இன்று நாங்கள் பழங்கால கல்நகரத்தை சீனாவில் கண்டுபிடித்துள்ளோம் என்று உலக தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் பரவர்களோ வருடா வருடம் ஒரு கல்நகரத்தை உருவாக்கி வந்தனர் என்று எத்தனை பேருக்கு தெரியும்.
"சீசர் ஃபிரடெரிக்" என்ற இத்தாலி நாட்டு பயணி இது குறித்த குறிப்புகளை தமது நூலில் நமக்கு தருகிறார். அவற்றுள் சில ....
கன்னியாகுமரி தொடங்கி இலங்கையில் உள்ள சிலாபம் முடிய உள்ள இடைப்பட்ட கடற்பரப்பில் முத்து குளித்தல் நடைபெற்று வந்தது. ஒவ்வொரு வருடமும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் முத்து குளித்தல் ஆரம்பமாகி, பிறகு தொடங்கிய பதினைந்தாவது நாளில் முடிவடையும்.
பரவர்களுள் மூழ்கி முத்தெடுப்பதில் மிக சிறந்தவர்கள். கன்னியாகுமரி முதல் இலங்கையின் சிலாபம் முடிய உள்ள இடைப்பட்ட கடற்பரப்பில் கடலுக்கு அடியில் சென்று முத்து சிப்பிகளின் இருப்பை கண்டறிவர். அதன்பிறகு கடலில் எந்த இடத்தில் முத்து சிப்பிகள் தென்படுகிறதோ அதற்கு எதிரே உள்ள கரையில் கற்களாலான ஒரு நகரத்தை கட்டியெழுப்புகின்றனர் பரவர்கள்.
இந்த கல்நகரில் உள்ள அம்சங்கள்:
பரவர்கள் அங்கு தற்காலிகமாக தங்கியிருந்து முத்துக்குளிக்க அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் முழுவதும் கற்களால் கட்டப்படுகிறது. கூடவே கடலில் மூழ்கி எடுத்த முத்துக்களை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வசதியாக முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கடைகளை கொண்ட ஒரு பஜார் உருவாக்கப்படுகிறது.
முத்து குளித்தல் பதினைந்து நாட்களில் முடிவடைந்து, முத்துக்களை பஜாரில் வியாபாரிகளுக்கு விற்பனை செய்த பிறகு தாங்கள் கட்டியிருந்த மாபெரும் கல்நகரத்தை பரவர்கள் தீக்கிரையாக்குவர்.
०००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००
ஆதாரம்:
Purchas His Pilgrims Vol X Pg. 105
- UNI
பண்டைய சேரநாட்டில் பரவர்கள் பெயரில் வழங்கிவந்த வயல் நிலங்கள்:
ஸ்ரீ வல்லவங்கொதை என்பவன் கிபி பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த வேணாட்டு அரசன் ஆவான். இவன் கேரளா மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் திருவண்வண்டூர் நகரில் அமைந்துள்ள கோவிலுக்கு பரவர்களுடைய வயலிலிருந்து ஆண்டுதோரும் இருபது கலம் நெல் தானமாக ஒதுக்கியுள்ளதை பற்றி.....
"கோவிந்தனார்கரி நூற்றுக்கலமும் #பரவனார்கரி இருபது கலமும்.... "
என்று திருவண்வண்டூர் கோவில் கல்வெட்டு பதிவு செய்கிறது.
இதன்மூலம் சேரநாட்டில் வாழந்த பரவர்கள் தங்களுடைய வயல்களுக்கு தங்களுடைய இனப்பெயரையும் அதற்கு பெயராக வைத்துள்ளனர் என்பதனை ஆதாரபூர்வமாக அறியமுடிகிறது.
