தாலமி குறிப்பிடும் கரையூர்வர் நாடு
கிரேக்க பயணி தாலமி'யின் குறிப்பில் பரதவர் நாடு..!
கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாலமி என்னும் கிரேக்க பயணி தனது பயணக் குறிப்பில் பரதவர் நாட்டை பற்றியும், அதன் முக்கிய நகரங்கள், முத்து குளித்தல் ஆகியவற்றை பற்றியும் பதிவு செய்கிறார்......
தாலமியின் குறிப்பு பரதவர் நாட்டை பற்றி கூறும் நான்கு விஷயங்களை இங்கு நாம் பார்ப்போம்.....
1. பரதவர் நாடு என்பது இன்றைய திருநெல்வேலி சீமையின் கடற்கரை பகுதி என்று குறிக்கப்படுகிறது. (குறிப்பு: மேற்சொன்ன கிரேக்க பயணி தாலமி தனது குறிப்பில் பரதவர் நாட்டை, பரதவர்களுக்கு வழங்கப்படும் மற்றொரு பெயரான கரையூர்வர் என்ற பெயரில் கரையூர்வர் நாடு என்று பதிவு செய்கிறார்)
2. முத்து குளித்தல் நடைபெறும் இடமாக கொற்கை வளைகுடா குறிக்கப்படுகிறது(இது இன்று மன்னார் வளைகுடா என்று அழைக்கப்படுகிறது)
3. தூத்துக்குடி, பரதவர் நாட்டின் முக்கிய துறைமுக நகரமாக குறிக்கப்படுகிறது.
4. தாமிரபரணி ஆற்று முகத்துவாரத்தில் அமைந்துள்ள, பரதவர் நாட்டின் முக்கிய நகரமான "கொற்கை" வர்த்தக ஸ்தலமாக திகழ்கிறது என்று குறிப்பிடுகிறது.
பரதவர் சமூகத்திற்கு கரையூர்வர் என்ற மற்றொரு பெயர் ஆதிகால தொட்டு உண்டு. இதனை பற்றி பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த காங்கேயனின் வலைவீசி ஓலைச்சுவடியும் பதிவு செய்கிறது பக்கம் எண். 53ல்.
__________________________________
ஆதாரம்:
Ancient India As Described by Ptolemy by J. W. McCrindle. Pg 57