வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 27 November 2016

பன்மீன் கூட்டம் - பாகம் 5
கிளாத்தி

363. ஊமைக்கிளாத்தி 
364. உறுகிளாத்தி
365. தோல் கிளாத்தி
366. கறுப்புக் கிளாத்தி
367. வெள்ளைக் கிளாத்தி
368. பீச்சுக் கிளாத்தி
369. பேப்பர் கிளாத்தி
370. ஒலைக் கிளாத்தி
371. கட்டிக் கிளாத்தி
372. நெடுங் கிளாத்தி
373. காவா கிளாத்தி
374. காக்கா கிளாத்தி
375. முள்ளுக் கிளாத்தி (மூன்று முட்கள் உள்ள மீன், பிசின் போல ஒட்டும்)

கிளிஞ்சான்

376. பல் கிளிஞ்சான் (பெரியது)
377. பார்க் கிளிஞ்சான் (பச்சை நிறமானது ராணி கிளிஞ்சான்)
378. தம்பான் கிளிஞ்சான் (மேலே கறுப்பு, கீழே சிவப்பு வண்ணம்) 

பல்கிளிஞ்சான்

Parrot fish என்பதை நம்மவர்கள் எளிதாக கிளிமீன் என்று மொழிபெயர்த்து விடுகிறார்கள். ஆனால் தமிழில் பல் கிளிஞ்சான் என்பதே இந்த மீனுக்குச் சரியான பெயர்.

கிளிஞ்சான், பார் மீன். கிளிஞ்சான்களில் மஞ்சள், நீல நிறங்களில் கிளிஞ்சான்கள் உள்ளன. வண்ணமயமான கிளிஞ்சான் ஒன்றும், நீலநிறம் கலந்த வாய் கொண்ட கிளிஞ்சான்களும் உள்ளன.

தமிழக பார்க்கடல்களில் பெரிய பல்கிளிஞ்சான் ஒன்றும், பச்சை நிற பார்க்கிளிஞ்சான் (ராணி கிளிஞ்சான்) ஒன்றும் உண்டு. மேலே கறுப்பும், கீழே சிவப்பும் கொண்ட தம்பான் கிளிஞ்சான் என்ற இனமும் உண்டு.

கிளிக்கு இருப்பதுபோன்ற கனமான தடித்தவாய் இருப்பதால் இவை கிளிஞ்சான் எனப் பெயர் பெற்றன. பலமான கூரிய பற்களும் கிளிஞ்சான்களுக்கு உள்ளன. பவளப்பாறைகளைக் கொரித்து அவற்றுக்குள் உள்ள சிறிய உயிர்களை இவை உண்ணக்கூடியவை.

கிளிஞ்சான் மீன்கள் Polyps எனப்படும் பவளப்பாறை மொட்டுகளை அவற்றின் ஓடுகளுடன் உண்ணக்கூடியது. பவள மொட்டு செரிமானம்ஆகி விடும் நிலையில் ஓடுகள் மீனின் வயிற்றில் சிதைந்து மணலாகி, கழிவாக வெளியேறுகிறது.

கிளிஞ்சான் மீன்கள் வெளியேற்றும் மணல்துகள்களாலேயே சிறுசிறு தீவுகள் உருவாவதாகக் கூறப்படுகிறது.உலகம் முழுவதும் கிளிஞ்சான்களில் 75 முதல் 100 இனங்கள் உள்ளன. பெரிய செதிள்களும், தடித்த அடர்த்தியான உடலும், கண்ணைப் பறிக்கும் வண்ணமும் இந்த மீன்களுக்குரிய தனிஇயல்பு.

கும்பலாக இவை காணப்பட்டாலும் கிளிஞ்சான்கள் கூட்டமீன்கள் (Schooling fishes) அல்ல. இவை உறுதியாக, ஆனால் மெதுவாக நீந்தக்கூடியவை. இரவில் தன்னைச் சுற்றி சளிபோன்ற ஒரு படலத்தைச் சுரக்கவிட்டு அதற்குள் தங்கியிருந்து, காலையில் அந்த போர்வையை விட்டு வெளியே வரும் கிளிஞ்சான் இனங்களும் உள்ளன. கிளிஞ்சான்கள் தனிஇன மீன்கள் என்று கருதப்பட்டாலும் இவை Wrasse இன பார் மீன்களுக்கு உறவுக்கார மீன்கள் எனக் கருதப்படுகின்றன.

