சங்கு குளித்தல்
உலக புகழ்பெற்ற பரதவர்களின் சங்கு குளித்தல்:
பரதவர்களின் முத்து குளித்தல் பற்றி பேசும் நாம் அவர்கள் செய்த உலக புகழ்பெற்ற சங்கு குளித்தலை பற்றி பேச மறந்து விடுகிறோம். பரதவர்கள் செய்த சங்கு குளித்தலை பற்றி ஆதாரத்துடன் காண்போம் .
தெற்கே வீரபாண்டியன் பட்டினம் முதல் வடக்கே நல்லதண்ணி தீவு வரையேயுள்ள இடைப்பட்ட பகுதியில் கடலில் சங்கு படுக்கைகள் அமைந்துள்ளது. சங்கு படுக்கைகள் கடலில் முத்து படுக்கைக்கும், பவளப்பாறைகளுக்கும் நடுவே அமைந்துள்ளது.
அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் தொடக்கம் வரை சங்கு குளித்தலுக்கு ஏற்ற காலமாகும். இக்காலத்தில் பரதவர்கள் கடலுக்குள் மூழ்கி அடியில் ஆழமாக சென்று சங்குகளை எடுத்து மேலே வருவர். பரதவர்கள் தாங்கள் கடலில் மூழ்கி எடுத்த சங்குகளை பரதகுல வணிகர்களுக்கு விற்று விடுவர்.
பரதகுல வணிகர்கள் சங்குகளை பெரும்பாலும் வங்காளதேசத்துக்கே ஏற்றுமதி செய்வர். பரதவர்கள் கடலில் மூழ்கி எடுத்த சங்குகளை கொண்டு வங்காளதேசத்தில் பெண்கள் அணிவதற்கான காப்புகள் செய்யப்பட்டது. இதுபோக வங்காளதேசத்தில் சங்குகள் கோவிலில் எக்காளம் ஊதவும் பயன்படுத்தப்பட்டது.
"ஜார்ஜ் ஷுர்ஹாம்மர்" என்ற உலக புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரும், ஏசுசபை குருவானவரும் தமது "புனித பிரான்சிஸ் சேவியர் வாழ்க்கை வரலாறு" நூலில் இவற்றைப் பதிவு செய்துள்ளார்.
உலகில் வேறெங்கும் கிடைக்காத பால் சங்கு என்றழைக்க ப்படும் Turbinella pyrum வகை சங்குகள் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி யில் மட்டும் தான் கிடைக்கும். இந்த வகை சங்கு தமிழர்களின் வாழ்வில் இரண்டற கலந்தவை. வீடுகளின் நிலைக்கதவுகளிலும், வீட்டு முற்றங்களிலும் பால் சங்கை பதித்திருப்பதை காணலாம். வீட்டு வளர்ப்பு பிராணிகளின் கழுத்திலும் கட்டியிருப்பார்கள்.
குழந்தைகளுக்கு பாலூட்ட இந்த சங்குதான். சங்க காலங்களில் சுப நிகழ்வுகளில் இந்த சங்கொலி முழங்கப்படும். இன்றும் நாட்டு கோட்டை செட்டியார் மங்கள நிகழ்வுகளில் சங்கொலி இசைக்கப் படும். பெருங்கோவில்களில் மூலவரின் அபிஷேகங்களில், பூசையின் போதும் சங்கொலி முழங்கும்
சமீபகாலங்களில் மரண நிகழ்வுகளில் சங்கொலிக்கப் படுகிறது. இவைகள் எல்லாமே வெண்ணிற பால் சங்குகள் தான். தெய்வங்களும் இந்த பால் சங்கு ஊதுவதை அவதானிக்கலாம். இந்த பால் சங்குகளை அறுத்து தான் வளையல்கள் செய்வார்கள். சங்ககால பரதவர் பெண்களும் இந்த சங்கு வளையல் அணிவர் அதனால் தான் நக்கீரர் சங்கறுப்பது எங்கள் குலம் என்றார்.
இந்த வெண் சங்கு வளையல்கள் திருமணமான சுமங்கலி பெண்களின் முக்கிய அடையாளம் வங்காள பெண்களுக்கும், சங்ககால தமிழ் குடிகளுக்கும். இவை அனைத்தும் இடது பக்க வாய்களை கொண்டிருக்கும். இதில் பத்து லட்சத்தில் ஒன்று மரபணு பிறழ்ச்சியின் காரணமாக வலது பக்கம் வாய் கொண்டிருக்கும். அது தான் புகழ் பெற்ற வலம்புரி சங்கு.
குருச்சேத்திரப் போரில் கௌரவ, பாண்டவ மஹா ரதர்கள்(War generals) ஆளுக்கொரு சங்கை வைத்திருந்தார்கள் TRUMPET ஆக உபயோகித்து போரை வழிநடத்த. அந்த ஒவ்வொருவரின் சங்கிற்கும் தனித் தனி பெயர்கள் உண்டு. உதாரணத்திற்கு அர்ஜூனன் சங்கிற்கு பெயர் பாஞ்ச ஜைன்யம்.
வலம்புரியின் இன்றைய விலை ஒரு கிராம் எடை ₹15000 முதல் 25000 வரை.
००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००
ஆதாரம்:-
St Francis Xavier his life his times Vol 2 Pg. 303-4