மீனவர்கோன் / பாண்டியன்
பாண்டியர்கள் பரதவர் என்பதால் மீனவன் என்று அழைக்கப்படவில்லை மாறாக மீன் கொடியை உடையவர்கள் என்பதால் தான் மீனவன் என்று அழைக்கப்பட்டனர் என சிலர் கூறி வருகின்றனர். இவர்கள் கூறியது உண்மை இல்லை என்றாலும் கூட நாம் இவர்களின் கூற்றுப்படியே போவோம்.
முதலில் இரட்டைமீன் சின்னம் எந்த தமிழ் இனக்குழுவின் அடையாளமாக இருந்தது என்பதை அறிய முற்படுதல் வேண்டும். சங்ககாலத்துக்கு முற்பட்ட சிந்து சமவெளியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் திங்கள் குலத்தவராகவும், இரட்டைமீன் சின்னத்தை தங்களது கொடியில் கொண்டவராகவும், மீனவர் என்று பெயர்பெற்றவராகவும் குறிக்கப்பட்டவர்கள் தமிழர்களுள் பரவர்கள் மட்டுமே.
பரதவர்களை குறித்ததான நான் மேற்கூறிய சிந்து சமவெளி கல்வெட்டு செய்திகளை ஸ்பெயின் நாட்டை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், வரலாற்றாசிரியருமான "ஹென்றி ஹெராஸ்" அவர்கள் தமது "மோகஞ்சதாரோ மக்களும், நாடும்" என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.
"ஆதிகாலம் தொட்டு மீன்கொடி உடைய மீனவர்களான பரவர்களின் அரசனே மீன்கொடி உடைய மீனவர்கோன் பாண்டியன்" என்பதனை ஆதாரபூர்வமாக நாம் அறியமுடிகிறது. எப்படி பார்த்தாலும் மீனவர், மீனவர்கோன் என்பது பரதவர்களையும் அவர்களின் அரசனான பாண்டியனையுமே குறிக்கும் என்பது தெளிவு.
००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००
Henry Heras, Mohenjo daro, the people and land Pg.715-16