கிழங்கான்
379. வெள்ளை கிழங்கான்
380. கிளக்கான்

381. கிளிப்பாளை 
382. கிள்ளை
383. கிளச்சி
384. கிளிசை
385. கிளிமீன்

கீளிமீன்

386. மஞ்சக்கீளி (சின்னக்கீளி),
387. கறுப்புக்கீளி
388. தாளான் கீளி
389. நெடுங்கீளி
390. பட்டாணிக் கீளி 
391. பாக்கீளி
392. புள்ளிக்கீளி
393. வரிக்கீளி
394. வண்ணாத்திக்கீளி 
395. முட்டாள் கீளி
396. பெருவாக்கீளி
397. சல(ம்) தின்னிக்கீளி.
398. கீரைமீன் (Yellowfin tuna) 
399. கீச்சான் (மொண்டொழியன்)
400. கோலக்கீச்சான்
401. கீட்டா
402. குறுவளை
403. குறுவா
404. குப்புளா
405. கும்பிளா (கும்பாலா)
406. குமுளா

குறிமீன் (வெள்ளையும், மஞ்சளும் கலந்த நிறம். முதுகில் முள் இருக்கும் செதிளில் இருநிறம். வயிற்றில் சினை இருக்கும்)

407. புள்ளிக்குறி மீன்
408. வெள்ளைக்குறி மீன்
409. குறுமீன் (குதிப்புச் சுவையுள்ளது. பன்னா, குட்டிக்கத்தாளை மாதிரியானது)
410. குழிமீன் (உருண்டு திரண்டிருக்கும்)
411. குழாய் மீன் (கலிங்கன் போன்றது. தும்பு போன்ற குழாய் போன்ற வாயால் இரையை உறிஞ்சக்கூடியது)
412. குதிப்பு (சல்லமீன்)
413. குருங்கை

குத்தா

414. செந்தலைக்குத்தா 
415. செம்பக் குத்தா
416. செந்தூரக்குத்தா
417. தாழக்குத்தா
418. தாடிக்குத்தா
419. சென்னிக்குத்தா
420. கன்னங்குத்தா
421 வீசக்குத்தா. 
422. குளச்சல்
423. குழிமுண்டான்
424. குட்டிலி (கூட்டிலி, சுட்டுத்தின்ன ஏற்ற மீன்)
425. குட்டோறு
426. குமளம்பாசு, 

கூரல் (வயிற்றில் பள்ளை என்ற காற்றுப்பை உள்ள மீன்)

427. மஞ்சள் கூரல் (அளக்கத்தாளை இனம்)
428. வெள்ளைக் கூரல்
429. கொடுவாய்க் கூரல்,
430. கூடுமுறிச்சான்
431. கூந்தா
432. கூறவு

கெழுது

433. மண்டைக் கெழுது
434. மடிக் கெழுது
435. மாம்பழக் கெழுது (மஞ்சள் கெழுது)
436. கட்டக் கெழுது
437. காயல் கெழுது
438. முழங்கெழுது
439. பொன் கெழுது
440. ஊசிக் கெழுது
441. சல்லிக் கெழுது
442. மொண்டைக் கெழுது
443. முள்ளங் கெழுது
444. பொதி கெழுது (பொரி கெழுது)
445. வெண் கெழுது
446. கூவங் கெழுது (குவ்வங் கெழுது, அரிய இனம்)
447. கருப்புக் கெழுது
448. சலப்பைக் கெழுது
449. வரிக் கெழுது
450. பீக்கெழுது
451 அங்காள் கெழுது
452. ஆணிக்கெழுது
453. செம்பாணிக் கெழுது (செம்பு ஆணி போன்ற மஞ்சள் முள் இருக்கும்)

- மோகன ரூபன்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com