இன்பக்கவிராயர்
இன்பக்கவிராயர், பரவர் குல பெற்றோர்களுக்கு மைந்தனாக பரவர் தேசத்தின் ஏழு கடற்றுறை நாட்டின் மணப்பாடு நகரை பூர்வீகமாகக் கொண்டவராவார். இவரது இயற்பெயர் சேவியர் ஹென்ரிக் லியாம் [XAVIER HENRIC LEA'M] ஆகும். தூத்துக்குடியில் அரசு செலுத்தி வரும் ஏழு கடற்றுறை நாட்டின் அதிபதி 'டான்' கபிரியேல் வாஸ் கோமஸ் என்னும் கோமானின் அங்கிகாரம் இன்பக்கவிக்கு கிடைக்கப்பெறாமல் இருந்தது.
ஒருமுறை இவர் எட்டையபுரம் சமஸ்தான ராஜாவை சந்திக்க சென்றிருந்தார். ராஜாவும் அவர் அமைச்சரும் இருக்கையில் அமர்ந்திருந்தனர். ஆனால் இவருக்கோ இருக்கை வழங்கப்படவில்லை. மன்னர் திருமுன் நின்று கொண்டு இவ்வாறு அவரை போற்றிப்பாடுகிறார் இன்பக்கவி.......
கங்கைகுலத்திற் கனகமணியாயுதித்த
சங்கரக்குமார தயாநிதியே-
உங்களுடை சம்பிரதிக்கந்தவிடந்
தங்களுக்குமிந்தவிட
மின்பகவிக்கெங்கேயிடம்.
எனப்பாடினார். இதனால் மகிழ்ச்சியடைந்த மன்னர் இன்பக்கவிக் இருக்க இடமளித்து பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். இதன் பிற்பாடு இன்பக்கவி பிற மாவட்டங்களுக்கு பயணித்து அங்கு வாழ்ந்து வரும் அரசர்களையும், பிரபுக்களையும் போற்றிப்பாடி பரிசுகள் பலப்பெற்று சென்றவிடமெல்லாம் எல்லோராலும் நன்கு நடத்தப்பட்டார்.
தஞ்சாவூரை ஆண்டு வரும் மராத்திய மன்னர் சர்போஜியின் அமைச்சர் தட்டோஜீ என்பவர் இன்பக்கவிக்கு பல்லக்கு அளித்து சிறப்பித்தார். உடல்நலக்குறைவு காரணமாக பாதிப்படைந்த இன்பக்கவி தூத்துக்குடிக்கு திரும்பியப்பின் மதுக்கடிமையானார். இவர் தனது வாழ்வின் இறுதி நாட்களில் இவ்வாறு பாடுகிறார்....
ஏழு அப்பங்கள் மூலம் நாலாயிரம் பேர் தங்கள் பசியை ஆற்றவில்லையா?
தண்ணீர் திராட்சை ரசமாகவில்லையா, நான்கு நாள் மறித்திருந்த மனிதன் உயிர்த் தெழவில்லையா?
உமது ஆடையையின் விளிம்பை தொட்ட பெண்ணின் பிணி நீங்வில்லையா? புயல் உமது வார்த்தைக்கு கீழ்படியவில்லையா?
கடல்மீனின் வாயில் வெள்ளி காணப்பட வில்லையா? ஊமை பேசவில்லையா? குருடர் பார்க்கவில்லையா? நொண்டி நேரே நடக்கவில்லையா?
உமக்கிதுவென கடினமான ஒன்றா!
ஓ இயேசுவே, இஸ்ரவேலின் கன்னி ஈன்ற தூய மைந்தனே!
சிக்கலில் சிக்கி, பல சிரமங்களுக்கு ஆளான உமதடியான் ஆகிய எனக்குதவ.
(இன்பக்கவிராயர் தன் சொந்த ஊரான மணப்பாடு நகரில் கிபி 1835 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.)
----------------------------------------
Foot Notes:-
THE TAMIL PLUTARCH,
CONTAINING A SUMMARY ACCOUNT
OF THE LIVES OF THE POETS AND POETESSES
Of Southern India and Ceylonfrom the earliest to the present times, with' select
specimens of their compositions.
—
BY
SIMON CASIE CHITTY, ESQUIRE.
AUTHOR OF THE CEYLON GAZETTEERS.
Pg.26,27,28,29
- UNI