வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 5 December 2017

அகநானூறில் பரதவர்
அகநானூறில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்

பாடல்

140 நெய்தல்


பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் #பரதவர்

இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த

வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,

என்றூழ் விடர குன்றம் போகும்


5

கதழ் கோல் உமணர் காதல் மடமகள்

சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி,

''நெல்லின் நேரே வெண் கல் உப்பு'' எனச்

சேரி விலைமாறு கூறலின், மனைய

விளி அறி ஞமலி குரைப்ப, வெரீஇய

10

மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு,

இதை முயல் புனவன் புகைநிழல்j கடுக்கும்

மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு

எவ்வம் தீர வாங்கும் தந்தை

கை பூண் பகட்டின் வருந்தி,

15

வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- அம்மூவனார்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com