வில்லவராயர்
பரதகுல வில்லவராயர் கல்வெட்டுகள்:
வில்லவராயர் கல்வெட்டு: 1
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் ஐயா "ராவ் சாகிப் குஞ்சன் பிள்ளை"அவர்கள் தனது "Census of India, 1931 Travancore Part 1 பக்கம் எண். 381ல் பரதர் என்ற தலைப்பின் கீழ்......
"கத்தோலிக்க சமயத்துக்கு மாற்றப்பட்ட கன்னியாகுமரி பகுதி வில்லவராயர்கள், வில்லவராயர் என்னும் பரதவர்குல மகாராஜாவின் வம்சாவளியினராக தங்களை அடையாளம் காண்கின்றனர்" என்று குறிப்பிடுகிறார்.
மேலும் "ராவ் சாகிப் குஞ்சன் பிள்ளை" கூறுகையில்....
"கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருக்கும் 800 வருடங்கள் பழமையான கல்வெட்டு மேற்கூறிய பரதவர்குல மகாராஜாவின் ஆட்சி அதிகாரத்தை குறித்து நமக்கு சான்று பகர்கின்றன" என்று பதிவுசெய்கிறார்.
வில்லவராயன் என்னும் பட்டப் பெயரை இன்றும் திருநெல்வேலி சீமை மற்றும் நாஞ்சி வளநாட்டில் பரதவர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். "சூசன் பெய்லி" என்னும் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர் தனது "புனிதர்கள், பெண் தெய்வங்கள் மற்றும் அரசர்கள்" என்னும் நூலில்....
"பரதவர்கள் மத்தியில் இன்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் கிரிஸ்துவமல்லாத பரம்பரை பெயர்களாக வில்லவராயர், காலிங்கராயர்,
பூபாலராயர் மற்றும் ராயர் ஆகியவை என்று பதிவு செய்கிறார்.
வில்லவராயர் கல்வெட்டு: 2
மாவட்டம்: திருநெல்வேலி
வட்டம்: பாளையங்கோட்டை
ஊர்: மணப்படைவீடு
அரசு: -
அரசன்: -
வரலாற்று ஆண்டு: கி.பி. 1441
இடம்: முன்றீஸ்வரமுடைய நாயனார் கோவில் மகாமண்டபம் தெற்கு அதிட்டானம்
கல்வெட்டு குறிப்புரை: "மார்த்தாண்டப் பெருமாளான வில்லவராயர்" என்பவருக்கு நொந்தாவிளக்கு எரிவதற்காக கோயில் தேவன் மகள் 100 பணம் வழங்கிய செய்தியைத் தருகிறது.
----------------------------------------
Foot Notes:-
Census of India, 1931 Travancore Part 1 by Rao Sahib N. Kunjan Pillai. Pg 381.