கி.பி. 1658ல் டச்சுக்காரர்க்கு எதிராக போர்சுகீசியர்க்கு
படையுதவி செய்த பரதவர்கள்.
இன்று அமெரிக்காவை போல் அன்று போர்சுகல் உலக வல்லரசு நாடாக திகழ்ந்தது. கி.பி. 1532 - 1658 வரை பரதவர் நாடு போர்சுகல் மன்னருடன் கூட்டணியில் இருந்தது. இதே போல் சில சிங்களவர் அரசுகளும் போர்ச்சுகல் மன்னருடன் கூட்டணியில் இருந்தது. தென்னகத்தில் கால்பதித்த போர்ச்சுகீசியர் சிறிய படையே வைத்திருந்தனர். தங்களுடைய போர்களில் பரதவர், சிங்களவர் கூட்டணி படைகளையே பெரும்பாலும் ஈடுபடுத்தினர்.
கி.பி. 1560 - 1658 வரை மன்னார் தீவு போர்சுகல் மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்தது. கி.பி. 1619 - 1658 வரை யாழ்ப்பாணம் போர்சுகல் மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த இரண்டு நாடுகளையும் கைப்பற்ற புதிய கடலாதிக்க சக்தியாக உருவெடுத்து கொண்டிருந்த டச்சு குடியரசு திட்டமிட்டிருந்தது. போர்சுகீசியர் மன்னார், யாழ்ப்பாண கோட்டைகளை டச்சுக்காரரின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க தங்களுடன் கூட்டணியில் இருந்த பரதவர், சிங்களவரிடமிருந்து படைத் துணை கேட்டு பெற்று கொண்டனர்.
கி.பி. 1657 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், டச்சு கிழக்கிந்திய கம்பெனி தங்களது கணக்கெழுத்தாளர் "அட்ரியன் வான் டெர் மார்க்ட்" என்பவருக்கு மன்னார், யாழ்ப்பாணத்தில் போர்ச்சுகீசியரின் படை பலத்தை குறித்த தகவல்களை சேகரித்துவர உத்தரவிட்டது. "அட்ரியன் வான் டெர் மார்க்ட்" டச்சு தலைமையகத்துக்கு அளித்த தகவலின்படி....
"போர்சுகிசியரின் மன்னார், யாழ்ப்பாண கோட்டைகளில் பரதவர், சிங்களவர் படைகளும் இடம்பெற்றிருந்தன" என்று குறிப்பிடுகிறார். மேலும் "அட்ரியன் வான் டெர் மார்க்ட்" கூறுகையில்..
"மன்னார் கோட்டையில் போர்ச்சுகீசியர் சார்பில் மொத்தம் 800 வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளர் என்றும், யாழ்ப்பாண கோட்டையில் இன்னும் அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளர்" என்று குறிப்பிடுகிறார்.
கி.பி. 1658ல் டச்சுக்காரர்கள் போர்ச்சுகல் வசமிருந்த மன்னார், யாழ்ப்பாணத்தை கைப்பற்ற அங்கு படையெடுத்து வந்தனர். டச்சுக்காரரின் இப்படையெடுப்பை பற்றிய முழு விவரமும் அதே கி.பி. 1658 ஆம் ஆண்டை சேர்ந்த கோவா போர்சுகீசியரின் ஆவணங்களில் பதிவாகியுள்ளது.
டச்சுக்காரர்கள் பெரும்படையுடன் வந்து கொண்டிருந்ததை கேள்வியுற்ற சிங்களவர் படைகள் போர்சுகீசியரை விட்டு விலகி சென்றன. ஆனால் பரதவர் படைகளோ போர்சுகிசியர்க்கு ஆதரவாக போரில் களமிறங்கினர். டச்சுக்காரர்கள் முதலில் மன்னார் கோட்டையை தாக்கினர். போர்ச்சுகீசியர் பரதவர் படைகளின் துணைக் கொண்டு டச்சுக்காரர்களின் தாக்குதல்களை முறியடித்து அவர்களை பின்வாங்க செய்தனர்.
அங்கிருந்து பின்வாங்கிய டச்சுக்காரர்கள் மீண்டும் பெரும்படை திரட்டி நான்கு பெரிய போர் கப்பல், எட்டு சிறிய போர் கப்பல்களுடன் மன்னாரில் வந்திறங்கினர். இதன்பிறகு நடைபெற்ற போரில் மன்னார் கோட்டை டச்சுக்காரர்களிடம் வீழ்ந்தது. போர்சுகீசியர் மன்னாரில் இருந்து பரதவர் படைகளுடன் யாழ்ப்பாண கோட்டைக்கு பின்வாங்கினர்.
