வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 6 December 2017

அகநானூறில் பரதவர்
அகநானூறில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள். 


65 பாலை

உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும்

அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம்

ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்

சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்;


5

நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற்

பாடிச் சென்ற பரிசிலர் போல

உவ இனி வாழி, தோழி! அவரே,

பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச்

செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும்


10

மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி,

மீன் கொள் #பரதவர் கொடுந் திமில் நளி சுடர்

வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு,

மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை

உயவல் யானை வெரிநுச் சென்றன்ன


15

கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி,

காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல்

ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம்; ''பணைத் தோள்,

நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை,

நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு


20

அரியவால்'' என அழுங்கிய செலவே!


வேறுப்பட்ட தலைமகட்குத் தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி சொல்லியது. - மாமூலனார்

வருங்காலை, யிடைச்சுர மருங்கிற் றவிர்த் லில்லை, யுள்ளம் போல வுற்றுழி யுதவும், புள்ளியற் கலிமா வுடைமை யான” எனத் தொல்காப்பியனார் கூறுமாற்றானும் அறிக: ஐதியம்புதல் - நடக்க நடக்க விட்டி சைத்தல் என்றலுமாம்.

(மே - ள்.) 1'எருமையும் மரையும் பெற்றமம் நாகே’ என்னம் சூத்திரத்து, பெற்றத்திற்கு நாகு எனும் பெண்பாற் பெயர் வந்ததற்கு, ‘உடனிலை வேட்கையின் மடநாகு தழீஇ’ என்பதனை எடுத்துக் காட்டினர், பேரா.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com