வீரமாமுனிவர் கல்லறை
மணப்பாடு நகரில் தான் பிரபல மிஷனரியும் தமிழ் மொழியின் மகா குருவுமான பாதிரியார் பெஸ்கி (வீரமாமுனிவர்) அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது கல்லறையை வீணாக தேடினேன். ஏனெனில் அனேகமாக இந்நகரத்தை ஆக்கிரமித்திருக்கும் மனல்மேடுகளின் கீழ் அவரை அடக்கம் செய்யப்பட்ட இடமிருக்கும். ஆயர் கால்டுவெல் மணப்பாடு நகரில் தான் வீரமாமுனிவர் அடக்கம் செய்யப்பட்டார் என்று கேள்விப்படுகிறார்.
ஆனால் அது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை நகராக இருக்கும் என்று எண்ணி அங்கு சென்றார். ஆனால் மணப்பாறை நகர மக்களும் அங்கு பணியாற்றிவரும் மிஷனரியும் வீரமாமுனிவர் திருநெல்வேலி சீமை மணப்பாடு நகரில் தான் இறந்து அடக்கம் செய்யப்பட்டதாக கூறினார்கள்.
வீரமாமுனிவர் சரியாக கிபி 1746 ஆம் ஆண்டு மரணமடைந்தார். வீரமாமுனிவர் மணப்பாடு நகரில் கிபி 1582 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சிலுவைநாதர் தேவாலயத்தின் பலிபீடம் பகுதியில் மற்ற மிஷனரிகள் அருகில் அடக்கம் செய்யப்பட்டார். ஆனால் அக்கோவில் தற்போது மணலால் மூடப்பட்டு 15 அடிக்கு கீழ் புதையுண்டு கிடைக்கின்றது.
வீரமாமுனிவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை குறிக்கும் வகையில் எந்த ஒரு கல்லறையும் கட்டப்படவில்லை. தற்போது இருக்கும் சிலுவையார் கோவில் கட்டுமான பணிகளின் போது இரண்டு மிஷனரிகளின் எழும்பு கூடு கிடைத்தது. ஆனால் அது யாருடையது என்ற குறியீடு கிடைக்கப்பெறவில்லை.
மணப்பாடு பரவர்களால் வீரமாமுனிவர் பெரிதும் பாரட்டப்படவில்லை என்று நான் நினைக்கிறேன். அற்புத அடையாளங்கள் செய்யக்கூடியர் என்னும் நற்பெயரைப் பெற அவர் அக்கறை கொண்டிருந்தால் கண்டிப்பாக அவர் கல்லறை பரவர்களால் பாதுகாக்கப் பட்டிருக்கும்.. .. என்று முடிக்கிறார் பிஷப் கால்டுவெல்.
----------------------------------------
Foot Notes:-
La Mission Du Madure Vol 3 By French Jesuit Father Joseph Bertrand. Pg: 59
History of Tinneveli By Bishop Caldwell. Pg: 243.
அச்சும் பதிப்பும், மா. சு. சம்பந்தன். பக்: 81