டச்சுக்காரர்கள் மன்னார் தீவை கைப்பற்றிய பிறகு மேலும் முன்னேறி சென்று யாழ்ப்பாண கோட்டையை பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று தாக்கினர். இங்கு போர்ச்சுகீசிய பரதவர் படைக்கும் - டச்சுக்காரர்க்கு இடையே கடுமையான யுத்தம் தொடங்கியது. நான்கு மாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த யுத்தத்தின் முடிவில் யாழ்ப்பாண கோட்டை ஜூன் 24 ஆம் தேதி அன்று டச்சுக்காரர்களிடம் வீழ்ந்தது.
வெற்றியோ தோல்வியோ தங்களை நம்பி வந்தவர்களுக்காக கடைசிவரை போர் புரிந்து மடிந்தனர் பரதவர்கள்.
----------------------------------------
ஆதாரம்:-
1. Encounters on the Opposite Coast by Markus Vink. Pg 355
2. Historical Archives of Goa. A. Manuscripts. HAG, MDR, Codice 35, Livro 26A, (1658)
- UNI
VOC Port during the early 1970s.
Dev Anandh Fernando
18:09

மதராஸ் மெயில் பத்திரிகை, ஜனவரி மாதம் 6 ஆம் தேதி, புதன்கிழமை, 1926.
21 வது கத்தோலிக்க ஜாதி தலைவமோராக திருவாளர் (Signor) டோம் மனுவல் அனஸ்தாசியஸ் மோத்தா கொரேரா கோமஸ் பதவியேற்பு விழா இன்று தூத்துக்குடியில் நடைபெறுகிறது.
Source: MADRAS MAIL WEDNESDAY,JANUARY 6 ,1926.
அதாவது பரதர்களின் பரம்பரை தலைவர். இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து ஏராளமான பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் விழாவிற்கு வருகை தருவதற்கான அழைப்பை ஏற்று, சுமார் ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும். இந்த விருந்தினர்களின் தங்கும் வசதி மற்றும் இதர வசதிகளுக்கான விரிவான ஏற்பாடுகள் ஜாதித்தலைமை வரவேற்புக் குழுவின் கைகளில் உள்ளன.
1534 ஆம் ஆண்டு முதல் ஜாதி தலைவமோராக நியமிக்கப்பட்டதன் பேரில், போர்ச்சுகல் மன்னர் மூன்றாம் ஜான், இளவரசர் விக்ரம பாண்டியன் என்ற டான் ஜுவான் டி குரூஸ் என்பவருக்கு வழங்கப்பட்ட தங்கச் சங்கிலி மற்றும் சிலுவை ஆகியவற்றுக்கு ஆசீர்வாதத்தின் மதச் சடங்குகள் போர்த்துகீசிய காலத்தில் 1582 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சென்ஹோரா தாஸ் நேவியா என்னும் வரலாற்று தேவாலயத்தில் இன்று பாடப்படும் புனிதமான திருப்பலி வெகுஜனத்திற்குப் பிறகு உடனடியாக நிறைவேற்றப்படும்.
மயிலாப்பூர் மறைமாவட்டத்தின் நிர்வாகியான திரு. மான்சிக்னர் டெக்ஸீரா தவிர்க்க முடியாத சூழ்நிலையில், முக்கியமான அலுவல் நிமித்தமாக கல்கத்தாவுக்குச் சென்றுவிட்டார். முதல் பரதர் பாதிரியாரும், மதராஸ் அனுமான தேவாலயத்தின் பொறுப்பாளருமான Rev.Father L.X பெர்னாண்டஸ், ஜாதி தலைவமோரின் மாமாவும், செயின்ட் தாமஸ் மவுண்ட் பங்கு தந்தையுமான Rev. Father மோத்தா வாஸ் அவர்களின் உதவியோடு, மீன்வளக் கடற்கரை (கூட்டப்புளி-வேம்பார்) மற்றும் கேரளாவில் உள்ள பல்வேறு மறைமாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பதினைந்துக்கும் மேற்பட்ட பரதர் மற்றும் பரதர் அல்லாத பாதிரியார்கள் தேவாலயத்தில் பணிபுரிவார்கள்.