०००००००००००००००००००००००००००००००००००००००००००००००
Foot Notes:-
Travancore Archaeological Series Vol II Part II Pg. 23, 24
- UNI
சேரநாட்டில் பரவர்கள்
Dev Anandh Fernando
23:17

விஜயநகர பேரரசு ஆட்சியில் பாண்டிய நாடு
விஜயநகர பேரரசின் பிரதிநிதியாக கிபி 1529 முதல் கிபி 1623 வரை மதுரையை ஆண்டவர்களின் பெயர் பட்டியல்....
1.விசுவநாத நாயக்கர்(1529-1564)
2.குமார கிருஷ்ணப்ப நாயக்கர்(1564-1572)...
3.வீரப்ப நாயக்கர்(1572-1595)
4.இரண்டாம் குமார கிருஷ்ணப்ப நாயக்கர்(1595-1602)
5.முத்து கிருஷ்ணப்ப நாயக்கர்(1602-1609)
6.முத்து வீரப்ப நாயக்கர் (1602-1623)
7.திருமலை நாயக்கர் (சில ஆண்டுகள் மட்டுமே)
விஜயநகர பேரரசின் மதுரை ஆளுநர்கள் தங்களுக்கு கப்பம்கட்ட மறுக்கும் நாடுகளின் செல்வங்களை கொள்ளையடித்து வந்தனர். அறிவிப்பின்றி அந்நாடுகளுக்குள் வடுகப்படைகளுடன் நுழைந்து கிராமங்களை சூறையாடி செல்வதாகும். இவ்வாறு, விஜயநகர பேரரசுக்கு வரிகட்ட மறுக்கும் திருவிதாங்கூர் மகாராஜாவின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளை நாயக்கர் படைகள் ஒவ்வொரு வருடமும் கொள்ளையடித்து செல்வது வழக்கம்.
ஒவ்வொரு வருடமும் விஜயநகர பேரரசின் மதுரை நாயக்கர் படைகள் வரி கெட்ட மறுக்கும் பரவர் நாட்டை தாக்கி கிராமங்களை கொள்ளையடித்து செல்லுவது வழக்கமாக இருந்தது. கிபி 1596 ஆம் ஆண்டு பரவர்கள் சார்பில் நல்லுறவை ஏற்படுத்த மதுரை சென்றிருந்த போர்சுகீசிய ஏசுசபை பாதிரியார் கொன்சாலோ பெர்ணான்டஸை மன்னர் இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர்(1595-1602) வரவேற்று தன் தலைநகர் மதுரையில் தங்கியிருந்து வணிகம் செய்து வரும் பரவர்களின் வழிபாட்டு தேவைகளுக்காக அங்கேயே தேவாலயம் மற்றும் மடாலயம் கட்டி கொள்ள அனுமதி வழங்கினார்.
புதிதாக கட்டப்பட்ட இத்தேவாலயத்தில் பங்கு தந்தையாக பணியாற்றியது மட்டுமின்றி பரவர்கள் சார்பில் நாயக்கர் மன்னர் அரசவையிலும் போர்சுகீசிய ஏசுசபை பாதிரியார் கொன்சாலோ பெர்ணான்டஸ் இடம்பெற்றிருந்தார். அடுத்து வந்த விஜயநகர பேரரசின் மதுரை ஆளுநர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர்(1602-1609) பரவர்களுடன் சுமுகமான போக்கினை கைகொள்ளவில்லை. இம்மன்னரின் தளவாய்களில் ஒருவராக சடையக்க தேவர்(எ) உடையான் சேதுபதி என்னும் தமிழர் நியமனம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.(சேதுபதி மன்னர் வரலாறு Dr. எஸ். எம். கமால் பக்கம்.20)
கிபி 1606 ஆம் ஆண்டு போர்சுகீசிய வணிக கப்பல் விபத்துக்குள்ளாகி தூத்துக்குடி அருகில் சேதமடைந்த நின்று விட்டது. கப்பலில் இருந்து பொருட்களை பரவர்கள் மீட்டனர். இதற்கு நன்றியாக மீட்கப்பட்ட பொருட்களில் நான்கில் ஒரு பகுதியை பரவர்களுக்கு விட்டுதருவதாக போர்சுகீசியர்கள் வாக்களித்திருந்தனர்.
