நூல் அறிமுகம் :
பாண்டிய காலத்தில் முத்துக்குளித்தலும், சங்க எடுத்தலும் நேரடியாக அரசரின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்படுகின்றது. இன்று பெரும்பாலும் அழிந்துவிட்ட தொழிலான இந்த முத்துகுளித்தலின் அரசியலும், அது தென் தமிழக வரலாற்றில் ஏற்படுத்திய பெரும் தாக்கமும் நாம் இன்று உணர முடியாது.
கடலில் இருந்து சிப்பியை எடுத்து, அதனை அழுகவிட்டு அதிலிருந்தே முத்துக்கள் பிரித்து எடுக்கப்பட்டன. சிப்பியில் இருந்து முத்து எடுத்த பிறகு அதனை தரம் பிரித்து விலை நிர்ணயிக்க முத்துச் செட்டிகள் இருந்ததாக கூறப்படுகின்றது. இவர்களைப் பற்றிய பாடல் ஒன்று திரு. பொன்னீலன் எழுதிய, தென்குமரி வட்டார வழக்குகள் நூலில் கூறப்படுகின்றது.
இவர்களை அந்த பாடல் முத்து அளக்கும் செட்டி என குறிப்பிடுகின்றது. அதில்
"முத்தளக்கும் செட்டி
முதலுக்கும் பொன்னாகி
வச்சளக்கச் சொல்லி
வரிசையிட்டார் உன் மாமன்
திரும்ப அளந்தாராம்
தெய்வப் பிறவி உன் மாமன்
ஆராரோ ஆரிரரோ எங்க கண்ணே
..... " என பல செய்திகளைச் சொல்லி தொடருகிறது அப்பாடல்.
நூல்: தென்குமரி வட்டார வழக்குகள்
விலை: ₹220
தென்குமரி வட்டார வழக்குகள்
Heritage Vembarites
23:52

சங்க காலத்திற்கு முன்பிருந்தே மன்னார் வளைகுடாவில் எடுக்கப் பெற்ற முத்துக்கள் கிரேக்க, ரோமானிய நாடுகளில் மிகவும் புகழ்பெற்று விளங்கின. இலங்கையின் பல்வேறு கடற்கரை நகரங்களும் எ.கா பொற்கேணி, மறிச்சுக்கட்டி, சிலாவத்துறை முத்துக்குளித்துறையாக இருந்திருக்கின்றன. மன்னார் மாவட்டத்தின் வரலாற்று தொன்மையயும் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்கள் குறித்த தொடரில் ஒரு பகுதி
கிமு 6 ஆம் நூற்றாண்டில் இலங்கை, கடல்சார் வர்த்தக உறவுகளைக் கொண்டிருந்தது. மேலும் கடல்சார் வர்த்தகத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட புகழ்பெற்ற கடற்படைத் துறைமுகங்கள் இருந்தன, குறிப்பாக கடல்சார் 'பட்டுப்பாதை'க்காக கிரேக்க-ரோமன், சீனா, இந்தியா, பெர்சியா ஆகிய நாடுகளில் இருந்தவர்கள் தங்கள் வெளிநாட்டு வர்த்தகத்திற்காகப் பயன்படுத்தினார்கள். அதனால் இலங்கை புதிய பொருளாதார உறவுகளை ஏற்படுத்த முடிந்தது.
பழங்காலத்தில் மன்னார் முத்து, மீன்பிடிக்கு பெயர் பெற்றது. விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் மசாலாப் பொருட்களுடன், முத்துக்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கையின் முக்கிய ஏற்றுமதி பொருட்களாக இருந்தன, ரோமானிய நீண்ட தூர வர்த்தகத்தின் உச்சக்கட்டத்தின் போது, அதாவது பேரரசு முழுவதும். பண்டமாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ரோமானியர்கள் வெள்ளி மற்றும் தங்க நாணயங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க அளவுகளில் பணம் செலுத்தினர். கி.பி முதல் நூற்றாண்டில் வாழ்ந்த அநாமதேய எழுத்தாளரால் எழுதப்பட்ட இந்தியப் பெருங்கடல் துறைமுகங்கள் பற்றி கிரேக்க மொழியில் எழுதப்பட்ட கிரேக்க-ரோமன் ‘’Periplus of the Erythraean Sea’’ ல் மன்னார் குறிப்பிடப்பட்டுள்ளது.
16. முத்துக்குளிப்பு (Pearl hunting)
முத்தரிப்புத்துறை
உலகில் முத்துக்குளிக்கும் இடங்கள் மிகச் சிலவேயுள்ளன. இலங்கையின் மன்னார், மலபார் ஆகிய கடலோரங்களில் பரதவர்கள் இதில் தனியுரிமை பெற்றவர்களாக சிறந்து விளங்கியிருக்கிறார்கள். எங்கள் கடலில் வளமான முத்துக்கள் இருந்தன. நினைவெட்டாக் காலத்திலிருந்தே எங்கள் முன்னோர்கள் கண்டெடுத்த இயற்கைச் சொத்து அது. கொற்கையிலும், மன்னாரிலும், பூம்பட்டினத்திலுமாக வருடத்திற்கு ஒரு போகம் முக்குளித்தோம்.
மேற்கிலிருந்து வீசியக் காற்று கொற்கைக்கும், கீழைக்காற்று மன்னாருக்குமாக முத்தைக் கொட்டிக் கொடுத்த அந்த இயற்கையின் சொத்துக்கு எங்கள் முன்னோர்கள் அதிபதிகளாக இருந்தனர். முத்துக்குளித்தல் (Pearl hunting) அல்லது முத்தெடுத்தல் அல்லது முத்து வேட்டை என்பது கடலின் ஆழமான பகுதிகளில் வசிக்கும் முத்துச் சிப்பி மற்றும் நன்னீர் மட்டிகள் (freshwater pearl mussel) எனப்படும் மெல்லுடலிகளிலிருந்து முறையான மூழ்குதல் பயிற்சி மூலம் முத்தினை எடுத்து கடலின் மேற்பரப்பிற்குக் கொண்டு சேர்க்கும் முறையாகும்.
