வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 9 May 2020

மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு கோபுரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வடக்கு கோபுரம் 1564-72 ல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது என்றபோதிலும், அந்த கோபுரம் மட்டும் கட்ட கட்ட இடிந்து விழுந்தது. அதனால் தான் அதற்கு இன்றளவும் மொட்டை கோபுரம் என்று பெயர்.

பின்குறிப்பு:-

தீவிர மீனாட்சி அம்மன் பக்தரான அமராவதிபுதூர், வயிநாகரம் நாகப்ப செட்டியார், ஒவ்வொரு நாளும் அன்னையை வழிபட்ட பின்னரே இரவு உணவு உட்கொள்வார். மீனாட்சி அன்னைக்கு தங்க தாம்பாலமும், தங்க குடமும் வழங்கி மகிழ்ந்தார்.

ஒரு நாள், வெளி ஊரில் இருந்து வந்த போது, அவரது வண்டி மாடு மேலும் இழுக்க மறுத்ததால், அங்கேயே தங்கி விட்டார். மீனாட்சி அன்னையை காண முடியாத வருத்தம் அவருக்கு. இரவு உணவு உண்ணாது அன்னையையே நினைந்துருகினார். அப்போது மீனாட்சி அம்மன், ஒரு சிறுமியாக, பச்சை பாவாடையுடன் தங்க தாம்பாலத்தில் அவருக்கு உணவு அளித்தாள். மறுநாள் காலை, கோவில் அர்ச்சகர்களும், அதிகாரிகளும், அந்த தங்க தாம்பாலத்தை காணவில்லை என்று பதரினர். காலை மதுரை வந்த நாகப்ப செட்டியார், அந்த தாம்பாலத்தை கொடுத்து, தனக்கு நிகழ்ந்த அந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். அன்று முதல், அவர், மதுரை எல்லையை விட்டு செல்வதில்லை என முடிவெடுத்து மதுரையிலே அன்னையை நித்தம் வணங்கியே வாழ்ந்தார்.

அத்தகைய அன்னையின் அருள் பெற்ற பக்தரான வயிநாகரம் நாகப்ப செட்டியார் தான் மொட்டை கோபுரமாக இருந்த வடக்கு கோபுரத்தை, தனது செலவில் 152 அடி உயர பிரம்மாண்ட கோபுரமாக, 1878 ஆம் ஆண்டு கட்டி முடித்தார்.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com