இதனை கேள்வியுற்ற முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் தனது அரசவையில் இருந்த மேற்கூறிய போர்சுகீசிய ஏசுசபை பாதிரியார் கொன்சாலோ பெர்ணான்டஸை பரவர்களிடம் தூதனுப்பி கப்பல் மீதும் அவற்றிலுள்ள பொருட்கள் மீதும் உரிமை கோரி 5,00,000 போர்சுகீசிய நாணயங்களை கேட்டு மிரட்டினார். தரவில்லையெனில் கொன்று விடுவதாகவும் அச்சுறுத்தினார்.
பரவர்கள் மறுக்கவே முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் தமது படைகளை அவர்களுக்கெதிராக போருக்கு அணிவகுத்து சென்றார். பரவர்களுடன் இரண்டு மாதங்கள் கடுமையாக மோதி பின்வாங்கினார் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர். இதற்கு அடுத்து வந்த முத்து வீரப்ப நாயக்கர் (1609-1623) தமது விஜயநகரபேரரசு படைகளுடன் வரிகெட்ட மறுத்த பரவர் நாட்டை கிபி 1612 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தாக்கி, கிராமங்களை கொள்ளையடித்து சென்றார். இம்மன்னருக்கு அடுத்து வந்தவரே திருமலை நாயக்கர். இந்த திருமலை நாயக்கரின் ஆட்சியின் தொடக்கத்திலேயே விஜயநகர பேரரசின் ஆட்சி பாண்டி நாட்டில் முடிவுற்று தன்னாட்சி உருவானது.
----------------------------------------
Foot Notes:-
Travels of Jesuit in to various parts of the world by John Lockman. Pg 367.
Aravidu Dynasty of Vijayanagar by Jesuit Henry Heras. Pg 363-64
Goa Portuguese Doc,HAG,MDR,livro 12,Codice 15/3/4.
- UNI
விஜயநகர ஆட்சியில் பாண்டி நாடு
Dev Anandh Fernando
07:27

பரதகுல காலிங்கராயன் கல்வெட்டு:
காலிங்கராயன் என்னும் பட்டப் பெயரை இன்றும் திருநெல்வேலி சீமை மற்றும் நாஞ்சி வளநாட்டில் பரதவர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். "சூசன் பெய்லி" என்னும் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர் தனது "புனிதர்கள், பெண் தெய்வங்கள் மற்றும் அரசர்கள்" என்னும் நூலில்....
"பரதவர்கள் மத்தியில் இன்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் கிறிஸ்துவமல்லாத பரம்பரை பட்டப் பெயர்களாக காலிங்கராயர், வில்லவராயர், பூபாலராயர் மற்றும் ராயர் ஆகியவை" என்று பதிவு செய்கிறார்.
நாஞ்சி வளநாட்டில் காலிங்கராயர் என்னும் பட்டப் பெயர் உள்ள பரதகுல மன்னர்கள் ஆட்சி புரிந்ததையும், அவர்களுள் 17 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற மன்னர் செண்பகராமன் காலிங்கராயனை பாட்டுடைத் நாயகனாக பாடப்பெற்ற தமிழ் சிற்றிலக்கிய வகையில் ஒன்றான "செண்பகராமன் பள்ளு" பதிவு செய்கிறது.
காலிங்கராயன் கல்வெட்டு:-
மாவட்டம்: திருநெல்வேலி
வட்டம்/ஊர்: பாளையங்கோட்டை
அரசு: பிற்கால பாண்டிய பேரரசு(கிபி900-1293)
அரசன்: -
இடம்: கோபாலசாமி கோயில் கருவறை மேற்கு ஜகதிப் படையிலுள்ளது
கல்வெட்டு குறிப்புரை: துண்டு கல்வெட்டுகள் நிலக்கொடை பற்றிக் கூறுகின்றன. முன் கல்வெட்டில் இடம்பெற்ற காலிங்கராயன் என்னும் பாண்டியர் அதிகாரி இக்கல்வெட்டில் குறிப்பிப்படுகிறான்.