முத்துச் சிப்பிகளுக்கு நான்கு வயதாக இருக்கும் போது பெறப்படுவனவற்றிலேயே அதிசிறந்த முத்துக்கள் காணப்படும். நல்ல தரமான அரிய வகையான மூன்று அல்லது நான்கு முத்துகளை பெறுவதற்கு கிட்டத்தட்ட ஒரு டன் சிப்பிகள் சேகரிக்கப்பட வேண்டும்.
’’பேருலகத்துமே எந்தோன்றி சீருடை விழுச் சிறப்பின், விளைந்து முதிர்ந்த விழு முத்தின், இலங்குவளையிருஞ்சேரிக் கட் கொண்டிக் குடிப்பாக்கத்தும், நற்கொற்கையோர்” என்கிற மதுரைக் காஞ்சி பாடலின் மூலம் வீரமிக்க பரதவர்கள் முத்துக்களையும், சிப்பிகளையும் கடலில் மூழ்கியெடுத்தார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
பரவர்கள் சிப்பிகளைச் சேரிப்பதற்காக இடுப்பைச் சுற்றி பையொன்றைக் கட்டிக்கொள்வார்கள். நீரில் மூழ்கும் போது சரியான இடம் தென்பட்டதும் பரபரப்பாக முத்துக்களைச் சேகரித்து இடுப்பில் கட்டிச் சென்ற பை போன்ற வலையினுள் போடப்படும். அதேவேளை தோணியில் இருப்பவர் முத்துக் குளிப்பவர்களைக் கண்ணும் கருத்துமாகக் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். மேலே வந்தவர் தோணியில் இருப்பவரிடம் தான் சேகரித்த முத்துச் சிப்பிகளை ஒப்படைத்து விட்டு சிறிது ஓய்வு எடுத்தபின் மீண்டும் முத்துக் குளிக்கக் குதித்துவிடுவார். முத்துக்குளிக்கும் பணி முடிவுற்றதும் சிப்பிகளைக் கடற்கரையில் கொட்டி ஏலத்தில் விற்பனை செய்வார்கள். சில நாட்களின் பின்பு சிப்பிகளை ஒவ்வொன்றாகத் திறந்து நன்றாகக் கழுவி முத்துக்களை வெளியில் எடுப்பார்கள். இவ்வாறு சேகரிக்கப்படும் இயற்கை முத்துகள் விலை மதிப்பு மிக்க ஒன்பது இரத்தினங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகிறது.
முத்தின்வகைகள்:
1. ஆணி, 2. கனதாரி, 3. மக்கை, 4. மடக்கு, 5. குறவில், 6. களிப்பு, 7. பீசல், 8. குறல் 9. தூள் 10. ஓட்டு முத்து.
பரவர்கள் மற்றும் அவர்களின் பாரம்பரீய மீனவ மரபினரின் தொழிலை சில வகைகளாக பிரிக்கலாம். அவை, துணி விற்போர், கலம் செலுத்துவோர், முத்துச்சிப்பிகள் குளிப்போர், சங்குகள் குளிப்போர், துணிகள் கட்டுக்கட்டுவோர், ஆமைகளைப் பிடிப்போர், கடற்பன்றிகளைப் பிடிப்போர், சுறா மற்றும் பிறமீன்களைப் பிடிப்போர், பல்லக்குச் சுமப்போர், தலைமைக்காரர்களின் குற்றேவலர், நண்டுகள் பிடிப்போர், என பல தொழில்களையும் கடலை மையமிட்டு செய்து வந்தவர்கள் பாரம்பரீய மீனவர்கள்.
ஆனால் பாரம்பரீய மீன்பிடிச்சமூகங்களின் பிரதான தொழிலாக எக்காலத்திலும் இருந்திருக்கக்கூடிய மீன்பிடி, உப்பு விளைவித்தல் போன்ற தொழிலுக்கு இருந்த முக்கியத்துவத்தை விட, அவர்கள் தொழிலின் ஒரு பகுதியாக இருந்து கடலில் மூழ்கி எடுத்து வந்த முத்துக்கு இருந்த முக்கியத்துவம் வேறு எதற்கும் இல்லை.
செல்வாக்குமிக்கோரின் கழுத்துக்களை அலங்கரிக்கும் அணிகலனாக மட்டுமல்லாமல் கிரேக்கர்களையும், உரோமானியர்களையும், அராபியர்களையும், போர்ச்சுக்கீசியரையும், பின்னர் டச்சுக்காரர்களையும் இறுதியாக வெள்ளையர்களையும் என அவர்களின் ஏக போக சுரண்டல் சந்தையில் முத்து ஒரு பிரதான பொருளாக இருந்ததாலுமே முத்து பேசப்பட்டது.
தென்னிந்தியாவைத் தவிர இந்தியக் கடலோரங்களில் வேறு எங்கும் இயற்கை கடல் முத்து எடுக்கப்படவில்லை. இந்தியக் கடலோரங்களில் பரவலாக சங்குக்குளித்தல் நடைபெற்றதே தவிர முத்துக்குளித்தல் நடைபெறவில்லை. முத்து வளம் இந்திய தீபகற்பத்தின் வேறெந்த கடல் பகுதிகளிலும் இருந்தமைக்கான சான்றுகளும் இல்லை. முத்துக்குளித்தல் நடைபெற்ற ஒரே இடம் தமிழக கடலோரங்களிலும், இலங்கையின் மன்னார் கடலோரத்திலும்தான் என்பது அரியக்கிடைக்கிற செய்தி.
