பேட்டை
திருநெல்வேலி பேட்டை
பாண்டி நாட்டு கடலிலிருந்து எடுக்கப்படும் முத்துக்களை சந்தைப்படுத்த பரவர்கள் மூன்று அல்லது நான்கு பேட்டைகளை உருவாக்கியிருந்தனர். அவற்றுள் ஒன்றான திருநெல்வேலி டவுன் அருகிலிருக்கும் 'பேட்டை' முன்பு முத்து வணிகம் நடைபெற்று வந்த பரவர்களின் நகராக மட்டுமே இருந்தது...
பிரான்ஸ் நாட்டு ஏசுசபை பாதிரியார் மார்ட்டின் மற்றொரு பிரஞ்சு பாதிரியார் ஜோசப் பெர்ட்ராண்ட்க்கு கிபி 1838 ஜூலை மாதம் 14 ஆம் தேதி புன்னைகாயலிலிருந்து எழுதிய கடிமொன்றில்....
பரவர்களின் மிகப்பெரிய ஊராகிய 'பேட்டை' திருநெல்வேலிக்கு மிக அருகிலும் பாளையங்கோட்டையிலிருந்து ஒரு லீக் தூரத்திலும் உள்ளது என்று பதிவு செய்கிறார்...
குறிப்பு: இராமநாதபுரம் கடல்பகுதியில் குழிக்கபடும் முத்துகளின் விற்பனை மையம் பெரியபட்டிணத்தை அடுத்துள்ள முத்துபேட்டை. இங்கு பூர்வீக பரவர்கள் இன்றும் வாழ்கிறார்கள். முத்துகுழித்தல் வழக்கொழிந்தபின் இப்பரவர்கள் மீன்பிடித்தொழிலுக்கு மாறாமல் விவசாயம் சார்ந்த வெற்றிலை கொடிக்கால் தொழிலை முதன்மையாகச் செய்கிறார்கள்.
சோழமண்டல கடற்கரையில் மல்லிபட்டிணம் அருகே ஒரு முத்துபேட்டை உண்டு.
----------------------------------------
Encounters On The Opposite Coast by Markus Vink. Pg 77।