டச்சுக்காரர்க்கு உதவிய பரதவர்
ஆங்கிலேய - பிரஞ்சு கூட்டு படையினருக்கு எதிராக டச்சுக்காரர்க்கு படையுதவி செய்த பரதவர்கள்..!
கி.பி. 1672 முதல் கி.பி. 1678 வரை ஐரோப்பியாவில், பிரெஞ்சு நாட்டவர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் இடையே மிகப்பெரிய போர் நடைபெற்று வந்தது. இங்கிலாந்து இப்போரிலே பிரான்ஸ் நாட்டுடன் கூட்டணி வைத்திருந்தது. கி.பி. 1673 ஆம் வருடம் இங்கிலாந்து, பிரானஸ் கூட்டு படையினர் டச்சுக்காரர்கள் வசமிருந்த இலங்கை மீது தாக்குதல் நடத்த இருப்பதாக அபாயம் ஏற்பட்டிருந்தது.
டச்சுக்காரர்கள், பிரான்ஸ் - இங்கிலாந்து கூட்டு படையினருக்கு எதிராக திருநெல்வேலி பரதவர் நாட்டு தலைவர்களிடம் உதவி கேட்டனர். பரதகுல தலைவர்கள் டச்சுக்காரர்களுக்கு ஆதரவாக 500 பரதவர்களை அங்கு அனுப்பி வைத்தனர்.
இப்படையை கொண்டு, இலங்கையில் தங்கள் வசமிருந்த கோட்டைகளை, எதிரி படையினரின் தாக்குதலுக்கு எதிராக வலுப்படுத்தினர். படையுதவி செய்த பரதவர்களுக்கு 250 கலம் நெல்லும், 138 கிலோ வெள்ளியும் கொடுத்தனர்.
----------------------------------------
ஆதாரம்:-
Encounters on the opposite coast by Markus P.M.Vink Pg 293