பெர்ஷியா, இந்தோனேஷியா, ஜப்பான், போன்ற இடங்களில் முத்துக்குளிப்பு நடந்திருந்தாலும் இவைகளுக்கு பன்னெடுங்காலத்திற்கு முன்பே தமிழகத்தின் கொற்கை கடலோரத்திலும் சிறிலங்காவின் மன்னார் குடாவிலும் முத்தெடுத்ததற்கான சான்றுகள் உள்ளன. தமிழக முத்துக்கள் ஆதிகாலம் தொட்டே எடுக்கப்பட்டு வருவதாக கால்டுவெல் பிஷப்பும், எம். அருணாச்சலம் என்ற மூத்த ஆய்வாளரும் கணிக்கிறார்கள்
பெரிப்ளூஸ் என்கிற நூலில் கொற்கையில் முத்துக்குளித்தலில் பாண்டியர்களுக்காக அவரின் கைதிகள் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார். சந்திரகுப்த மௌரியரின் அரசவையில் கிரேக்க தூதுவராக இருந்த மெகஸ்தனிஸ் இலங்கையில் முத்துக்குளித்தல் நடந்ததையும் இந்தியாவைக் காட்டிலும் தங்கம், முத்துக்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடாக இலங்கை இருந்ததையும் குறிப்பிடுகிறார்.
பெர்ஷியன் கடல்பகுதிகளில் நடந்த முத்துக்குளித்தல் தொடர்பான குறிப்புகளும் உள்ளன. பெர்ஷியன் கடல் பகுதியில் கிடைத்த முத்துக்கள் ஆர்ம்ஸ் (Ormus) என்றும் தமிழக, மன்னாரிலும் கிடைத்த முத்துக்கள் ‘’கீழை முத்துக்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த கீழை முத்துக்கள் பெர்ஷிய முத்துக்களை விட கிரேக்கத்திலும், ரோமாபுரியிலும் புகழ்பெற்றிருந்ததாகவும் தெரிகிறது.
மன்னார் வளைகுடாவினது முத்துப்படுக்கைகள் (முத்துச்சிப்பிக்கள் காணப்படுகின்ற இடங்கள்) தொடர்பாக கி.பி. 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலுள்ள வரலாற்றுப் பதிவுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. போக் 1888 என்பவரின் கருத்தின்படி ஒல்லாந்தரால் 1661, 1667, 1746, 1748, 1749, 1753, 1754, 1768ம் ஆண்டுகளில் இங்கு முத்துக்குளிப்பு இடம் பெற்றுள்ளது. கௌடில்யரின் கருத்துப்படி கி.மு 3ம் நூற்றாண்டுகளில் இங்கிருந்து பெறப்பட்ட முத்துக்கள் இந்தியாவில் கொடிகட்டிப் பறந்த மகரப் பேரரசுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஏனைய நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன என்று அறிய முடிகிறது. 13ம் நூற்றாண்டில் காயல் பட்டினம் சிறந்த பொருளாதார சிறப்புடன் விளங்கியுள்ளது. மன்னாரில் பெறப்பட்ட முத்துக்கள் இங்கு கொண்டு செல்லப்பட்டு ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
வெனிசிய அறிஞர் மார்க்கோபோலோ சொல்கிறார் 14ம் நூற்றாண்டில் மலையாளக் கரையில் உள்ள யூர்பட்டினம் சிறந்து விளங்கியது. இங்கு அதிகமாக மன்னார் முத்துக்கள் விற்கப்பட்டுள்ளதாக இவர் கூறியுள்ளார். 1294ஆம் ஆண்டு மார்க்கோ போலோ மன்னார் வளைகுடாவுக்கும் வந்துள்ளதுடன், அறுவடைக்காலத்தில் அங்கு கிட்டத்தட்ட 500 கப்பல்களும் படகுகளும் சுழியோடிகள் மற்றும் வர்த்தகர்களுடன் முத்துக்களைத் தேடி வந்திருந்தாக குறிப்புக்கள் கூறுகின்றன.
மொறோக்கோ யாத்திரிகர் இபுனு பதூதா, தான் இலங்கையில் கரை இறங்கிய போது ஆரியச் சக்கரவர்த்தியின் கட்டுப்பாட்டில் இருந்த முத்துச் சலாபத்திற்கு அண்மையில் உள்ள ‘பட்டாள’ நகரில் மரத்தால் செய்யப்பட்ட அடுக்கு மாளிகையில் தான் தங்கியதாகவும், அண்மையில் முத்துக்கள் குவிக்கப்பட்டிருந்ததையும் அதை அதிகாரிகள் தரம் பிரித்ததையும், கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் முத்துக்குளிப்புப் பகுதி இலங்கைத் தீவின் வட மேற்கில் உள்ள நீர்கொழும்பு முதல் மன்னார் வரையிலான கரையோரப் பகுதியை அண்டிய மன்னார்க் குடாப் பகுதியாகும். இப்பகுதி நீண்ட காலமாகத் தமிழ் அரசான யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அத்துடன், இலங்கையின் முத்துக்குளிப்புத் தொழிலில் இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த கரையோரப் பகுதி மக்களுடன் பெருமளவிலான தமிழ்நாட்டுக் கரையோரப் பகுதி மக்களும் ஈடுபட்டிருந்தனர். தமிழகத்தின் பாண்டிநாட்டுக் கரையோரப் பகுதிகள் பண்டைக்காலம் தொட்டே முத்துக்குளிப்புக்குப் பெயர் போனவை.
பண்டைய தமிழகத்தில் குறிப்பாக முத்து வளமிக்க கீழைக்கடலோரத்தில் தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகப்பட்டினம், தென் ஆற்காட்டின் கரையோயங்களில் முத்து எடுக்கப்பட்டது. இத்தொழில் பரதவர் எனப்படும் சமூகத்தினர் ஈடுபட்டு வந்துள்ளனர். இப்பகுதியில் கிடைத்த முத்து கீழை முத்து என பெயர் பெற்றதாக வரலாறு தெரிவிக்கிறது. இலங்கையில் உள்நாட்டுப் போர்களின் காரணமாக இத்தொழில் நிறுத்தி வைக்கப்பட்டது.