ஜாதி தலைவமோர் பதவியேற்றதை கவுரவிக்கும் வகையில் அவரது தலையில் சிறப்பு அணிகலன் சூட்டும் விழாவும் தேவாலயத்தில் நடைபெறும். தேவாலய விழா முடிந்ததும், தன் முன்னோர்களான பண்டையக் பாண்டிய மன்னர்களிடம் இருந்து வந்த வழக்கப்படி ஜாதி தலைவமோர் சமூகத்தின் உபகரணங்களுடன், மேற்கு மற்றும் கிழக்கு இசையுடன், ஒரு அற்புதமான யானை தந்தத்தால் செய்யப்பட்டிருந்த பல்லக்கில் நகரின் தெற்குப் பகுதி வழியாகவும், பின்னர் மாலையில் அதே அரச கோலத்தில் நகரின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்குச் எடுத்துச் செல்லப்படும்போது, பரதர்களின் ஒரு பெரிய ஊர்வலம் அவருடன் செல்வார்கள்.
தற்காலம் மற்றும் நிலைமைகளுக்கு ஏற்றவாறு ஜாதித்தலைமை அணிவகுத்து, இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள அனைத்து பரதர் கிராமங்கள் அல்லது கிராமங்களின் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் 27 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழு மற்றும் அரசியலமைப்பை உள்ளடக்கிய இந்த நிறுவனம் பழைய அரசியலமைப்பு முறையில் மறுவடிவமைக்கப்பட்டுள்ளது.
பரதர் மகாஜன சங்கத்தின் பொது நிர்வாகக் குழுவால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பணிக்கான விதிகள், ஜாதி தலைவமோரால் முதல் நொடியில் அங்கீகரிக்கப்பட்டு, அச்சிடப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.
Source: MADRAS MAIL WEDNESDAY,JANUARY 6 ,1926.
- UNI
21 வது பாண்டியபதியின் பட்டாபிஷேகம்
Dev Anandh Fernando
07:10

ஏழுகடற்றுறை பரவர்களின் வாழ்வியல் மற்றும் தொழில்:
பரவர் நாடு இரண்டு உட்பிரிவுகளை கொண்டிருந்தது. வடக்கு பகுதி ஏழுகடற்றுறை என்றும், தென்பகுதி மேல்நாடு என்றும் அழைக்கப்பட்டு வந்தது.
மணப்பாடு, ஆலந்தலை, வீரபாண்டியன் பட்டினம், புன்னைகாயல், தூத்துக்குடி, வைப்பார், வேம்பார் மற்றும் அதனை சார்ந்துள்ள பகுதிகளுமே ஏழுகடற்றுறை.
"ஜான் நியூஹாஃப்" என்ற டச்சு பயணி தமது நூலில், ஏழுகடற்றுறை பரவர்களின் வாழ்வியல் மற்றும் தொழிலை பற்றி சில குறிப்புகளை தருகிறார், அவற்றை நாம் இப்பதவியில் விரிவாக காண்போம்.....
மக்களின் தோற்றம்:
மிகவும் வலிமையான உடலமைப்பும், கருமை நிறம் கொண்டவர்களாக இருந்தனர்.
மனைவி, பிள்ளைகள்:
ஆண்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனைவியை தவிர இரண்டு அல்லது மூன்று பெண்களை வைத்து கொள்ளுதல் வழக்கம், இவர்கள் மூலமாக ஆண்கள் ஒவ்வொருவரும் பதினாறிலிருந்து பதினெட்டு பிள்ளைகளை பெற்று கொள்கின்றனர்.
ஆடை அலங்காரம்:
ஆண்கள் இரண்டு வெண்ணிற பஞ்சு துணியை அணிகின்றனர். ஒன்று இடுப்புக்கு கீழும் மற்றொன்று தலைமீதும். தலைமீது தாங்கள் அணிந்திருந்த வெண்ணிற பஞ்சு துணியை "ரோமரே" என்று அழைத்தனர்.
பெண்கள் உள்ளூரில் இருக்கும் போது வண்ணங்கள் பூசப்பட்ட "காலிகோ" துணியை அணிந்து கொள்கின்றனர். "காலிகோ" என்பது ஒருவகை பஞ்சு துணி. பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது வண்ணங்கள் பூசப்பட்ட "காலிகோ" துணியுடன் தங்கத்தாலான மோதிரங்கள், காப்புகள் அணிந்து கொண்டு செல்வது வழக்கம்.
