வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 21 June 2018

எட்டுதொகையில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்
எட்டுதொகையில் பரதவர் பற்றிய சான்றுகள்

நற்றிணை 

நெய்தல் 207


கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென
நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி
வந்தனர் பெயர்வர்கொல் தாமே அல்கல்
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ
கோட் சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின்
முடி முதிர் #பரதவர் மட மொழிக் குறுமகள்
வலையும் தூண்டிலும் பற்றி பெருங் கால்
திரை எழு பௌவம் முன்னிய
கொலை வெஞ் சிறாஅர் பாற்பட்டனளே
நொதுமலர் வரைவுழி தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.


நற்றிணை

நெய்தல். தாயங்கண்னனார்


நெய்தல் 219

கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்
பழ நலம் இழந்து பசலை பாய
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும் என்னதூஉம்
புலவேன் வாழி தோழி சிறு கால்
அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல்
பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் #பரதவர்
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர்
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும்
கானல்அம் பெருந் துறைச் சேர்ப்பன்
தானே யானே புணர்ந்தமாறே
வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய
தலைமகள் தோழிக்குச் சொல்லியது.


நற்றிணை

நெய்தல். குன்றியனார்


நெய்தல் 207

ஞான்ற ஞாயிறு குடமலை மறைய
மான்ற மாலை மகிழ்ந்த #பரதவர்
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்
காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின்
ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு நெய்தல்
புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும்
மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே முன்கை
வார் கோல் எல் வளை உடைய வாங்கி
முயங்கு எனக் கலுழ்ந்த இவ் ஊர்
எற்று ஆவதுகொல் யாம் மற்றொன்று செயினே
தோழி தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.



நற்றிணை

நெய்தல். மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்


நெய்தல் 303

ஒலி அவிந்து அடங்கி யாமம்
நள்ளென
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத்
துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும்
துஞ்சாக் கண்ணள் துயர் அடச் சாஅய்
நம்வயின் வருந்தும் நன்னுதல் என்பது
உண்டுகொல் வாழி தோழி தெண் கடல்
வன் கைப் #பரதவர் இட்ட செங் கோல்
கொடு முடி அவ் வலை பரியப் போக்கி
கடு முரண் எறி சுறா வழங்கும்
நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தானே
வேட்கை தாங்ககில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள்
சொல்லியது சிறைப்புறத்தான் என்பது மலிந்ததூஉம் ஆம்



நற்றிணை

நெய்தல். மிளை கிழான் நல் வேட்டனார்


நெய்தல் 349

கடுந் தேர் ஏறியும் காலின் சென்றும்
கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும்
கைதை தூக்கியும் நெய்தல் குற்றும்
புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு
வைகலும் இனையம் ஆகவும் செய் தார்ப்
பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை
ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத
பெரும் புண்ணுறுநர்க்குப் பேஎய் போல
பின்னிலை முனியா நம்வயின்
என் என நினையும்கொல் #பரதவர் மகளே
தலைமகன் தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.


நற்றிணை

நெய்தல். உலோச்சனார்


நெய்தல் - 372

அழிதக்கன்றே தோழி கழி சேர்பு
கானற் பெண்ணைத் தேனுடை அழி பழம்
வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு
அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென
கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு
அன்ன வெண் மணற்று அகவயின் வேட்ட
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து இனிது நோக்கி
அன்னை தந்த அலங்கல் வான் கோடு
உலைந்தாங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்கு
இனையல் என்னும் என்ப மனை இருந்து
இருங் கழி துழவும் பனித் தலைப் #பரதவர்
திண் திமில் விளக்கம் எண்ணும்
கண்டல் வேலிக் கழி நல் ஊரே
மேல் இற்செறிப்பான் அறிந்து ஆற்றாளாகி நின்ற
தலைமகள் ஆற்ற வேண்டி உலகியல் மேல் வைத்துச்
சிறைப்புறமாகச் செறியார் எனச் சொல்லியது.



நற்றிணை

நெய்தல். மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்


நெய்தல் 388

அம்ம வாழி தோழி நன்னுதற்கு
யாங்கு ஆகின்றுகொல் பசப்பே நோன் புரிக்
கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித்
திண் திமில் #பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ
நடு நாள் வேட்டம் போகி வைகறைக்
கடல் மீன் தந்து கானற் குவைஇ
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து
தேம் கமழ் தேறல் கிளையடு மாந்தி
பெரிய மகிழும் துறைவன் எம்
சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே
வரைவு நீட ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகன்
சிறைப்புறமாகச் சொல்லியது மனையுள் வேறுபடாது
ஆற்றினாய் என்றாற்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com