முத்தரிப்புதுறையில் முத்து குளிப்பில் ஈடுபட்டவர்கள் பரவ சமூகத்தை சேர்ந்தவர் இவர்கள் முள்ளிக்குளத்தில் இருந்து பேசாலை வரை கடற்கரை அண்டிய பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த முள்ளிக்குளம், வங்காலை, தாழ்வுபாடு, பேசாலை, சிலாவத்துறை போன்ற பிரதேசங்களில் உள்ள பரவ சமூகத்தினர் குறிப்பிட்ட சிலர் கடலுடன் தொடர்புபட்ட அட்டை பிடித்தல், சங்கு குளித்தல் போன்ற நிகழ்வுகளில் இன்றும் ஈடுபட்டிருப்பதையும் அறியக் கூடியதாக உள்ளது.
கடலுக்கு அடியில் முத்துச் சிப்பிகள் விளையும் இடம் "பார்" எனப்பட்டது. முத்துக் குளிக்கும் பார்கள் மன்னாரில் மேற்குக் கரைகளில் அதிகம் இருந்து உள்ளன. முத்துக்குளிப்புப் பகுதியில் 19 பார்கள் வரை இருந்ததாகத் தெரிகிறது. அவை அவற்றுக்கு அண்மையில் உள்ள இடங்களின் பெயர்களால் அழைக்கப்பட்டன.
அவற்றுட் சில பின்வருமாறு:
கொண்டச்சிப் பார்
சிலாபம் பார்
காரைதீவுப் பார்
பெரிய காரைப் பார்
செவ்வல் பார்
மோதரகம் பார்
அரிப்புப் பார்
மன்னார்பிரசேத்தில் வருடாவருடம் சித்திரை, வைகாசி மாதங்களில் முத்துக் குளித்தல் நடைபெற்றுள்ளது. இதற்குரிய ஆயத்தங்கள் பெப்ரவரி மாதம் முதல் செய்யப்படுவது வழக்கம். இதில் இத்தொழிலுடன் தொடர்புபட்ட அடிப்படை வசதிகளான மருத்துவ வசதிகள், வாடிகள், ஓய்வு விடுதிகள், களஞ்சிய அறையமைப்பு, கடைகள் இங்கு நடைபெறும் முத்துக்குளிக்கும் அழகிய கைத்தொழிலைப் பார்வையிட உள்ளுர், வெளியூர் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் போன்றோர் குடும்பம் குடும்பமாக வருகை தந்து பார்வையிட்டு வந்துள்ளனார்
பிரித்தானியர் வருமானத்திற்கு முத்து பாரிய பங்களிப்பைச் செய்தமையால் அத்தொழிலைக் கண்காணிப்பதற்காகவும், வரி அறவிடுவதற்காகவும் பிரித்தானிய பிரதமரின் மகன் ஆளுனர் ப்ரெட்றிக் நோத் அவர்களால் ‘டொரிக்’ எனப்படும் 3 மாடிக் கட்டிடம் சிலாபத்துறை அரிப்பு வீதியில் களிமண் ஓடைக்கு மேற்காகவும், வீதிக்கு தெற்கிலும் கடற்கரைப்பக்கமாக அமைக்கப்பட்டது. இக்கட்டிடம் அமைக்கும் போது கடல் தூரத்தில் இருந்ததாக அறிய முடிகின்றது. இன்று இக்கட்டிடம் கடல் அலையால் மோதப்பட்டுக் கொண்டு அழிவின் விளிம்பில் உள்ளது. இக்கட்டிடத்தை இப்பிரதேச மக்கள் அல்லிராணிக் கோட்டை எனவும் அழைக்கின்றனர். இக்கட்டிடத்தின் சாயல் கிரேக்க கட்டிட அமைப்பில் உள்ளது.
காலனித்துவக் காலப்பகுதியின்போது 16ஆம் நூற்றண்டு தொடக்கம் அரசாங்கத்துக்குச் சொந்தமான முத்துப்படுக்கைகள் சுழியோடிகளுக்கும் வாத்தகர்களுக்கும் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. முத்து அகழ்வுத்தொழில் 67 வருடங்களாக வெற்றிகரமாக இருந்துவந்தபோதிலும் 1881ஆம் ஆண்டளவில் விநியோகிப்பதற்கு சிப்பிகள் இல்லாமல் போனதை அரசாங்கம் அவதானித்திருந்தது. 1924ஆம் ஆண்டளவில் முத்து அகழ்வுத்தொழிலை ஒழுங்குபடுத்துகின்ற சட்டமொன்றை அமுலுக்கு கொண்டுவந்தது. இருப்பினும் அங்கு முத்துச் சிப்பிகள் எதுவுமே இல்லாதபோது அச்சட்டம் மிகவும் தாமதமானதாகவே வந்திருந்தது.
தொடர்ச்சியான முத்துக்குளித்தலால், முத்துப் படுகைகள் அழிந்து போயின. 1960ல் சிலாபத்துறையில் நோர்த் ஸ்டார், கனேடியன் ஆகிய படகுகள் மூலம் இலங்கை அரசு முத்துக்குளித்தலில் ஈடுபட்டது. இதுவே, மன்னார்ப்பிரதேச இறுதி முத்துக்குளிப்பாகும். 1961-க்கு பிறகு, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் முத்துக்குளித்தல் நடைபெறவில்லை.
ஆனால், சங்கு குளித்தல் இன்று வரை தொடர்கிறது. சங்கு குளிப்போர், ‘டர்பினெல்லா பைரம்’ எனப்படும், `பால் சங்கை’ குறி வைத்துதான் கடலுக்குள் செல்கின்றனர். இவ்வகை சங்குகள், இந்து மற்றும் புத்த மதத்தில் புனிதத்துவம் வாய்ந்தவையாக கருதப்படு கின்றன. சங்கு குளிப்போர், கடலில் 20 மீட்டர் ஆழம் வரை மூச்சுப்பிடித்து நீந்திச்சென்று சங்கு குளிப்பர். பால் சங்குகளை உயிரோடு கடலுக்கு அடியில் இருந்து எடுத்து வருவர். அதன் சதையை மாமிசமாக பயன் படுத்திவிட்டு, சங்கை விற்பனை செய்வர். பாதுகாப்பான சங்கு குளித்தலுக்கு வகை செய்யும் விதிமுறைகளை மீன்வளத்துறை வகுக்க வேண்டும்.

