திரிகோணமலை யுத்தம்
கி.பி. 1552ல் பரதவர்க்கும் - ஆரியச் சக்கரவர்த்திக்கும் இடையே நடைப் பெற்ற திரிகோணமலை யுத்தம்..!
திருகோணமலை சமஸ்தானம் இலங்கையின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. திரிகோணமலையின் மன்னர் "வன்னிய ராஜா" இறந்தபோது இவரின் மகன் சிறுவனாக இருந்த காரணத்தால் "வன்னிய ராஜா" தம்பி "காபந்து ஆளுனராக" திரிகோணமலை நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.
கி.பி. 1552ல் யாழ்ப்பாண மன்னர் ஆரியச்சக்கரவர்த்தி முதலாம் சங்கிலி (1519-1561) என்பவர் இங்கு படையெடுத்து வந்து திரிகோணமலை நாட்டை கைப்பற்றி தனது ராஜ்யத்துடன் இணைத்ததோடு மட்டுமல்லாமல் எட்டு வயது சிறுவனாக இருந்த "வன்னிய ராஜா" குமாரனை கொலை செய்யவும் முற்பட்டார்.
"காபந்து ஆளுநர்" தனது அண்ணன் மகனை எப்படியோ காப்பாற்றி நாற்பது நம்பிக்கைக்குரிய பிரபுக்களுடன் திருநெல்வேலி பரதவர் நாட்டுக்கு தப்பி சென்றார், அங்குள்ள பரதகுல தலைவர்களிடம் உதவி கேட்டார். தங்களை நம்பி வந்தவர்களை கைவிடும் பழக்கம் பரதகுல சமூகத்திற்கு கிடையாது, எனவே அவருக்கு உதவ முடிவு செய்த பரதகுல தலைவர்கள் தங்களுக்கு கீழ் வெடிமருந்து ஆயுதங்களுடன்கூடிய இராணுவத்தை தயார் செய்கின்றனர்.
இப்படையை கொண்டு ஆரியச்சக்கரவர்த்தி முதலாம் சங்கிலி வசமிருந்த தன்னுடைய திரிகோணமலை நாட்டை தாக்குகிறார் "காபந்து ஆளுநர்''. மேற்சொன்ன தகவல் பிரஞ்சு வரலாற்று ஆசிரியரும் ஏசுசபை பாதிரியாருமான "டோமினிக்" அவர்கள் தனது "புனித பிரான்சிஸ் சவேரியார் வாழ்க்கை வரலாற்று" நூலில் பதிவு செய்தவைகளாகும்..
(இப்போரே தமிழர்கள் வெடிமருந்து ஆயுதங்கள் பயன்படுத்திய முதல் போராகும்..)
००००००००००००००००००००००००००००००००००००००००
ஆதாரம்:-
1,The Life of St Francis Xavier of The Society of Jesus, Apostle of Indies And of Japan. by Father Dominick Bohours, Pg 280
2,History of Ceylon An Abridged Translation of Professor Peter Courtenay's Work by MG. Francis. Pg 80