வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 19 November 2015

உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள்
உலகில் முதல் கப்பல் படையை நிறுவி,தெற்காசியா வரை சோழ கொடியை நாட்ட வழிவகுத்த தமிழ் மன்னன் இராஜஇராஜசோழனும் அவன் மகன் ராசேந்திர சோழனும் ஆவான்.

இவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய படகு பூம்புகார் கடற்கரையிலிருந்து 19 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்டு, சிதைந்த அக்கப்பலின் அடிப்படையில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம்உருவாக்கிய மாதிரிவடிவம் திருநெல்வேலி அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது 

“தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்” என கடலோடி என்னும் நூலின் ஆசிரியர் நரசய்யா தெரிவிக்கிறார்.

உலகில் கப்பலை கண்டுபிடித்தவர்கள் மட்டுமன்றி கப்பல் கட்டுமானத்தில் சிறந்து விளங்கியவர்களும் தமிழர்களே என்று கூறப்படுகிறது. கப்பல் கட்டுமானத்தில் வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர். காற்றின் திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியுள்ளார்கள்

இதே போல் தென்பசிபிக்மா கடலில், ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கப்பலை ஆராய்ந்து பார்த்ததில் அது 2500 வருடங்களுக்கும் மேல் பழமையானது என்றும், இது தமிழருடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது “தமிழ் மணி” என்ற பெரிலேயே நியூஸிலாந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பல்லவர் காலத்து கப்பல் பொறித்த நாணயம் கண்டுபிடிக்கப்பட்டது.  ஆமைகள் கடலில் பாயும் நீரோட்டத்தின் உதவியுடன் பல்லாயிரம் கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மை தெரிந்தது. இப்படி பயணம் செய்யும் ஆமைகளை செயற்கைக் கோள் உதவியுடன் பின்தொடர்ந்தபோது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன. ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும், மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருக்கிறது” என்று தெரிவித்தனர்.

உதாரணம்:

  • தமிழா————-மியான்மர்.
  • சபா சந்தகன்—–மலேசியா
  • ஊழன், சோழவன், வான்கரை, ஒட்டன்கரை,
  • ஊரு——–ஆஸ்திரேலியா
  • கடாலன்————ஸ்பெயின்
  • நான்மாடல் குமரி———-பசிபிக் கடல்
  • சோழா,தமிழி,பாஸ்——–மெக்ஸிகோ
  • திங்வெளிர்——————–ஐஸ்லாந்து
  • கோமுட்டி———————-ஆப்பிரிக்கா.

இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்து அதன் மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.

புழக்கத்தில் இருக்கும் “NAVY” என்ற ஆங்கில வார்த்தை “நாவாய்” என்ற நம் கப்பல் படையின் பெயரில் இருந்து வந்த வார்த்தையே ஆகும்!! இவ்வளவு பெருமைகளை கொண்ட நம் வரலாறு எத்தனை “தமிழர்களுக்கு” தெரிந்திருக்கும் ? நமக்கே இது தெரியாத போது உலகத்திற்கு எப்படி தெரியப்படுத்த முடியும்?

கப்பல், கடல் கலங்கள் வகைகள்:

  • கட்டுமரம்
  • நாவாய்
  • தோணி
  • வத்தை
  • வள்ளம்
  • மிதவை
  • ஓடம்
  • தெப்பம்
  • டிங்கி
  • பட்டுவா
  • வங்கம்
  • அம்பி – பயணிகள் சென்றுவர பயன்படுத்தப் பட்ட நீருர்தி
  • திமில் – பெரும்பாலும் மீன்பிடிக்கப் பயன்பட்டது.

லெப்டினன்ட் வாக்கர் எனும் ஆங்கிலேயர் கி.பி.1811ல் நமது கப்பல்களைக் கண்டு பின்வருமாறு வியந்து கூறினார்…… 

பிரிடிஷ்காரர்கள் கட்டிய கப்பலை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மராமத்து செய்தே தீர வேண்டும்…… ஆனால் தமிழர்கள் கட்டிய கப்பலுக்கு 50 ஆண்டானாலும் பழுது பார்க்கும் அவசியம் இல்லை.
ஆங்கிலேயர் வருவதற்கு முன்பிருந்தே சிறிதுசிறிதாக ஒதுங்கிய நம் கப்பற்கலைஆங்கிலேயர் வந்தபின் அவர்களின் சுரண்டலில் இறுதியாகச் சமாதியில் இடப்பட்டுவிட்டது.