நிலையான நடைமுறைகள் இன்றி அதிகப்படியான முத்து அறுவடையானது மன்னாரில் முத்து தொழில் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

தொகுப்பு
நிஷாந்தி உயிர்ப்பூ
ஆல்ப்ஸ் தென்றல் நிஷா
18.03.2024
ஆதாரங்கள் மற்றும் தரவுகள்:
A periplus என்பது பாய்மரப் பயணம் மற்றும் வணிக, அரசியல் மற்றும் இனவியல் விவரங்களைப் பதிவுசெய்த துறைமுகங்கள் பற்றிய பதிவு புத்தகமாகும். வரைபடங்கள் பொதுவான பயன்பாட்டில் இருந்த ஒரு காலத்தில், இது ஒரு கலவையான அட்லஸ் மற்றும் பயணிகளின் கையேடாக செயல்பட்டது.
இது செங்கடலின் கடற்கரையில் உள்ள Berenice Troglodytica ரோமானிய எகிப்திய துறைமுகங்களிலிருந்து Horn of Africa (கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தீபகற்பம்) பாரசீக வளைகுடா, அரேபிய கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல், பாகிஸ்தானின் நவீனகால சிந்து பகுதி உட்பட இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள நிலங்களைப் பற்றி வழிசெலுத்தல் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை, பண்டைய ஹெலனிக் உலக நுண்ணறிவுகளை ( கிட்டத்தட்ட ) துல்லியமான விவரிக்கிறது. ஆசிரியர் தெரியவில்லை என்றாலும் முதல் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட வெவ்வேறு தேதிகளுக்கு உரை கூறப்பட்டுள்ளது, ஆனால் முதல் நூற்றாண்டின் நடுப்பகுதி இப்போது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
‘’Periplus of the Erythraean Sea’’ (The Periplus of the Erythraean Sea or Periplus of the Red Sea) கடல்சார்ந்த எகிப்தியர் பற்றிய (கிரேக்க-ரோமன்) படைப்பாகும். இது நம்மிடம் வந்த பழங்கால இலக்கியங்கள் அனைத்திலும் கருப்பொருளாக தனித்துவமானது. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பிரதி 1816 முதல் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழக நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தென்மேற்குப் பகுதிகள் அப்பகுதியை நன்கு அறிந்த ஒருவரின் நேரடி விளக்கமாகும்,



PERIPLUS OF THE ERYTHREAN SEA.. pdf
இலங்கை மற்றும் கிரேக்க-ரோமன் கடல்சார் வர்த்தக உறவுகள் (இலக்கிய ஆதாரங்கள் மற்றும் தொல்பொருள் சான்றுகளின்படி)
இலங்கைக்கும் கிரேக்க-ரோமானுக்கும் இடையிலான வர்த்தக உறவு என்ன?.
இந்த நூலக ஆய்வைப் பயன்படுத்தி தரமான ஆராய்ச்சி முறையின் கீழ் நடத்தப்பட்டது. இந்த மூன்று மூலங்களிலிருந்தும் இலக்கிய ஆதாரங்கள், குறிப்பாக வெளிநாட்டு நூல்கள் இலங்கை மற்றும் கிரேக்க-ரோமன் வர்த்தகம் பற்றிய பல பதிவுகளைக் கொண்டுள்ளன. அந்த ஆசிரியர்களில் சிலர் காஸ்மோஸ், பிளினி, டோலமி மற்றும் ஸ்ட்ராபோ. மாந்தை, கொடவாயா போன்ற துறைமுகங்களிலிருந்தும் அனுராதபுரம், பொலன்னறுவை போன்ற இராச்சியங்களிலிருந்தும் சில தொல்பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன.
இலங்கைக்கும் கிரேக்க-ரோமனுக்கும் இடையிலான வர்த்தக உறவுக்கான முக்கிய தொல்பொருள் சான்றுகள் ரோமன் மற்றும் இந்தோ-ரோமன் நாணயங்கள் ஆகும். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதில் சில இந்திய காரணிகளும் முக்கியமானவையாக இருந்தன, ஏனெனில் இலங்கை வர்த்தகம் இந்திய வர்த்தகத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தது. இந்த ஆய்வின் மூலம் இலங்கையில் உள்ளக போக்குவரத்து அமைப்பு இருந்ததையும், ரோமானிய வர்த்தகம் இலங்கையில் பல இடங்களில் பரவியுள்ளது என்பதையும், சில சமயங்களில் இந்தியாவும் பாரசீகமும் இலங்கைக்கும் கிரேக்க ரோமானிய வர்த்தகத்துக்கும் இடையில் இடைத்தரகர்களாக செயல்பட்டதையும் நாம் கண்டறிந்த முக்கிய அம்சம், இலங்கை பண்டைய வர்த்தக அமைப்பில் ஒரு மையமாக இருந்தது மற்றும் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில், இலங்கை இந்து சமுத்திரத்தின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்தது.
44] இலங்கையின் பண்டைய கிரேக்க பெயர் 'டப்ரோபேன்'. [1,26,31,30,40,43,45,52,53,57] 'Taprobane' தவிர சில கிரேக்க ஆசிரியர்கள் இலங்கைக்கு 'Palaisimoundou', 'Salike' மற்றும் 'Sieladiba' பெயர்களைப் பயன்படுத்தினர்.
[57] எளிமையாக, Taprobane என்றால் 'செப்புக் கரை' என்று பொருள்படும், இது 'தம்பபன்னி'க்கு ஒத்த சொல்லைக் கொடுக்கிறது. ...
[52] 'Periplus Maris Erythraei' புத்தகத்தின் அறியப்படாத ஆசிரியர், தானே ஒரு வியாபாரி, இலங்கையின் முத்துக்கள், ரத்தினங்கள், மஸ்லின்கள் மற்றும் ஆமை ஓடுகள் போன்ற வளமான வர்த்தகத்தை விவரித்தார். [30,32] ரத்தினங்களில், ரூப் மற்றும் சிலோன் சபையர் ஆகியவை ரோமானியப் பேரரசின் காலத்தில் பிரபலமான மற்றும் மதிப்புமிக்க கற்களாக இருந்தன. Cosmos இன் கூற்றுப்படி, கிரேக்கர்கள் தவிர இலங்கை ரோமுடனும் வர்த்தக உறவைக் கொண்டிருந்தது. ...
