வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 27 June 2018

வேம்பாற்றின் பரதகுல சேர்ப்பன்

வேம்பார் விருத்தம்

வேம்பார் பற்றி இந்த பாடல் கூறுவது கடற்கரை சேர்ப்பன் ஊராக இருந்தாலும் பொறையாறு போன்று விவசாயம் செழிப்புடன் இருந்தது என்றும்

பெரியன் என்பவனைப்போல் வள்ளல் சேர்ப்பன் எனவும், சிறந்த கள்ளு கிடைத்ததாகவும் அங்கே இருந்த தாழை மரங்கள் வேளா கொம்பை நினைவு படுத்தியதாகவும் கூறுகிறது.

நற்றிணை 131

ஆடிய தொழிலும், அல்கிய பொழிலும்,

உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு

ஊடலும் உடையமோ-உயர் மணற் சேர்ப்ப!

திரை முதிர் அரைய தடந் தாள் தாழைச்


5

சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசிய,

இறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும்,

நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன்,

கள் கமழ், பொறையாறு அன்ன என்

நல் தோள் நெகிழ மறத்தல், நுமக்கே?


உரை

உயர் மணல் சேர்ப்ப - உயர்ந்த மணற் பரப்பினையுடைய நெய்தனிலத் தலைவனே!; திரை முதிர் அரைய தடந் தாள் தாழை சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய - திரைத்தல் முதிர்ந்த அரயையுடையவாய வளைந்த அடி மரத்தையுடைய தாழையினது சுறாமீன் கொம்பு போன்ற இருபுறமும் முள்ளையுடைய இலை முறிந்து சாயும்படி; இறவு ஆர் குருகு இனம் இறைகொள இருக்கும் - இறாமீனை இரையாகத் தின்ற நாரையின் கூட்டம் தங்குதல் கொள்ள வீற்றிருக்கும்; நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன் - கள்ளுணவையுண்டலான் மகிழ்ந்திருத்தலையுடைய நல்ல தேரையுடைய பெரிய னென்பானது; கள் கமழ் பொறையாறு அன்ன என் நல்தோள் - கள்ளின் மணங் கமழும் 'பொறையாறு' என்னும் ஊர் போன்ற என்னுடைய நல்ல தோள்கள்; நெகிழ மறத்தல் நுமக்கு - நெகிழும்படி நீயிர் எம்மை மறப்பதற்கு யாம் நும்மையின்றி; ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும் உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு ஊடலும் உடையமோ - வேறு விளையாட்டு அயர்தற்குத் தொழிலையும் நும்மையின்றி வேறு பிரிந்து சென்று தங்கி இருப்பதற்குச் சோலையையும் நும்மை நினைக்கலாகாத வருந்துகின்ற நெஞ்சினையும் நும்பால் ஊடுதலையுமுடையமோ?; அங்ஙனமாயின் நீயிர் மறந்திருப்பீர், இல்லையே; ஆதலின் நீயிர் மறவாமையால் நுமது உள்ளத்தே உள்ளேமன்றோ? அதனால் இவள் தோள் நெகிழ்ந்து வேறுபட்டில; அவ் வேறுபடாமையை யான் ஆற்றினேன் என்பது மிகையன்றோ

பொறையாறு பற்றிய குறிப்பு

பொறையாறு சங்ககால ஊர்களில் ஒன்று. இக்காலத்தில் தரங்கம்பாடியை அடுத்து உள்ள பொறையாறு என்னும் ஊர்தான் அது. சங்ககாலத்தில் பெரியன் என்னும் பெயர் கொண்ட மன்னன் இங்கு இருந்துகொண்டு ஆண்டுவந்தான். இவன் சிறந்த கொடைவள்ளல்.

இவ்வூரில் குருகு இனக் கொக்குகள் மிகுதி.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com