வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 10 May 2020

சதுரங்கப்பட்டினம்
சதுரங்கப்பட்டினம் என்ற ஊர் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்திற்கும் கல்பாக்கத்திற்கும் இடையே அமைந்துள்ளது . இந்த ஊர் மெல்ல துணி (Muslin) நெசவுக்கும், செங்கல் உற்பத்திக்கும் பிரசித்தி பெற்றது. 400 வருடங்களுக்கு முன்பு ஐரோப்பாவை சேர்ந்த போர்த்துகீஸ், டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்கள் இந்தியாவின் செல்வ செழிப்பபாலும் இயற்கை வளர்த்தாலும் ஈர்க்கப்பட்டு வர்த்தகம் செய்ய நம் நாட்டை நாடி வந்தனர். பதினேழாம் நூற்றாண்டில் டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி சட்ராஸ் என்கின்ற சதுரங்க பட்டினத்தில் வர்த்தக மையத்தை அமைத்தது. 

பாதுகாப்புக்காக அந்த மையத்தை சுற்றி உயரமான சுவர்கள் மற்றும் அரண்கள் அமைத்து வலுவான கோட்டையை கட்டியது. வர்த்தக ரீதியான போட்டியால் ஆங்கிலேயர்களுக்கும் டச்சுக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. பலம் பொருந்திய ஆங்கிலேயர்கள் கடற்படை தாக்குதலில் ஈடுபட்டு அந்தக் கோட்டையை குண்டுகள் வைத்து தகர்த்து 1796இல் கைப்பற்றினர். அதன் பிறகு சிறிது காலம் 1818 இல் டச்சு மீண்டும் கைப்பற்றி 1854 ஆங்கிலேயரிடம் பறிகொடுத்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய தொல்லியல் துறை இந்த கோட்டையை பராமரித்து வருகின்றது. எனினும் தற்போது பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. 

2003இல் இந்தியத் தொல்லியல் ஆய்வு மையத்தால் பெரும் செலவில் கோட்டை கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டன. கோட்டையின் நுழைவாயில் மேல் அழகிய மணி கோபுரமும் (bell tower) கீழே இருபுறமும் பீரங்கிகள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. கோட்டை செவ்வக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டையை சுற்றி உயரமான சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. நான்கு புறமும் அரண்கள் அமைக்கப்பட்டு தற்போது மூன்று அரண்கள் மட்டுமே உள்ளன. தெற்குப் பகுதியில் அழகிய கல்லறை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 1620 முதல் முதல் 1769 வரை தேதியிட்ட 20க்கும் மேற்பட்ட கல்லறைகள் அங்கு உள்ளன. 

கல்லறை ஒட்டியவாறு தென்மேற்குப் பகுதியிலும் வட மேற்குப் பகுதியிலும் ரகசிய அறைகள் உள்ளன . கோட்டை வளாகத்தில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமாக அழிந்த நிலையில் அடித்தளம் மட்டுமே காணப்படுகின்றன. இந்தியத் தொல்லியல் ஆய்வு மையத்தால் 2003இல் சீரமைக்கப்பட்ட இரண்டு பெரிய கிடங்குகள் கோட்டையின் கிழக்குப் பகுதியில் உள்ளன. யானை மேல் ஏறுவதற்கான தலங்கள் உள்ளன. உணவு அருந்தும் அறைகள் மற்றும் நடன அறைகள் தற்போது தரைமட்டமாக காட்சியளிக்கின்றன.

கோட்டையின் சுற்றுப்புற சுவர் மீது ஏறி பார்த்தால் நூறு அடி தொலைவில் கடற்கரையும் பரந்து விரிந்த வங்காள விரிகுடா காட்சியளிக்கின்றது. தற்போது கோடைகாலப் வெப்பத்தால் கோட்டை சுற்றி உள்ள பசுமையான புல்வெளிகள் காய்ந்து பொட்டல் காடாக காட்சி அளிக்கின்றது. இந்த கோட்டையை காண வருபவர்கள் மிகக் குறைவு என்பதை பார்வையாளர்கள் பதிவேட்டில் உள்ள உள்ளீடுகளை பார்க்கும்போது தெரிகிறது. இந்திய தொல்லியல் துறை இந்த நினைவு சின்னத்தை சீரமைத்து பராமரிப்பு செய்து மக்களிடையே பிரபலப்படுத்தினால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து மக்களிடையே வரலாற்று விழிப்புணர்வு ஏற்படும்.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com