இலங்கையில் முத்துக்குளிப்பு
Heritage Vembarites
23:49

போர்ச்சுகல் பேரரசின் ஆட்சியில் பரவர் நாட்டின்(Fishery Coast) நகரங்கள்
ஜரோப்பிய ஓன்றிய நாடுகளை போல் அன்று கிபி1546 முதல் கிபி 1658 வரை போர்ச்சுகல் அரசின் பாதுகாப்பில் பரவர் நாட்டின் நகரங்கள் உலக பிரசித்தி பெற்றதாக திகழ்ந்தது.
--------------------------------------
Foot Notes:
*Formerly there were a great number of town on the Fishery Coast which is Famous all over the world ;but ever since the power of Portuguese has been weakened in India, and they have not been able to protect this coast, the most considerable towns are abandoned.
TRAVELS OF THE JESUITS IN TO Various Parts Of The WORLD:PARTICULARLY CHINA and the EAST INDIES BY JOHN LOCKMAN. Page 375
போர்ச்சுகல் ஆட்சியில் பரவர் நாடு
Dev Anandh Fernando
23:22

கி.பி. 1602ல் விஜயநகர நாயக்கர்களின் திருநெல்வேலி பாளையக்காரனை கொலை செய்த பரதவர்கள்...!
ஸ்ரீ வீர ரவி வர்மா (1594-1604) எனும் திருவிதாங்கூர் அரசன், விஜயநகரப் பேரரசு பிரதிநிதிகளாக மதுரையில் இருந்த நாயக்கர்களுக்கு கப்பங்கட்ட மறுத்ததையடுத்து, அவனை அடக்கி கப்பத்தொகையை வசூலிக்க கி.பி. 1596 ஆம் ஆண்டில் 70,000 போர் வீரர்கள் மற்றும் யானைப்படைகளுடன் மதுரையை விட்டு புறப்பட்டு திருநெல்வேலி வந்திருந்தார் இரண்டாம் குமார கிருஷ்ணப்ப நாயக்கர்(1595-1601).
அப்போது திருநெல்வேலியில் தனது அதிகாரத்திற்கு வெளியே இருந்த பரதவர் சமூகத்தவர்களை கண்டு, முதற்கட்டமாக மணப்பாடுக்கு தெற்கே அவர்கள் வாழக்கூடிய 12 கிராமங்களை அடக்கி, ஆண்டுதோறும் வரிவசூல் செய்து வர ஆரியப்பெருமாள் என்பவனை விஜயாபதி என்னுமிடத்தில் பாளையக்காரனாக நியமிக்கிறார் இரண்டாம் குமார கிருஷ்ணப்ப நாயக்கர்.
ஆரியப்பெருமாளும் 12 ஊர் பரதவர்களை தற்காலிகமாக அடக்கி அவர்களுடைய விஜயாபதி நகரிலே தனக்கு ஓர் அரண்மனை கட்டிக்கொண்டும், படைவீரர்களுக்கு குடியிருப்புகள் அமைத்தும், அந்நகரை சுற்றி கோட்டை, அரண் எழுப்பியும், அக்கோட்டையை சுற்றிலும் அகழியும் அமைத்தான். ஆரியப்பெருமாளின் வரிவிதிப்பை பரதவர்கள் எதிர்த்தனர்.
பரதவர்கள் மீது கோபமடைந்த ஆரியப்பெருமாள் தனது படைகளுடன் விஜயாபதி கோட்டையை விட்டு வெளியேறி உவரி என்னும் பரதவர் கிராமத்தை எந்தவொரு முன்னறிவிப்பின்றி முற்றுகையிட்டு தாக்கி அங்குள்ள கோவிலை இடித்து தரைமட்டமாக்கி, வீடுகளை சேதப்படுத்தி, மக்களை கைது செய்து விஜயாபதிக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தான்.
ஆரியப்பெருமாளின் இக்கொடியச் செயலை கேள்வியுற்று அவனை பழிதீர்க்க மணப்பாடு பரதவர்கள் ஆயுதமேந்த முடிவு செய்தனர். இதன்படி கி.பி. 1602ல் அக்டோபர் மாதம் தொடக்கத்தில் மணப்பாடு பரதவர்கள் முன்னூறு பேர் நன்கு ஆயுதமேந்தி ஆறு பிரிவுகளாக பிரிந்து அங்கிருந்து விஜயாபதி நோக்கி புறப்பட்டனர். அம்முன்னூறு பரதவர்களுள் நூறு பேர் மாத்திரமே விஜயாபதி கோட்டையை முதலில் நெருங்கினர்.
நேரத்தை வீணடிக்காமல் அந்நூறு பரதவர்களும் ஆரியப்பெருமாள் அஞ்சும்படி அகழியை கடந்து அவன் கோட்டைக்குள் புகுந்து அப்பாளையக்காரனின் படைவீரர்கள் உட்பட நகரவாசிகள் அனைவரையும் இரக்கமின்றி கொன்று குவித்தனர். பரதவர்களின் இந்த அதிரடி தாக்குதலில் தனது படைவீரர்கள் அனைவரையும் இழந்த ஆரியப்பெருமாள் அரண்மனையை விட்டு வெளியேறி நகரிலே அமைந்துள்ள ஒரு வீட்டினுள் சென்று ஒளிந்து கொண்டான்.
பரதவர்களிடம் பிடிபட்ட ஆரியப்பெருமாள் தன்னை உயிரோடு சிறை கைதியாக மணப்பாடுக்கு கொண்டு செல்லும்படி கெஞ்ச, அவனது கோரிக்கை மறுக்கப்பட்டு பரதவர்கள் ஆரியப்பெருமாளை கண்டதுண்டமாக வெட்டி தலையை கொய்து மணப்பாடுக்கு போரிலே வெற்றி பெற்ற அடையாளமாக கொண்டு வந்தனர்.
