வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 30 March 2024

மறவராகிய பரவர்கள் பாகம்-1

ஜெர்மானிய லூதரன் கிறிஸ்துவ திருச்சபையின் மிஷனரி 'எட்வர்ட் ரைமண்ட் பெயர்லின்' தமது குறிப்பில்..... 

போர்சுகீசியர்கள் முகமதியர்கள் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பவர்களாக கருதப்பட்டார்கள். (காரணம் போர்சுகீசியர்கள் முன் பல வருடங்களாக முகமதியர் பிடியில் சிக்கி தவித்தனர்.) ஒரு சமயம் 20,000 பரவர்கள் ஞானஸ்நானம் பெற முன் வந்தனர். ஞானஸ்நானம் பெற்று கொண்ட பின்னர் அவர்களுக்கு போதிய குருக்கள் இன்றி இருந்தனர். 

பரவர்கள் பெயரளவில் மட்டுமே கிறிஸ்துவர்களாக இருந்தனர். ஸ்பானிஷ் மிஷனரி புனித பிரான்சிஸ் சவேரியார் (கிபி1542) தென்னக கடற்கரைக்கு வருகை தந்திருந்த போது ஆயிரம் ஆயிரம் பரவர்கள் ஞானஸ்நானம் பெற்றிருந்ததை உண்மை என்று அறிந்து கொண்டார்.

மேற்கூறிய ஜெர்மானிய லூதரன் திருச்சபையின் மிஷனரி தமது குறிப்பில் பரவர்களை 'மறவர்' என்ற பெயரிலேயே குறிப்பிடுகிறார். இவ்வாவணம் லூதரன் மிஷனரி 'எட்வர்ட் ரைமண்ட் பெயர்லின்' ஜெர்மானிய மொழியில் தான் எழுதிய குறிப்புகளை அவர் உயிரோடு இருக்கும்போதே மதராஸ் சிவில் சர்வீஸ் அதிகாரி ஜே. டி.பி.கிரிப்பில் என்பவரால் கிபி 1875 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவை ஆகும். 

----------------------------------------
Foot Notes:-
The Land Of Tamulians and it's Missions,By The Rev. E. R. Baierlein. Page 107-9.






Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com