
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புலிமான் கோம்பை என்னும் ஊரில் கிடைத்த நடுகல் ஒன்றில் “வேள் ஊர் அவ்வன் பதவன்” என்று உள்ளது. வேள் ஊரைச் சேர்ந்த அவ்வன் பதவன் என்பவருக்கு எடுத்த நடுகல். அந்த கல்வெட்டில் இருந்த பதவன் என்று சொல்லுக்கு பொருள் பாதை காட்டுபவன். நிலத்து வழி போறதுக்கு, கடல் வழி போறதுக்கு இன்னும் புதிதாகவும் பாதை காட்டுபவனுக்குப் பெயர் தான் இந்த பதவன்.

வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு கடல் வழியைத் தேடி வரும் போது சரியான வழியைத் தெரியாது தவிர்க்கும் போது கடல் வழியே வந்த கப்பலில் மாலுமி கணக்கன் என்கிற ஒரு தமிழ் மாலுமி அங்கு இருந்தார். அவர்தான் வாஸ்கோடகாமாவிற்கு சரியான வழியைக் காட்டியதுடன் அவரை அழைத்துக் கொண்டு கள்ளிக் கோட்டையில் கொண்டு வந்து விட்டார். ஆக வாஸ்கோடகாமா இந்தியா வந்ததே பதவன் என்ற தமிழ் மாலுமியின் வழிக்காட்டுதலால்தான்.
உலகின் 40 துறைமுகங்களில் தமிழ் மாலுமிகள், பதவன்கள், கப்பலை சரிப்பார்ப்பவர்கள் இருந்தார்கள். இவற்றை எல்லாம் தான் தேடிக் கண்டறிந்தாக கூறுகிறார் ஆய்வாளர் மதிவாணன் அவர்கள்.