வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday, 7 December 2024

வாசற்படி மறியல்


பரவர்களின் வாசற்படி மறியல்

பரவர்களின் உயர்வகுப்பைச் சேர்ந்தவர்களின் திருமணம் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்துக்கள் கடைப்பிடிப்பதைப் போன்றே பல இன்றியமையாத அம்சங்களும் நாட்களும் இந்தச் சடங்குகளில் உள்ளன - இவர்கள் ஒரு காலத்தில் இந்துமதத்தினராக இருந்தனர் என்பதை இது ஐயந்திரிபற எண்பிக்கிறது. இவர்களின் திருமணத்தின் ஒரு விசித்திரமான அம்சம், திருமணச் சடங்கு நடைபெறும் தேவாலயத்திலிருந்து மணமகளின் வீட்டிற்கு, பதாகைகளுடன் ஊர்வலம் செல்வது - இது அவர்களின் மூதாதையர்களின் அரசவம்ச அடையாளமாகக் கருதப்படுகிறது.

அப்பதாகைகளில் பாம்பு, மயில், பனைமரம், சங்கு, சூரியன், யானை, மீன் போன்ற உயிருள்ள மற்றும் உயிரிலிப் பொருட்களின் சாயல்களுடன் கூடிய சித்திரத்தையல் செய்யப்பட்ட இருபத்தொரு கொடிச் சின்னங்கள் உள்ளன. இவை தவிர பெரிய குடை, கவசம் இன்னபிற மணசோடனைகளும் எடுத்துச் செல்லப்படுகின்றன. மணமகன், சாதித்தலைவமோரின் அரச ஆடைகளை ஒத்த 'கபா' என்ற விசேட ஆடையை அணிகிறார். மேலும் அவர் வரும் பாதையில் அவர் செல்ல வெண்நிறத் துணிகள் தரையில் விரிக்கப்பட்டன.

இந்துமதத்திலிருந்து வெளியேறிவிட்டபடியால் முன்னைப்போல, முடிந்தவரை ஒருவன் தனது முறைப்பெண்ணை [தந்தை வழி அத்தை மகளையோ / தாய்மாமன் மகளையோ] திருமணம் செய்துகொள்ளும் முறைக் கல்யாண நடைமுறையை அவர்கள் கடைப்பிடிப்பதில்லை; ஆனால் இந்த நடைமுறையையின் முந்தைய கடைப்பிடிப்பை சுட்டிக்காட்டும் ஒரு சுவையான சடங்கு இன்னும் எப்போதாவது நிகழ்த்தப்பெறுகிறது. இஃது 'வாசபாடி மறியல்' [நுழைவுத் தடை] என்று அழைக்கப்படுகிறது. 

மணமகனுக்கும், முறை நடைமுறையையின்படி மணமகளைத் திருமணம் செய்திருக்கவேண்டிய அவளின் உறவினருக்கும் இடையே ஒரு போலி சொற்போர் நடைபெறும். தேவாலய திருமணச் சடங்கு முடிந்து புதிய மணமக்கள் மணமகளின் வீட்டை அடைந்ததும், 'முறை மாப்பிள்ளை' தோன்றி மணமகனை வினவுகிறார்:
 
"மணம்நிறை மலர் மாலைகளுடன் - மணமகனைப் போல புதிய ஆடைகளும்
தலைப்பாகையுடன் பொருந்தமான சால்வையும் பூண்டு நகர்வீதியில் ஊர்வலமாக ஏன் வந்தீர்கள் என்று சொல்லுங்கள்."

மணவாளன்: "கத்தோலிக்கர்களின் கூட்டமே, என் தரப்பு நியாயத்தைச் சற்று கேளுங்கள்! தெய்வீகக் கன்னியாம் நமது பனிமய அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட புகழ்பெற்ற தேவாலயத்தில், இன்று காலை நமது அருட்திரு பாதிரியார் எனக்கொரு மணமகளை மணமுடித்தார்; அந்த மணமகளை நாடியே நான் வந்திருக்கிறேன்."