விஜயாபதி மீது மேற்கொள்ளப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கையில் எந்தவொரு பரதகுல நாயகர்களின் உடலிலும் வெட்டுக்காயம் இல்லை என்று இப்படையெடுப்பை பற்றி விவரிக்கும் ஏசுசபை பாதிரியாரின் கடிதம் பதிவு செய்துள்ளது கூடுதல் சிறப்பு.
மேற்கூறிய தகவல் அனைத்தும் தமிழகம் வந்திருந்த பிரஞ்சு ஏசுசபை பாதிரியார் "லியோன் பெஸ்சி" அவர்கள் தனது ''லா மிஷன் டு மதுரா'' என்னும் நூலில் பக்கம் எண். 404-8ல் பதிவு செய்தவைகளாகும்.
००००००००००००००००००००००००००००००००००००००००
ஆதாரம்:-
la Mission du Madure. Historique de ses Pangous-French Jesuit Father BESSE Leon S.J.;Page 407-8,
![]() |
திருநெல்வேலி வரைபடத்தில் விஜயாபதி |
பாளையக்காரனை வதம் செய்த பரதவர்
Dev Anandh Fernando
23:19

பரவர்கள் தங்கள் தலைவர்களின் ஆளுகையின் கீழ் வாழ்ந்து வந்தனர். தாங்கள் வாழ்ந்து வந்த நிலபகுதியின் ராஜாக்களுக்கு வருடாந்திர அன்பளிப்பு மட்டுமே கொடுத்து வந்தனர். குடிமக்களுக்கு விதிக்கப்படும் அனைத்து வரிகொடுமைகளிருந்து விலக்கப்பட்டனர்.
மன்னர்களுக்கு செலுத்தும் காணிக்கைகளிலிருந்தும் அவர் அதிகாரங்களிலிருந்தும் விலக்கப்பட்டனர். தாங்கள் ஏற்படுத்திய முதன்மை தலைவனாரின் வம்சாவளியினர் இன்றும் பரவர்களின் மன்னர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.
இம்மன்னர்கள் தன் மக்கள் அனைவரிடமிருந்து வருவாய் ஈட்டுகின்றனர். இது நாளடைவில் கொல்லம் முதல் இலங்கையின் வங்காளை வரை விரிந்தது. பரவர்கள் சிதறி வாழ்ந்தாலும் இவர்கள் வலிமையும், முக்கியத்துவமும் குறைவதில்லை. முத்துக்குளித்தலே இவர்களின் முதன்மையான தொழிலாக இருக்கிறது.
அதில் எழும் வருமானம் இவர்கள் தலைவர்களால் பங்கிடப்படுகிறது. இத்தலைவர்கள் நாட்டையாளும் இராஜாக்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள சொந்தமாக படைவீரர்களும், ஆயுதங்களும் வைத்திருக்கின்றனர்.
----------------------------------------
Foot Notes:
The condition under which the paravas lived in the opening of 16th century-were beginning to be felt owing to the weakening of the paramount powers of Vijayanagar Empire are graphically set forth in a report, dated 19th December 1669,written by Van Reede and Laurena pyl, respectively Commandant of the coast of malabar and Canara and Senior merchent and chief of sea ports of madura.
This reports address to Van Goens, The Governor of ceylon and dutch India.
An extract from REPORT
TO THEGOVERNMENT OF MADRASON THE
INDIAN PEAEL FISHERIESIN THEGULF OF MANNARBY
JAMES HORNELL, f.l.s., Marint Biologist to the Government of Ceylon and Inspector of Pearl Banks.
MADRAS:
PRINTED BY THE SUPERINTENDENT, GOVERNMENT PRESS, 1905. Page 3,4,and 5.
பரவர்களின் தன்னரசு
Dev Anandh Fernando
23:07

பரவர் நாட்டின் (Fishery Coast) வடக்கே இராம நாட்டில் மறவர், பரவர் என்ற முரட்டு இனத்தவர்கள் வாழ்கின்றனர். இவர்களிடம் கோட்டைகள் அமைக்கப்பட்ட மன்னார், இராமர் கோயில் போன்ற தீவுகள் உள்ளன.
----------------------------------------
Foot Notes:
Historico-Political Geography description of several countries of the world printed for william France 1729,Page 180-81
இராமநாதபுரம் சீமையில் அமைந்துள்ள பெரியப்பட்டினம் முரட்டு இனத்தவர்களான மறவர், பரவரின் தலைநகர் ஆகும்.
----------------------------------------
Foot Notes;-
The Universal Dictionary of Trade and Commerce:Volume 1 by Malachy Postlethwayt-1766
மறவராகிய பரவர்கள் பாகம்-3
Dev Anandh Fernando
22:54

சேது சீமை மன்னர் ரெகுநாத தேவன் (அ) கிழவன் சேதுபதியால் கொல்லப்பட்ட போர்சுகீசிய பாதிரியார் புனித அருளானந்தர் (JOHN DE BRITTO) அவர்கள் தமது குறிப்பில்.....
முத்துக்குளித்துறை (அ) பரவர் நாடு என்று அப்பகுதி அழைக்கப்பட காரணம் அங்கு வசிக்கும் பரவர்கள் முதன்மையாக முத்துகுளித்தலில் ஈடுபடுகின்றனர்.
(முத்துக்குளித்தலில்) அவர்களுக்கிருக்கும் திறமை இந்தியாவிலிருக்கும் மற்ற மக்களை விட அதிகமாக காணப்படுகிறது. (ஸ்பானிஷ் மிஷனரி) புனித பிரான்சிஸ் சவேரியார் கிறிஸ்துவ மதத்தின் கோட்பாடுகளை அவர்களுக்கு போதித்தார், மேலும் அவர்கள் அனைவரும் திருச்சபை பரிந்துரைக்கும் நம்பிக்கையின் முழு தூய்மையுடன் அதை வெளிபடுத்துகின்றனர்.
