அகநானூறில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்
70 நெய்தல்
கொடுந் திமிற்
#பரதவர் வேட்டம் வாய்த்தென,
இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி,
கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன்
5
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற,
பலரும் ஆங்கு அறிந்தனர்மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றை, புதுவது
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
10
கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப்
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
வென் வேற் கவுரியர் தொல் முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை,
15
வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த
பல் வீழ் ஆலம் போல,
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.
தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்
70 உரை

வி - ரை.) ஆன்றிசின் - அமைக. ஈதலால் இன்ப முண்டாகு மென்பதனை, 1'இத்துவக்கும் இன்பம்’ என்பதனால் அறிக. செய்பொருட்டிறவர் - பொருள் செய்யும் கூற்றினர். மோரியர் வடநாட்டின்கண் ணிருந்த அரச வகுப்பினர். இவர்கள் சில பகைவரோடு போர் கருதித் தெற்கே சென்ற காலை, குறுக்காக நின்றதொரு மலையைத் தேருருள் செல்லுமாறு குறைத்து வழிசெய்துள்ளார் என்ற வரலாறு, ‘தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர், பணியா மையிற் பகைதலை வந்த, மாகெழு தானை வம்ப மோரியர், புனைதேர் நேமி புருளிய குறைத்த, இலங்குவெள் ளருவிய வறையா யும்பர்’ (251) எனவும், ‘முரண்மிகு வடுநர் முன்னுற மோரியர், தென்றிசை மாதிரம் முன்னிய வரவிற்கு, விண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத், தொண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த, அறையிறந் தவரோ சென்றனர்’ (281) எனவும் இந்நூலுள்ளும், 2'வென்வேல், வெண்பொரு நெடுங்கடைக் கொடித்தேர் மோரியர், திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த, உலக விடைகழி யறைவாய்நிலைஇய’ எனப்புறநானூற்றிலும் வருவனவற்றான் அறியப்படும். சிலை - ஒரு மரமுமாம். நன்கலம் தரூஉம் - பெற்ற கலன்களைப் பாணர் முதலாயினார்க்குத் தரும் என்றுமாம்.