- UNI
காலிங்கராயன்
Dev Anandh Fernando
21:10

மறவர் என்று குறிக்கப்பட்ட பரதவர் சமுகம்...!
சான்று:1
கி.பி. 1802 ஆம் ஆண்டில், டச்சுகாரர்களிடமிருந்து இலங்கை தீவை ஆங்கிலேய அரசு கைப்பற்றிய பிறகு பத்தொன்பதாம் காலாட்படைபிரிவு இராணுவ அதிகாரியான "ராபர்ட் பெர்சிவல்" என்பவர் இலங்கை தீவை பற்றி தாம் கண்டு எழுதியவற்றை எல்லாம் கி.பி. 1803 ஆம் வருடம், Duke of York (அதாவது ஆங்கிலேய அரச குடும்பத்தின் இளைய இளவரசருக்கு வழங்கப்படும் பட்டம்) அவர்களுக்கு சமர்ப்பித்திருந்த குறிப்பொன்றில்....
"ஒவ்வொரு வருடமும் மன்னார் தீவிலே நடைபெறும் முத்துக்குளித்தலில் பங்கேற்க வரும் பெரும்பாலானவர்கள் தூத்துக்குடி கடற்கரையிலிருந்து வரும் ரோமன் கத்தோலிக்க பரதவர்களே ஆகும். மன்னார் தீவில் அமைந்துள்ள முத்தரிப்புத்துறை தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் அவர்கள் பலி பூசையில் பங்கேற்கின்றனர்.
புயல் சமயத்திலும் இந்துக்கள் மற்றும் முகமதியர்களின் பண்டிகை நாட்களிலும் அந்த நேரத்தை ஈடுசெய்ய கத்தோலிக்க பரதவர்களை ஞாயிற்றுகிழமையிலும் முத்துக்குளிக்க கட்டாயபடுத்த முத்துகுளித்தலின் பொறுப்பாளர்கள் விரும்புவர், ஆனால் ஆங்கிலேய அரசாங்கத்தால் அங்கு முத்துக்குளித்தலின் மேலதிகாரியாக நியமிக்கப்பட்டவரின் உத்தரவின்றி அவர்களால் அதனை செய்ய இயலாது" என்று குறிப்பிடுகிறார்.
மேற்கூறிய ஆங்கிலேய இராணுவ அதிகாரி "ராபர்ட் பெர்சிவல்" தமது குறிப்பில் பரதவர்களை, மறவர் என்ற பெயரிலேயே குறிப்பிடுகிறார்.
சான்று:2
கிறிஸ்தவ சமயத்திலுள்ள உட்பிரிவுகளுள் ஒன்றான ஜெர்மானிய லூதரன் திருச்சபையின் மிஷனரியான ''எட்வர்ட் ரைமண்ட் பெயர்லின்'' தமது நூலில் பரதவர்கள் கத்தோலிக்கரான வரலாற்றையும் பிறகு கி.பி. 1542 ஆம் வருடம், புனித பிரான்சிஸ் சேவியர் தென்னக கடற்கரைக்கு பரதவர்களை சந்திக்க வந்ததையும் குறிப்பிடுகிறார்.
மேற்கூறிய ஜெர்மானிய லூதரன் திருச்சபையின் மிஷனரி ''எட்வர்ட் ரைமண்ட் பெயர்லின்'' தமது குறிப்பில் பரதவர்களை, மறவர் என்ற பெயரிலேயே குறிப்பிடுகிறார்.
சான்று:3
சேது நாட்டு அரசன் ரெகுநாத தேவன் என்ற கிழவன் சேதுபதியால் கொலை செய்யப்பட்ட போர்சுகீசிய ஏசுசபை பாதிரியாரான புனித அருளானந்தர் (JOHN DE BRITTO) அவர்கள் தமது குறிப்பில்.....
