உடல் துடித்து
இறுதி மரண முற்றதும்

தேவனே நீர் சிந்தும் – திருஇரத்தததாலெங்கள்
பாவத்தைப் போக்கி இரட்சியும் – தயை கூர்ந்தெங்கள்
பாவத்தைப் போக்கி இரட்சியும்

எந்தையே நின்திரு – ஐந்து காயங்களை
சிந்தித்து தோத்திரம் செய்குவோம் – அனுதினமும்
சிந்தித்து தோத்திரம் செய்குவோம்

- சித்திரக்கவி செ. முத்தையா ரொட்ரிகோ, வேம்பாறு. 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com