வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 19 May 2020

கட்டுமரம்

கடற்பயணங்களின் கட்டுமரத்திற்கு "கட்டுமரம்" என்கிற மூலத்தமிழ்ச்சொல்லை விட உலகில் வேறு எந்த ஒரு மொழியிலாவது , வேறு ஏதாவது ஒரு சொல் பயன்படுவதை நிரூபிக்க முடியுமா? என்றால் அது முடியாது ஏனெனில் கடலின் பயணங்களுக்கான கட்டுமரமே, மனிதகுலத்தின் முதலாவது உன்னதமான கண்டுபிடிப்பு.

ஆரம்பத்தில் கடலைக் கண்டு பயந்த மனிதக்குலங்களிற்கிடையே, கடலையும் தாண்ட திராணியோடு நின்ற ஒரு மனிதக்கூட்டம் தமிழைப்பேசிய படி கட்டுமரங்களோடு புறப்பட்டது. கடலின் அமானுஷ்யங்களும் நாடுகாண் பயணங்களின் வேட்கையும் கடலை தமிழர்களோடு பிணைத்த வரலாறுகள் எல்லாமே மிகச் சுவாரசியமான கதைகள். இதற்கான தமிழர்களின் பெரும்பாய்ச்சலான ஒரு ஆரம்ப கட்ட கண்டுபிடிப்பே கட்டுமரம்.

இரண்டு அல்லது இரண்டுக்கு மேல் நன்கு நீளமான சிறிது அகலமான மரக்கீலங்களை சமாந்தரப்படுத்தி குறுக்கான இரண்டு கட்டுக்களால் இணைத்துவிட்டால் கட்டுமரம் தயார். மரத்தின் தன்மை , மரக்கீலங்களில் நீளஅகலம் , பயணத்தவர் எண்ணிக்கை , காலநிலை , பருவக்காற்றுக்கள் , கடலின் வற்றுப்பெருக்குக்கள் என்பவைகள் தொடர் அவதானிப்புக்கள் ஆராய்வுகள் மூலம் கட்டுமரங்களை பயன்படுத்தும் கடற்பயணங்களில் தமிழர்கள் உச்சம் கண்டார்கள்.


கட்டுமரத்தின் கண்டுபிடிப்பை தொடர்ந்து அதை வடிவங்களை காலப்போக்கில் மாற்றியமைத்து நீண்ட தூர ஆழ்கடல் பயணங்களையும் வெற்றிகரமாக செய்யத்தொடங்கினர் தமிழர்கள். அப்பயணங்களில் போகுமிடங்களிலும் அங்குள்ளவர்களுக்கு கட்டுமரங்களை தமிழர்கள் அறிமுகப்படுத்தியதற்கான மறுக்க முடியாத சான்றே உலகெங்கும் உள்ள அத்தனை மொழிகளிலும் பரவிக்கிடக்கின்ற "கட்டுமரம்" என்ற மூலத்தமிழ்ச்சொல்லின் வீச்சு ஆகும். 

பழந்தமிழர்களின் கண்டங்கள் தாண்டிய கடற்பயணங்களை பல உள்ளூர் , மேலைத்தேய ஆய்வாளர் பெருமக்களும் உறுதிசெய்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு கட்டுமரத்தொழில் நுட்பங்கள் மற்றும் பாய்க்கப்பல்களை பயன்படுத்தி இலங்கை மற்றும் தென்னிந்திய மக்கள் ஆழ் கடலில் பயணித்ததாகவும், இதன் மூலம் மாலைதீவுகள் லட்சதீவுகள் என்பவைகளையும் தாண்டி அவுஸ்திரேலியப்பகுதிகள் வரை மானுடவியல் நீட்சிகளை அம்மக்கள் கொண்டிருந்ததாக The Dispersal of Austonesian boat forms in the indian ocean என்கிற ஆய்வுக்கட்டுரைத்தொகுப்பொன்றில் Mahdi Waruon ஆய்வாளர்கள் எழுதியிருப்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும். கி்மு1000களில் இருந்து இந்தப்பயணங்கள் இந்து சமுத்திரப்பகுதியில் நடைபெற்றது என்றும் ஊகிக்கின்றனர். 

காலப்போக்கில் கட்டுமரம் குறைவடைந்து படகுகள் வந்துவிட்ட பிறகு இன்னொரு தமிழ்ச்சொல்லான " படகு " என்பதை இந்தியமொழிகள் மற்றும் கிழக்காசிய மொழிகள் தமது மொழிகளில் வரித்துக்கொண்டன.

உதாரணமாக
  • Telugu - Padava
  • Kannada - padahu
  • Javanese - perahu
  • Kadazan - padau
  • Maranao - padaw
  • Cebuano - paraw
  • Samoan - folau
1697 இல் ஆங்கிலேய நாடுகாண் பயணி William Dampier உலகத்தை சுற்றும் தன் பயணத்தில் தென்கிழக்காசியாவின் தமிழர்களை கடலில் பயணிக்கும் வழியில் பல இடங்களில் கண்டதான பதிவுகளை செய்திருக்கிறார். அதில் கட்டுமரங்களை பற்றிய குறிப்புக்களையும் எழுதியிருக்கிறார். A New Voyage Round the World என்ற இந்நூலில் மலபாரிகளும் (தமிழர்களும்) கடற்கலங்களை கட்டுமரம் என்றே அழைப்பதாகவும் கூறுகிறார்.

கீழே உள்ள அட்டவணையில் உலகில் உள்ள அத்தனை பெரிய மொழிகளையும் அவற்றில் கட்டுமரத்துக்காக பயன்படுத்தப்படும் சொற்களை இணையத்தின் உதவியோடு தேடி அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. 

Afrikaans - catamaran
Albanian - katamaranas
Azerbaijani -  katamaran
Basque - katamaran
Belarusian - катамаран
Bosnian - katamaran
Bulgarian - катамаран
Burmese - ကွမ်းခြံကုန်း
Catalan - catamarà
Cebuano - catamaran
Chinese - 双体船
Chinese - traditional 潑婦
Corsion - catamaranu
Croatian - katamaran
Czech - katamarán
Danish - katamaran
Dutch - katamaran
Esperanto - katamarano
Estonian - katamaraan
Filipino - katamaran
Finnish - katamaraani
French - catamaran
Galician - cat amara
Georgian - კატამარანი
German - Katamaran
Greek - σχεδίας ( katkin)
Haitian - creole kata
Hausa - katamaran
Hawaiian - catamaran
Hindi - कटमरैन
Hmong - catamaran
Icelandic catamaran
Igbo katamaran
Irish catamaran
Italian catamarano
Javanese katamaran
Kazakh катамаран
Khmer catamaran
Kinyarvanda catamaran
Korean 뗏목
Kurdish katamaran
Kyrgyz катамаран
Lao katamaran
Latin catamaran
Latvian katamarāns
Lithuanian katamaranas
Luxembourg katamaran
Macedonian катамаран
Malagasy catamaran
Malay katamaran
Maltese katamaran
Maoris catamaran
Mangolian катамаран
Norwegian katamaran
Nyanja catamaran
Pashoto کټامران
Polish katamaran
Portuguese catamarã
Romanian catamaran
Russian катамаран
Sinhala කට්ටමරම
Spanish catamarán
Turkish katamaran
Turkmen katamaran
Ukraine сварлива жінка , катамаран
Uyghur catamaran
Uzbek katamaran
Welsh catamaran
Western frision katamaran
Yiddish קאַטאַמעראַן
Yoruba catamaran
- துவா
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com