வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 24 June 2018

பரதவ சிறுவர்கள்
பரதவ சிறுவர்கள் பற்றிய கட்டியம் 

நற்றினை 111 நற்றாய் கூற்று

அத்த இருப்பைப் பூவின் அன்ன
துய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்
வரி வலைப் பரதவர் கரு வினைச் சிறாஅர்
மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார்
வெந் திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு
திமில் மேற்கொண்டு திரைச் சுரம் நீந்தி
வாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும்
பெருங் கழிப் பாக்கம் கல்லென
வருமே தோழி கொண்கன் தேரே
விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைவிக்கு உரைத்தது

பரதவ சிறுவர்கள் மரத்தை எடுத்து கொண்டு ஆழியை கடந்து சென்று வாள் வாய் சுறாவை அதாவது வேளாவை கொண்டு வந்து மணற்மேட்டில் போடக்கூடிய தகுதிபடைத்தவர்கள் என கட்டியம் கூறுகிறது இந்த பாடல்.

அதேபோல் இந்த பாடல் பெருங்கழிப்பாக்கம் வாழ்ந்த பரதவர் சதுப்பு நிலத்தில் கிடைக்கும் இறால் மீனை பிடிக்க வரிவலை என்ற வலையை பயன் படுத்தியதையும் கூறுகிறது ஆக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பரதவர்களிடம் வெவ்வேறு மீனுக்கு வேறு வேறு வலை உபயோகிக்கும் முறை இருந்தது என்பதை நிறுபிக்கிறது. பரதகுல வர்க்கம் கொங்கணர் அந்த ஊரின் தலைவனக இருந்ததையும் அவர் தேரில் வருவதையும் கூறுகிறது.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com