வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 12 May 2015

சிலுவை பந்த வெண்பா
சித்திரக்கவி:

தமிழ் மொழியில் கவிதையை செய்யுள், பா, யாப்பு, கவி, பாடல், எனப் பலவாறு வழங்குவர். இக்கவி வகைகள் ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி மற்றும் வித்தாரக்கவி என நான்கு உள்ளதாகக் காளமேகப்புலவர்  கூறுகிறார். தலைப்பைக் கொடுத்து உடனடியாகப் பாடுவது ஆசுகவி, செய்யுள் மரபினை அடிப்படையாகக் கொண்டு பாடுவது மதுரகவி, கவியை சித்திரத்தில் வைத்துப் புனைந்து பாடுவது சித்திரக்கவி, நன்கு பொருள் விளங்குமாறு விளக்கி, விரிவாகப் பாடுவது வித்தாரக்கவி ஆகும்.

இதில் சித்திரக்கவியில் சுமார் இருபது வகைகள் உள்ளன. தமிழ் செய்யுள் யாப்பில் மிகக்கடினமாகதாக அமையும் ஆசுகவி, சிலேடைகவி, பங்கி போன்றவற்றில் சித்திரக்கவியும் மிக முக்கிய இடத்தினைப் பெறுகிறது. கடுமையான சொல்லாட்சியுடைய வார்த்தைகளை தேர்ந்து எடுக்கப்படும் சித்திரத்திற்கு ஏற்ப கவி அமைக்க வேண்டும். தமிழ் இலக்கிய இலக்கணத்தில் கற்றுத் தேர்ந்த அறிஞர்கள் மட்டுமே இதனைப் படைக்க முடியும். இதற்கு ‘மிறைகவி’ எனும் பெயரும் உள்ளது.

சித்திரக்கவியில் சிறப்பு வாய்ந்தது ‘மாலை மாற்று’ என்னும் திருப்பதிகம் ஆகும். இது ஆங்கிலத்தில் Palindrome என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக ‘விகடகவி’ 'தேருவருதே’ போன்ற சொல்லாடல்களில் முதலிலிருந்து எழுதினாலும், இறுதியிலிருந்து எழுதினாலும் ஒரே சொல்லாகவே அமையும். இத்தகைய வழிமுறையைக் கையாண்டு செய்யுள் அமைப்பது மிகும் எளிதானதன்று. 

மிகவும் அற்புதமான இந்த மாலை மாற்று முறையில் சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ அவர்கள் சிலுவை பந்த வெண்பா முறையில் கீழ்கண்டவாறு அமைத்துள்ளார்கள்.


 


Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com