உலகின் சிறப்பு வாய்ந்த இந்த ஆயிரம் வருட அற்புதமான கப்பல் படையை பற்றிய சில அற்புதமான தகவல்கள்

இந்த கப்பல்களானது போர்க்கருவிகளை கொண்டு செல்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டது .இந்த கப்பல் படை நிறைய குழுக்களை கொண்டிருந்தது.

அனைத்து குழுவிற்கும் தலைவர் “அரசர்”.

* இதில் “கனம்” என்பது தான் தலைமைப் பிரிவாக செயல்பட்டது (நிறைய போர் வீரர்களை கொண்ட குழு)
இதை நிர்வகிப்பவர் “கனாதிபதி”.

* “கன்னி” (போர் நேர / சிறப்பு பணிக்கான குழுமுதல்), இதை நிர்வகிப்பவர் உயரிய “கலபதி”, (“கன்னி” என்பது தமிழில் “பொறி” என்று கூட பொருள் படும்)
இந்த குழுவின் செயலானது எதிரிகளை ஒரு இடத்தில லாவகமாக வரவழைத்து (எலி பொறியில் சிக்குவதைப் போல) பின்பு அங்கு கூடி இருக்கும் தங்கள் நாட்டு பெரும் படையிடம் சிக்கவைத்ததும் இவர்கள் பணி முடிந்து விடும், மிச்சத்தை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!

* “ஜதளம்” சுருக்கமாக “தளம்” (நிரந்தரப்போர் பிரிவு)
இதை நிர்வகிப்பவர் “ஜலதலதிபதி”, இது ஒரு சிறிய மிக சக்திவாய்ந்த குழுவாக செயல்பட்டது.

* “மண்டலம்” (பாதி நிரந்தர போர்ப்பிரிவு)
இதை நிர்வகிப்பவர் “மண்டலாதிபதி” இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும், இவர்கள் தனித்தனியாக மற்றும் குழுவாக சென்று போர் புரிவதில் வல்லவர்கள்!

* “கனம்” (நிரந்தர பிரிவு ) 100 முதல் 150 கப்பல்கள் கொண்ட பிரிவு, மூன்று மண்டலங்களை உள்ளடக்கியது ஒரு கனம்! பெரும் பாலும் பெரிய போர்களுக்கு மட்டுமே இந்த குழு செயல்பட்டது!

* “அணி” இதை நிர்வகிப்பவர் “அணிபதி”
மூன்று கனங்களை கொண்ட பிரிவு, அதாவது இந்த பிரிவில் சுமார் 300 முதல் 500 கப்பல்களை வரை இருந்தது! மிக பெரிய பலமான ஒரு பிரிவாக இது செயல் பட்டது.

* “பிரிவு” மிக முக்கியமான பிரிவு இது,
இதை நிர்வகிப்பவர் இளவரசர் அல்லது மன்னருக்கு மிகவும் வேண்டப்பட்டவர், இவர்களை திசைக்கு ஏற்றவாறு அழைப்பர் உதாரணத்திற்கு கிழக்கு திசையில் போர் நடந்தால்

* “கீழ்பிரிவு-அதிபதி / தேவர்” என்று அழைத்தனர். இது தான் உச்சகட்ட அதிபயங்கர பிரிவாக செயப்பட்டது, உதாரணத்திற்கு இன்று நவீன ஆயுதங்களை வைத்து போர் புரிவது போன்றது.

இந்த கப்பல் படையை வைத்து தான் “இலங்கை”, “இந்தோனேசியா”, “ஜாவா”, “மாலைதீவு”, “மலேசியா”, “சிங்கப்பூர்” போன்ற அனைத்து நாடுகளையும் இம் மன்னன் கைப்பற்றினான்! இவை அனைத்துமே ஆயிரம் வருடங்களுக்கு முன்! இன்றைக்கு இருக்கும் கப்பல் படையில் கூட இவ்வளவு பிரிவுகள் உள்ளனவா என்பது ஐயமே.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com