(பரதகுல பெண்கள் அணிந்த வண்ணம் பூசப்பட்ட "காலிகோ" துணி பற்றி தெரிந்து கொள்ள இப்பதவியில் இணைத்துள்ள முதல் படத்தை பார்க்கவும்)
உணவு:
சோறு, இறைச்சி பிரதான உணவாக உட்கொள்கின்றனர். தண்ணீர் தேவைக்கு, கடற்கரையில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்நாட்டில் சென்று கொண்டுவர வேண்டியிருந்தது.
தொழில்:
நெசவு, கடல் வாணிபம், முத்து குளித்தல், மீன் வேட்டை போன்ற தொழில்களில் பரதகுல மக்கள் ஈடுபட்டு வந்தனர். ஏழுகடற்றுறையில் இயங்கி வந்த பரதகுல முதலாளிகளுக்கு சொந்தமான துணி தொழிற்சாலைகளில், "லினன்" மற்றும் "காலிகோ" துணி நெய்யும் பரதகுல நெசவாளர்கள் ஏராளம்.
"காலிகோ" துணிகளில் வண்ணம் பூசுவதற்கென்றே பரவர்கள் பலர் பரதகுல முதலாளிகளால் பணியமர்த்தப்பட்டனர். வண்ணம் பூசப்பட்ட "காலிகோ" துணிகளை பரதகுல முதலாளிகள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். "காலிகோ" துணி வியாபாரத்தில் பரதகுல முதலாளிகள் பெருஞ்செல்வம் ஈட்டுகின்றனர்.
०००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००
Foot Notes:
Voyages to East Indies and Brazil by John Nieuhoff Pg. 258
- UNI
ஏழுகடற்றுறையின் வாழ்வியல்
Dev Anandh Fernando
07:37

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சங்கு குளித்துறை
பிரிட்டிஷ் இந்தியாவின் முத்து மற்றும் சங்கு குளித்துறையின் மேலதிகாரியாக பணியாற்றிய ஜேம்ஸ் ஹார்னெல் கிபி 1914 இல் மதராஸ் மாகாண அரசுக்கு சமர்ப்பித்த குறிப்பில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சங்கு குளித்துறை என்ற தலைப்பில் சங்கு படுக்கைகள் அமைந்துள்ள வடக்கே விழிஞம் முதல் தெற்கே குளச்சல் வரை உள்ள இடைப்பட்ட கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலான சங்கு குளிக்கும் மீனவர்கள் பரவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கடலிலிருந்து எடுக்கப்படும் சங்குகளை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடற்கரை கிராமங்களில் வசிக்கும் சிறு வணிகர்கள் சங்கு குளிக்கும் மீனவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கி வங்காள மாகாணத்தின் கல்கத்தா மாநகரத்துக்கு ஏற்றுமதி செய்யும் வணிகர்களிடம் விற்று விடுகின்றனர்.
________________________
Foot Notes:-
THE SACRED CHANK OF INDIA: /
A MONOGRAPH OF THE INDIAN CONCH
BY
JAMES HORNELL, Fs,
Superintendent of Pearl and Chank Fisheries to the Government
of Madras.
ILLUSTRATED WITH 18 PLATES. Pg 36,37.
சங்கு குளித்துறை
Dev Anandh Fernando
07:35

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாதிரியார் எல். ரான்குயட் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு பரவர் நாட்டின் கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூத்தன்குழி, உவரி, கூடுதாழை, சின்னதாழை வழியே பயணித்து கடைசியாக புன்னைக்காயலுக்கு வந்து சேர்ந்தார்.
இந்த பிரான்ஸ் நாடு பாதிரியார் கிபி 1838 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி புன்னைக்காயலில் இருந்து எழுதிய கடிதத்தில் 'பரவர் நாடு மற்ற உள்நாட்டு பகுதிகளை போல் அல்லாமல் ஐரோப்பாவை போல் காட்சியளிக்கிறது என்கிறார்.
----------------------------------------
La Mission Du Madure Vol 1 by French Jesuit priest J. Bertrand. Pg 58-9.
