மரபுக்கீதம் - TRADITIONAL ANTHEM
மாமணமேவு மதுரமா நிம்பை
மதிகுல பரதவர் மகிழ்பதியே
வாமமார் நகராம் வளமிகு நகராம்
வயப்படு மாணவர் (பரதவர்) உறை நகராம்
நேம ஊக்கம் உயர்வே நிலைபெறு திரவியமே
சேமமும் பல செல்வமும் அளி ஜெயமொழி விருதாமே
சீர்பெறும் கலைஞர் சித்திரக் கவிஞர்
பக்த குருமார் ஈன்ற பழநாடே
தியாகசீலர் வாழ்ந்ததோர் வன்னரும் பொன்னாடே
தியாகமும் நயதிண்யமும் வளர்தென்னவர் புகழ்நாடே
எந்தையர் ஞானம் எளிதினில் காண
வந்தனன் சவியேர்முனி அறிவீர்
வேதஞானபோதம் முன்பே முகிலவன் அளித்தனனே
ஆதலால் அவன் கோதிலாத் திருக்காவலும் ஜெகமீதே
