வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday, 16 May 2024

ஏழுகடற்றுறையின் வாழ்வியல்


ஏழுகடற்றுறை பரவர்களின் வாழ்வியல் மற்றும் தொழில்:
 
பரவர் நாடு இரண்டு உட்பிரிவுகளை கொண்டிருந்தது. வடக்கு பகுதி ஏழுகடற்றுறை என்றும், தென்பகுதி மேல்நாடு என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

மணப்பாடு, ஆலந்தலை, வீரபாண்டியன் பட்டினம், புன்னைகாயல், தூத்துக்குடி, வைப்பார், வேம்பார் மற்றும் அதனை சார்ந்துள்ள பகுதிகளுமே ஏழுகடற்றுறை.

"ஜான் நியூஹாஃப்" என்ற டச்சு பயணி தமது நூலில், ஏழுகடற்றுறை பரவர்களின் வாழ்வியல் மற்றும் தொழிலை பற்றி சில குறிப்புகளை தருகிறார், அவற்றை நாம் இப்பதவியில் விரிவாக காண்போம்.....

மக்களின் தோற்றம்:
மிகவும் வலிமையான உடலமைப்பும், கருமை நிறம் கொண்டவர்களாக இருந்தனர்.

மனைவி, பிள்ளைகள்:
ஆண்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனைவியை தவிர இரண்டு அல்லது மூன்று பெண்களை வைத்து கொள்ளுதல் வழக்கம், இவர்கள் மூலமாக ஆண்கள் ஒவ்வொருவரும் பதினாறிலிருந்து பதினெட்டு பிள்ளைகளை பெற்று கொள்கின்றனர்.

ஆடை அலங்காரம்:
ஆண்கள் இரண்டு வெண்ணிற பஞ்சு துணியை அணிகின்றனர். ஒன்று இடுப்புக்கு கீழும் மற்றொன்று தலைமீதும். தலைமீது தாங்கள் அணிந்திருந்த வெண்ணிற பஞ்சு துணியை "ரோமரே" என்று அழைத்தனர்.

பெண்கள் உள்ளூரில் இருக்கும் போது வண்ணங்கள் பூசப்பட்ட "காலிகோ" துணியை அணிந்து கொள்கின்றனர். "காலிகோ" என்பது ஒருவகை பஞ்சு துணி. பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது வண்ணங்கள் பூசப்பட்ட "காலிகோ" துணியுடன் தங்கத்தாலான மோதிரங்கள், காப்புகள் அணிந்து கொண்டு செல்வது வழக்கம்.

(பரதகுல பெண்கள் அணிந்த வண்ணம் பூசப்பட்ட "காலிகோ" துணி பற்றி தெரிந்து கொள்ள இப்பதவியில் இணைத்துள்ள முதல் படத்தை பார்க்கவும்)

உணவு:
சோறு, இறைச்சி பிரதான உணவாக உட்கொள்கின்றனர். தண்ணீர் தேவைக்கு, கடற்கரையில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்நாட்டில் சென்று கொண்டுவர வேண்டியிருந்தது.

தொழில்:
நெசவு, கடல் வாணிபம், முத்து குளித்தல், மீன் வேட்டை போன்ற தொழில்களில் பரதகுல மக்கள் ஈடுபட்டு வந்தனர். ஏழுகடற்றுறையில் இயங்கி வந்த பரதகுல முதலாளிகளுக்கு சொந்தமான துணி தொழிற்சாலைகளில், "லினன்" மற்றும் "காலிகோ" துணி நெய்யும் பரதகுல நெசவாளர்கள் ஏராளம்.

"காலிகோ" துணிகளில் வண்ணம் பூசுவதற்கென்றே பரவர்கள் பலர் பரதகுல முதலாளிகளால் பணியமர்த்தப்பட்டனர். வண்ணம் பூசப்பட்ட "காலிகோ" துணிகளை பரதகுல முதலாளிகள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். "காலிகோ" துணி வியாபாரத்தில் பரதகுல முதலாளிகள் பெருஞ்செல்வம் ஈட்டுகின்றனர்.

०००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००

Foot Notes:
Voyages to East Indies and Brazil by John Nieuhoff Pg. 258






- UNI


Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com