முறை மாப்பிள்ளை: "மணமகளைச் சந்திப்பது சரிதான், அதற்காக நீங்கள் வரத்தான் வேண்டும்; தீபங்களுடன் கூடிய இந்த ஆடம்பர ஊர்வலம் எதற்காக ? இந்தக் கம்பள விரிப்பு, இந்தப் பதாகைகள் மற்றும் இந்த மாபெரும் கூட்டம் எதற்காக? கல்யாணம் ஆனதிலிருந்து இவ்வளவு நேரம் மாப்பிள்ளை காலந்தாழ்த்தியது ஏன்?"

மணவாளன்: "நானிங்கு வருவதற்கான காரணத்தைக் கேட்பீர். நான் இவ்மணமகளை என் மனைவியாக ஏற்றுக்கொள்வது நமது இரட்சகராகிய இயேசுவின் விருப்பம். உங்கள் வீணாடம்பர வாதத்தை நிறுத்த உடன்படுங்கள். என் மணமகளை திருமணப் பந்தலுக்கு வெளியே அழைத்து வாருங்கள்."

முறை மாப்பிள்ளை: "கூடாரத்தில் உள்ள மணமகள் எனக்கு உரிமையான மணவாட்டி. ஆயிரம் பொற்காசுகள், யானைகள், குதிரைகள் மற்றும் கன்றுகளுடன் கூடிய பசுக்களை எனக்குக் கொடுத்தால் நான் அவளை உனக்கு மனைவியாகக் கொடுக்கிறேன்."

மணவாளன்: "நாளைய உதயத்தில் நீ கேட்பதை எல்லாம் தருகிறேன்;

எனது வாக்குறுதியின் அடையாளமாக தற்சமயம் நான் இந்த தங்க மோதிரத்தை உன்னிடம் ஒப்படைக்கிறேன்."

--------------------------------------------------------------------------‐-

Paravans - 'Vasapadi Mariyal'

[The marriage of a member of the upper classes is conducted with much ceremony. The ritual is in many essential features similar to that observed by the Hindus, and dates, no doubt, from the time when the Paravans were a Hindu caste. A peculiar feature of the wedding is the procession from the church (where the rite of marriage is performed) to the bride’s house with virudhus or banners, supposed to be the insignia of the kingly ancestors of the race. The emblems consist of twenty-one flags embroidered with representations of various objects, animate and inanimate, such as a snake, a peacock, a palmyra, a chank, the sun, an elephant, a fish, and so on. In' addition to these a large umbrella, a shield and other trappings are carried. The bridegroom wears a costume called kapa, resembling the state robes of the Jathitalavai-more, and white cloths are spread before him in his path.

Being no longer Hindus, they do not observe the morai system by which a man should always marry, where possible, a particular relation ; but a picturesque ceremony which points to the former observance of this rule is still occasionally performed. It is known as the “ Vasapadi Mariyal — “obstruction of the entrance ” — and consists in a mock contest of words between the bridegroom and the bride’s cousin, who, according to the morai rule, should have taken her in marriage. When the bridegroom reaches the bride’s house, after the church ceremony is over, the “ morai candidate ” appears and asks :—

Tell me why you came here in procession through the town With garlands of sweet-scented flowers —Attired like a bridegroom in head-dress and new cloths With a scarf over all to match.
Bridegroom — Hear, you assembly of Catholics, the justness of my cause !
In the glorious church, dedicated to the Virgin, Our Lady of the Snows, Our holy priest gave me a bride this morning in marriage;

To seek for that bride have I come.

Morai-bridegroom — Meet and right is it that you should come ; But why comes not the bridegroom all this while since the marriage was made ? What means all this pompous procession with torches, This spreading of carpets, these banners and this great gathering ?

Bridegroom — Hear the reason of my coming.

It is the will of Jesus our Saviour that I take the bride to be my wife. A truce to your prating vainglorious chatter ! Bring out the bride to the marriage- tent.

Morai-bridegroom — The bride in the tent is my rightful bride. Give me a thousand pieces of gold, Elephants, horses, and cows with calves, And I give her to you to be your wife.

Bridegroom-- At sunrise tomorrow I give all that you ask ; In token of my promise I surrender this gold ring
 
*You know well, as the old poetess Auvaiyar says; In making gifts we are the foremost.]
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com