- UNI
இந்தியாவில் ஐரோப்பா
Dev Anandh Fernando
08:11

இன்பக்கவிராயர், பரவர் குல பெற்றோர்களுக்கு மைந்தனாக பரவர் தேசத்தின் ஏழு கடற்றுறை நாட்டின் மணப்பாடு நகரை பூர்வீகமாகக் கொண்டவராவார். இவரது இயற்பெயர் சேவியர் ஹென்ரிக் லியாம் [XAVIER HENRIC LEA'M] ஆகும். தூத்துக்குடியில் அரசு செலுத்தி வரும் ஏழு கடற்றுறை நாட்டின் அதிபதி 'டான்' கபிரியேல் வாஸ் கோமஸ் என்னும் கோமானின் அங்கிகாரம் இன்பக்கவிக்கு கிடைக்கப்பெறாமல் இருந்தது.
ஒருமுறை இவர் எட்டையபுரம் சமஸ்தான ராஜாவை சந்திக்க சென்றிருந்தார். ராஜாவும் அவர் அமைச்சரும் இருக்கையில் அமர்ந்திருந்தனர். ஆனால் இவருக்கோ இருக்கை வழங்கப்படவில்லை. மன்னர் திருமுன் நின்று கொண்டு இவ்வாறு அவரை போற்றிப்பாடுகிறார் இன்பக்கவி.......
கங்கைகுலத்திற் கனகமணியாயுதித்த
சங்கரக்குமார தயாநிதியே-
உங்களுடை சம்பிரதிக்கந்தவிடந்
தங்களுக்குமிந்தவிட
மின்பகவிக்கெங்கேயிடம்.
எனப்பாடினார். இதனால் மகிழ்ச்சியடைந்த மன்னர் இன்பக்கவிக் இருக்க இடமளித்து பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். இதன் பிற்பாடு இன்பக்கவி பிற மாவட்டங்களுக்கு பயணித்து அங்கு வாழ்ந்து வரும் அரசர்களையும், பிரபுக்களையும் போற்றிப்பாடி பரிசுகள் பலப்பெற்று சென்றவிடமெல்லாம் எல்லோராலும் நன்கு நடத்தப்பட்டார்.
தஞ்சாவூரை ஆண்டு வரும் மராத்திய மன்னர் சர்போஜியின் அமைச்சர் தட்டோஜீ என்பவர் இன்பக்கவிக்கு பல்லக்கு அளித்து சிறப்பித்தார். உடல்நலக்குறைவு காரணமாக பாதிப்படைந்த இன்பக்கவி தூத்துக்குடிக்கு திரும்பியப்பின் மதுக்கடிமையானார். இவர் தனது வாழ்வின் இறுதி நாட்களில் இவ்வாறு பாடுகிறார்....
ஏழு அப்பங்கள் மூலம் நாலாயிரம் பேர் தங்கள் பசியை ஆற்றவில்லையா?
தண்ணீர் திராட்சை ரசமாகவில்லையா, நான்கு நாள் மறித்திருந்த மனிதன் உயிர்த் தெழவில்லையா?
உமது ஆடையையின் விளிம்பை தொட்ட பெண்ணின் பிணி நீங்வில்லையா? புயல் உமது வார்த்தைக்கு கீழ்படியவில்லையா?
கடல்மீனின் வாயில் வெள்ளி காணப்பட வில்லையா? ஊமை பேசவில்லையா? குருடர் பார்க்கவில்லையா? நொண்டி நேரே நடக்கவில்லையா?
உமக்கிதுவென கடினமான ஒன்றா!
ஓ இயேசுவே, இஸ்ரவேலின் கன்னி ஈன்ற தூய மைந்தனே!
சிக்கலில் சிக்கி, பல சிரமங்களுக்கு ஆளான உமதடியான் ஆகிய எனக்குதவ.
(இன்பக்கவிராயர் தன் சொந்த ஊரான மணப்பாடு நகரில் கிபி 1835 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.)
----------------------------------------
Foot Notes:-
THE TAMIL PLUTARCH,
CONTAINING A SUMMARY ACCOUNT
OF THE LIVES OF THE POETS AND POETESSES
Of Southern India and Ceylonfrom the earliest to the present times, with' select
specimens of their compositions.
—
BY
SIMON CASIE CHITTY, ESQUIRE.
AUTHOR OF THE CEYLON GAZETTEERS.
Pg.26,27,28,29
- UNI
இன்பக்கவிராயர்
Dev Anandh Fernando
08:03
