வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 10 March 2018

பொன்மொழிகள் சில .....
> கடலிலே ஏற்றம் போட்ட கதை

> கடலிலே துரும்பு கிடந்தாலும், மன திலே ஒரு சொல் கிடவாது

> கடலிலே பிறக்கும் உப்புக்கும் மலையிலே விளைகிற நார்த்தங்காய்க்கும் தொந்தம்

> கடலிலே போட்டு சாக்கடையிலே தேடுகிறதா?

> கடலிலிட்ட புளி போல

> கடலில் கையைக் கழுவி விடுகிறதா?

 > கடலை அடைக்க கரை போடலாமா?

> கடல் உப்பையும் மலை நெல்லையும் கலந்தாற்போல

> கடல் திடலாகும், திடல் கடலாகும்

> கடல் நீர் நிறைந்து என்ன? காஞ்சிரை பழுத்து என்ன?

>கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?

> கடல் பெருகினால் கரையும் பெருகுமா?

> கடல் மீனுக்கு நீச்சுப் பழக வேண்டுமா?

> கடல் மீனுக்கு நுளையன் இட்டது சட்டம்

> கடலில் கரைத்த பெருங்காயம் போல

> கடலில் கையைக் கழுவி விடுகிறதா?

> கடலுக்கு கரை போடுவார் உண்டா?

> கடலை அடைக்க கரை போடலாமா?

> கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை

> கடல் வற்றில் கருவாடு தின்னலாமென்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு

> கடலைத் தூர்த்தாவது காரியத்தை முடிக்க வேண்டும்

> ஏலேல சிங்கனின் பொருள் ஏழுகடல் போனாலும் திரும்பும்
>கலக்கினும் தண்கடல் சேறு ஆகாதே—வெற்றிவேற்கை

> கடலாற்றாக் காம நோய், குறள் 1175

> பிறவிப் பெருங்கடல், குறள் 10

> நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் - குறள் 17

> கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடாநிலத்து --குறள் 496

> கடலன்ன காமம் - குறள் 1137

> கப்பல் ஏற்றிக் கடலில் கவிழ்த்தது போல

> கப்பல் அடிப்பாரத்துக்கு, கடற்கரை மண்ணுக்குத் தவுகெட்டாற்போல
நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெந்தலைப் புணரிக் குட கடற் குளிக்கும் (புறம்.2)
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com