"முத்துக்குளித்துறை என்று அப்பகுதி (பரதவர் நாட்டு பகுதி) அழைக்கப்பட காரணம் அங்கு வாழும் பரதவர்கள் முதன்மையாக முத்துக்குளித்தலில் ஈடுபடுகின்றனர். முத்துக்குளித்தலில் அவர்களுக்கிருக்கும் திறமை இந்தியாவில் வேறெந்த மக்களுக்கும் கிடையாது. ஸ்பானிஷ் மிஷனரி புனித பிரான்சிஸ் சேவியர் கத்தோலிக்க சமய கோட்பாடுகளை அவர்களுக்கு போதித்தார்" என்று குறிப்பிடுகிறார்.
மேற்கூறிய போர்சுகீசிய ஏசுசபை குருவான புனித அருளானந்தர் தமது குறிப்பில் பரதவர்களை மறவர் என்ற பெயரிலேயே குறிப்பிடுகிறார்...
இப்படி பல்வேறு நாட்டவர்கள் பல்வேறு காலகட்டங்களில் தங்களுடைய நூல் குறிப்புகளில் பரதவர்களை மறவர் என்று குறிப்பதன் மூலம் பரதவர்களுக்கு மறவர் என்ற மற்றொரு பெயர் இருந்தது என்பதனை ஆதாரபூர்வமாக அறியமுடிகிறது.
००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००
ஆதாரம்:-
சான்று: 1
An Account Of The Island Of Ceylon By Robert Percival. Pg 62
சான்று: 2
The Land Of Tamulians and it's Missions,By The Rev. E. R. Baierlein. Page 107-9.
சான்று: 3
The Lives Of Father Paul Segneri, S.J., Father Peter Pinamonti, S.J., And The Ven. John de Britto, S.J., With An Essay On Catholic Home Missions, By The Rev. F. Faber, Priest Of The Oratory by Faber, Frederick William, 1814-1863 , Page 419-22
- UNI
கடல் மறவர்
Dev Anandh Fernando
07:11

பரதவர்களின் குருகுலத்தரையன் கல்வெட்டுகள்
குருகுல வம்சம் தோற்ற வரலாறு:-
ஆதியில் அஸ்தினாபுரத்தை ஆண்ட சந்திர குலத்து யயாதி மகாராஜாவின் மகனான புருவின் வழியில் புகழ்பெற்ற பரத சக்கரவர்த்தி தோன்றினார். பழங்கால ஓலைச்சுவடிகளின் துணை கொண்டு எழுதப்பட்டு கி.பி. 1862ல் அமெரிக்காவில் வெளியிடப்பட்ட வின்ஸ்லோவின் தமிழ்-ஆங்கில அகராதி...
"பரதவர் சமூகத்தவர்கள் சந்திரவம்சத்தில் உதித்த பரத சக்கரவர்த்தியின் சந்ததியினர் என்றும், அந்த பரத சக்கரவர்த்தியினாலே தான் அவர்களுக்கு பரதவர் என்ற பெயர் ஏற்பட்டது" என்று பதிவு செய்கிறது.
ஆங்கிலேய அரசு அதிகாரியான, எச்.ஆர்.பட்டே என்பவர் தனது நூலில்....
"பரதவர்களின் சொந்த பாரம்பரிய மரபுவழி செய்தியின் படி, அவர்கள் சந்திர குலத்தை சேர்ந்த பரத சக்கரவர்த்தியின் வம்சாவளியினர் ஆவர்".
மேலும், எச்.ஆர்.பட்டே கூறுகையில்....
"இந்த பாரம்பரிய மரபுவழி செய்திக்கு ஆதாரமாக, பரதவர்கள் இன்றுவரை தங்கள் திருமண விழாக்களில், தாங்கள் சார்ந்துள்ள சந்திரகுலத்து சின்னங்களையும், பதாகைகளையும் ஏந்தி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது" என்று குறிப்பிடுகிறார்.