மேற்கூறிய போர்சுகீசிய பாதிரி புனித அருளானந்தர் பரவர்களை தமது குறிப்பில் 'மறவர்' என்ற பெயரிலேயே குறிப்பிடுகிறார்.
----------------------------------------
Foot Notes:-
The Lives Of Father Paul Segneri, S.J., Father Peter Pinamonti, S.J., And The Ven. John de Britto, S.J., With An Essay On Catholic Home Missions, By The Rev. F. Faber, Priest Of The Oratory
by Faber, Frederick William, 1814-1863, Page 419-22
மறவராகிய பரவர்கள் பாகம்-2
Dev Anandh Fernando
22:49

ஜெர்மானிய லூதரன் கிறிஸ்துவ திருச்சபையின் மிஷனரி 'எட்வர்ட் ரைமண்ட் பெயர்லின்' தமது குறிப்பில்.....
போர்சுகீசியர்கள் முகமதியர்கள் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பவர்களாக கருதப்பட்டார்கள். (காரணம் போர்சுகீசியர்கள் முன் பல வருடங்களாக முகமதியர் பிடியில் சிக்கி தவித்தனர்.) ஒரு சமயம் 20,000 பரவர்கள் ஞானஸ்நானம் பெற முன் வந்தனர். ஞானஸ்நானம் பெற்று கொண்ட பின்னர் அவர்களுக்கு போதிய குருக்கள் இன்றி இருந்தனர்.
பரவர்கள் பெயரளவில் மட்டுமே கிறிஸ்துவர்களாக இருந்தனர். ஸ்பானிஷ் மிஷனரி புனித பிரான்சிஸ் சவேரியார் (கிபி1542) தென்னக கடற்கரைக்கு வருகை தந்திருந்த போது ஆயிரம் ஆயிரம் பரவர்கள் ஞானஸ்நானம் பெற்றிருந்ததை உண்மை என்று அறிந்து கொண்டார்.
மேற்கூறிய ஜெர்மானிய லூதரன் திருச்சபையின் மிஷனரி தமது குறிப்பில் பரவர்களை 'மறவர்' என்ற பெயரிலேயே குறிப்பிடுகிறார். இவ்வாவணம் லூதரன் மிஷனரி 'எட்வர்ட் ரைமண்ட் பெயர்லின்' ஜெர்மானிய மொழியில் தான் எழுதிய குறிப்புகளை அவர் உயிரோடு இருக்கும்போதே மதராஸ் சிவில் சர்வீஸ் அதிகாரி ஜே. டி.பி.கிரிப்பில் என்பவரால் கிபி 1875 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவை ஆகும்.
----------------------------------------
Foot Notes:-
The Land Of Tamulians and it's Missions,By The Rev. E. R. Baierlein. Page 107-9.
மறவராகிய பரவர்கள் பாகம்-1
Dev Anandh Fernando
22:42

கடற்கரை பரதவர் அளவிடும் முறை
ஒரு விரற்கணு அளவு 1 அங்குலம் (2.5 cm)
(ஒன்பது அங்குலம் 1 சாண்)
ஒரு சம்பை - 3 அங்குலம்
3 சம்பை - 1 சாண்
இரண்டு முழம் - 1 கசம்
இரண்டு கசம் - 1 பாகம்
880 பாகம் - 1 மைல்
2.25 மைல் - 1 குரோசம்
4 குரோசம் - 1 யோசனை ( 9 மைல்)
ஒரு விரற்கணு அளவு 1 அங்குலம் (2.5 cm)
(ஒன்பது அங்குலம் 1 சாண்)
ஒரு சம்பை - 3 அங்குலம்
3 சம்பை - 1 சாண்
இரண்டு முழம் - 1 கசம்
இரண்டு கசம் - 1 பாகம்
880 பாகம் - 1 மைல்
2.25 மைல் - 1 குரோசம்
4 குரோசம் - 1 யோசனை ( 9 மைல்)
குறிப்பு:
சம்பை- என்றால் நமது வலது கையில் கட்டை விரலை மடித்துக் கொண்டு மற்ற நான்கு விரல்களையும் ஒட்டினாற்போல வைத்தநிலையில் ஆட்காட்டி விரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடைப்படும் அகலப்போக்கான அளவு நான்கு விரற்கடை அளவு சம்பை எனப்படும்.
சாண்- என்றால் உள்ளங்கை சுன்டு விரல் நுனியில் இருந்து பெருவிரல் நுனி வரையிலான அளவு.
முழம்- என்றால் கையின் முழங்கை முட்டில் இருந்து நடுவிரல் நுனி வரையான அளவு.
கசம்- என்றால் நடுவிரல் நுனியில் இருந்து நெஞ்சுக்குழி வைரயான மனிதனின் பாதி அளவு.
பாகம்- என்பது இரு கைகளையும் நன்றாக அகல விரித்து ஒரு கை விளிம்பிலிருந்து மறு கை விளிம்புவரை எடுக்கும் அளவு.
பாகம் என்ற தமிழ் செல் ஆங்கிலத்தில் fathom என கூறப்படுகிறது இந்த பாகம் என்ற சொல்லுக்கு மார் என்ற வேறு தமிழ் சொல்லும் உள்ளது.
குரோசம் - என்றால் கடலில் ஒரு மரத்தில் இருந்து வேறு மரத்திற்கு வெள்ளை போட்டால் காணும் தூரம் அதாவது கூப்பிடு தூரம்.
யோசனை - என்றால் கடற்கரையில் கோரியில் ஏற்றப்பட்ட சுடர் காணும் தூரம்
இன்றும் பாகம் அளவுதான் கடற்கரையில் நடைமுறையில் உள்ளது.
மிக சரியான அளவிற்கு அளவு எடுக்கும் நபர் இரண்டு கசம் இருக்க வேண்டும். (6 அடி)
-ஜான் மில்டன் பர்னாந்து
கடலோடி கணக்கு
Dev Anandh Fernando
22:27
