வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 30 March 2024

கடலோடி கணக்கு
கடற்கரை பரதவர் அளவிடும் முறை

ஒரு விரற்கணு அளவு 1 அங்குலம் (2.5 cm)
(ஒன்பது அங்குலம் 1 சாண்)

ஒரு சம்பை - 3 அங்குலம்

3 சம்பை - 1 சாண்

இரண்டு சாண் - 1 முழம்

இரண்டு முழம் - 1 கசம்

இரண்டு கசம் - 1 பாகம்

880 பாகம் - 1 மைல்

2.25 மைல் - 1 குரோசம்

4 குரோசம் - 1 யோசனை ( 9 மைல்)


குறிப்பு:

சம்பை- என்றால் நமது வலது கையில் கட்டை விரலை மடித்துக் கொண்டு மற்ற நான்கு விரல்களையும் ஒட்டினாற்போல வைத்தநிலையில் ஆட்காட்டி விரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடைப்படும் அகலப்போக்கான அளவு நான்கு விரற்கடை அளவு சம்பை எனப்படும்.

சாண்- என்றால் உள்ளங்கை சுன்டு விரல் நுனியில் இருந்து பெருவிரல் நுனி வரையிலான அளவு.

முழம்- என்றால் கையின் முழங்கை முட்டில் இருந்து நடுவிரல் நுனி வரையான அளவு.

கசம்- என்றால் நடுவிரல் நுனியில் இருந்து நெஞ்சுக்குழி வைரயான மனிதனின் பாதி அளவு.

பாகம்- என்பது இரு கைகளையும் நன்றாக அகல விரித்து ஒரு கை விளிம்பிலிருந்து மறு கை விளிம்புவரை எடுக்கும் அளவு.

பாகம் என்ற தமிழ் செல் ஆங்கிலத்தில் fathom என கூறப்படுகிறது இந்த பாகம் என்ற சொல்லுக்கு மார் என்ற வேறு தமிழ் சொல்லும் உள்ளது.

குரோசம் - என்றால் கடலில் ஒரு மரத்தில் இருந்து வேறு மரத்திற்கு வெள்ளை போட்டால் காணும் தூரம் அதாவது கூப்பிடு தூரம்.

யோசனை - என்றால் கடற்கரையில் கோரியில் ஏற்றப்பட்ட சுடர் காணும் தூரம்
இன்றும் பாகம் அளவுதான் கடற்கரையில் நடைமுறையில் உள்ளது.

மிக சரியான அளவிற்கு அளவு எடுக்கும் நபர் இரண்டு கசம் இருக்க வேண்டும். (6 அடி)

-ஜான் மில்டன் பர்னாந்து
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com