தமிழர்களுள் பரத சக்கரவர்த்தியை முன்னோராக கொண்ட ஒரே சமூகம் பரதவர்கள் மட்டுமே. இந்த பரத சக்கரவர்த்தியின் சந்ததியில் வந்தவர் தான் குரு என்னும் பெயர் கொண்ட அரசன். இக்குரு என்னும் அரசனால் அவர் சந்ததியினர் குருகுலத்தவர் என்று அறியப்பட்டனர்.
கி.பி. 1300 களில் எழுதப்பட்ட காங்கேயன் புலவரின் வலைவீசி சுவடியில் பரதவர்கள் குரு வம்சத்தை உருவாக்கியதை பற்றி பதிவு செய்கிறது. சேந்தன் திவாகரம் உட்பட அனைத்து நிகண்டுகளும் பரதவர்களை குருகுலத்தரசன் என்றே தான் குறித்து நிற்கிறது.
17 ஆம் நூற்றாண்டில் நாஞ்சி வளநாடு கோவை குளத்தை ஆட்சி செய்த பரதகுல மன்னர் செண்பகராமன் காலிங்கராயனை பாட்டுடைத் நாயகனாக கொண்டு பாடப்பட்ட தமிழ் சிற்றிலக்கிய வகையில் ஒன்றான செண்பகராமன் பள்ளு அம்மன்னரை குருகுலராயன், குருகுலபரதசாதியில் அவதரித்தவன் என்றே குறிக்கிறது..
குருகுலபரதர் கல்வெட்டு: 1
மாவட்டம்/வட்டம்/ஊர்: திருநெல்வேலி
அரசு: பாண்டிய பேரரசு
அரசன்: மாறவர்மன் சுந்தர பாண்டியன்
வரலாற்று ஆண்டு: 13 ஆம் நூற்றாண்டு
இடம்: நெல்லையப்பர் கோவில் மூன்றாம் பிரகாரம் வடகிழக்கு மூலை நூற்றுக்கால் மண்டபம் கிழக்கு தூண் தெற்கு பக்கம்
கல்வெட்டு குறிப்புரை:
குருகுலத்தரையன் தன் பெயரில் சந்தி வழிபாடு ஏற்படுத்தி பல தானங்கள் செய்ததை பாடல் வடிவில் தெரிவிக்கிறது.
குருகுலபரதர் கல்வெட்டு: 2
மாவட்டம்/வட்டம்/ஊர்: திருநெல்வேலி
அரசு: பாண்டிய பேரரசு
அரசன்: சுந்தர பாண்டியன்
வரலாறு ஆண்டு: 13 ஆம் நூற்றாண்டு
இடம்: நெல்லையப்பர் கோவில் மூன்றாம் பிரகாரம் திருச்சுற்று வடகிழக்கு மூலை நூற்றுக்கால் மண்டபம் தூண் மேற்கு தூண் கிழக்கு பக்கம்
கல்வெட்டு குறிப்புரை: குருகுலத்தரையன் தன் பெயரில் சந்தி ஏற்படுத்தியதைத் தெரிவிக்கும் பாடல் கல்வெட்டு.
குருகுலபரதர் கல்வெட்டு: 3
மாவட்டம்: கன்னியாகுமரி
வட்டம்: அகஸ்தீஸ்வரம்
ஊர்: வாரியூர்
அரசு: சோழ பேரரசு
அரசன்: முதலாம் குலோத்துங்க சோழன்
வரலாற்று ஆண்டு: கி.பி. 1111
இடம்: பத்மநாபபுரம் அரண்மனை அருங்காட்சியகம்
கல்வெட்டு குறிப்புரை: அமரவதி மங்கலத்தை சேர்ந்த குருகுலராயன் என்பவன் சுசீந்திரம் மகாதேவர் கோயிலில் குலோத்துங்க சோழன் பெயரில் திருநந்தா விளக்கொன்று வைத்ததை தெரிவிக்கிறது.
- UNI
குருகுலத்தரையன்
Dev Anandh Fernando
00:02
