வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday, 14 January 2025

குருகுலராயன் அடப்பன்



14 ஆம் நூற்றாண்டில் காங்கேயன் புலவர் எழுதிய வலைவீசி புராணம்(84) பரதகுலத்தவர்கள் குரு வம்சத்தை உருவாக்கிய விவரத்தை நமக்கு தருகிறது.

சேந்தன் திவாகரம் உட்பட அனைத்து நிகண்டுகளும் பரதர்களை குருகுலத்தரசன் என்றே குறிக்கிறது..

17 நூற்றாண்டில் நாஞ்சி வளநாடு கோவை குளத்தை ஆட்சி செய்த பரதகுல மன்னர் செண்பகராமன் காலிங்கராயனை பாட்டுடைத் நாயகனாக கொண்டு பாடப்பட்ட தமிழ் சிற்றிலக்கிய வகையில் ஒன்றான செண்பகராமன் பள்ளு அம்மன்னரை குருகுலபரதசாதியில் அவதரித்தவன் என்றே குறிக்கிறது.

கிபி 1841 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரான்ஸ் நாட்டு ஏசுசபை பாதிரியார் பெர்டினாண்ட் மதுரையிலிருந்து எழுதிய கடிதத்தில்..'அடப்பன்'என்பவர்கள் பரதகுல தலைவர்களாக குறிக்கப்படுகின்றனர்(Joseph Bertrand,la Mission du Madure Vol III. Pg 279)
 
Dr. ஜே.பி. றட்லர் தமது அகராதியில் 'அடப்பன்' என்னும் பதத்திற்கு-பரவர்களுக்குள் வழங்கும் மகிமைக்குரிய ஒரு தானிகன் பெயர் என்று குறிப்பிடுகிறார்.

17 நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் சிற்றிலக்கிய வகையில் ஒன்றான 'செண்பகராமன் பள்ளு' பரதகுல தலைவர்கள் 'அடப்பன்' என்று பெயர் தாங்கியிருந்ததை பதிவு செய்கிறது. 
(எ.கா) அணைஞ்சுகுட்டி அடப்பன்(28)

கல்வெட்டு:-
மாவட்டம்/வட்டம்/ஊர்:காஞ்சிபுரம்
அரசு:தெலுங்கு சோழர்
அரசன்: கண்டகோபாலன்
வரலாற்று ஆண்டு:கிபி 1252
இடம்:அருளாளப்பெருமாள் கோயில் இரண்டாம் திருச்சுற்று மேற்குச் சுவர்.
கல்வெட்டு குறிப்புரை:புலியூர்கோட்டத்து வேளிச்சேரி என்னும் சீலசிகாமணிச் சதுர்வேதிமங்கலத்துக் காணியுடைய 'அடைப்பன் காட்டியகையன்' என்னும் தொண்டை மண்டலக் குருகுலராயன் என்பவன் திருவத்தியூர் அருளாளப் பெருமாளுக்கு திருநந்தாவிளக்கு ஒன்று எரிக்க 11 எருமைகளை கோயில் தானத்தாரிடம் வழங்கியுள்ளான்.


















Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com