வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday, 7 October 2024

குருகுலத்தரையன்


பரதவர்களின் குருகுலத்தரையன் கல்வெட்டுகள்
 
குருகுல வம்சம் தோற்ற வரலாறு:-

ஆதியில் அஸ்தினாபுரத்தை ஆண்ட சந்திர குலத்து யயாதி மகாராஜாவின் மகனான புருவின் வழியில் புகழ்பெற்ற பரத சக்கரவர்த்தி தோன்றினார். பழங்கால ஓலைச்சுவடிகளின் துணை கொண்டு எழுதப்பட்டு கி.பி. 1862ல் அமெரிக்காவில் வெளியிடப்பட்ட வின்ஸ்லோவின் தமிழ்-ஆங்கில அகராதி...

"பரதவர் சமூகத்தவர்கள் சந்திரவம்சத்தில் உதித்த பரத சக்கரவர்த்தியின் சந்ததியினர் என்றும், அந்த பரத சக்கரவர்த்தியினாலே தான் அவர்களுக்கு பரதவர் என்ற பெயர் ஏற்பட்டது" என்று பதிவு செய்கிறது.

ஆங்கிலேய அரசு அதிகாரியான, எச்.ஆர்.பட்டே என்பவர் தனது நூலில்....

"பரதவர்களின் சொந்த பாரம்பரிய மரபுவழி செய்தியின் படி, அவர்கள் சந்திர குலத்தை சேர்ந்த பரத சக்கரவர்த்தியின் வம்சாவளியினர் ஆவர்".

மேலும், எச்.ஆர்.பட்டே கூறுகையில்....

"இந்த பாரம்பரிய மரபுவழி செய்திக்கு ஆதாரமாக, பரதவர்கள் இன்றுவரை தங்கள் திருமண விழாக்களில், தாங்கள் சார்ந்துள்ள சந்திரகுலத்து சின்னங்களையும், பதாகைகளையும் ஏந்தி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது" என்று குறிப்பிடுகிறார்.

தமிழர்களுள் பரத சக்கரவர்த்தியை முன்னோராக கொண்ட ஒரே சமூகம் பரதவர்கள் மட்டுமே. இந்த பரத சக்கரவர்த்தியின் சந்ததியில் வந்தவர் தான் குரு என்னும் பெயர் கொண்ட அரசன். இக்குரு என்னும் அரசனால் அவர் சந்ததியினர் குருகுலத்தவர் என்று அறியப்பட்டனர்.

கி.பி. 1300 களில் எழுதப்பட்ட காங்கேயன் புலவரின் வலைவீசி சுவடியில் பரதவர்கள் குரு வம்சத்தை உருவாக்கியதை பற்றி பதிவு செய்கிறது. சேந்தன் திவாகரம் உட்பட அனைத்து நிகண்டுகளும் பரதவர்களை குருகுலத்தரசன் என்றே தான் குறித்து நிற்கிறது.

17 ஆம் நூற்றாண்டில் நாஞ்சி வளநாடு கோவை குளத்தை ஆட்சி செய்த பரதகுல மன்னர் செண்பகராமன் காலிங்கராயனை பாட்டுடைத் நாயகனாக கொண்டு பாடப்பட்ட தமிழ் சிற்றிலக்கிய வகையில் ஒன்றான செண்பகராமன் பள்ளு அம்மன்னரை குருகுலராயன், குருகுலபரதசாதியில் அவதரித்தவன் என்றே குறிக்கிறது..

குருகுலபரதர் கல்வெட்டு: 1

மாவட்டம்/வட்டம்/ஊர்: திருநெல்வேலி
அரசு: பாண்டிய பேரரசு
அரசன்: மாறவர்மன் சுந்தர பாண்டியன்
வரலாற்று ஆண்டு: 13 ஆம் நூற்றாண்டு
இடம்: நெல்லையப்பர் கோவில் மூன்றாம் பிரகாரம் வடகிழக்கு மூலை நூற்றுக்கால் மண்டபம் கிழக்கு தூண் தெற்கு பக்கம்
கல்வெட்டு குறிப்புரை:
குருகுலத்தரையன் தன் பெயரில் சந்தி வழிபாடு ஏற்படுத்தி பல தானங்கள் செய்ததை பாடல் வடிவில் தெரிவிக்கிறது.
 
குருகுலபரதர் கல்வெட்டு: 2
மாவட்டம்/வட்டம்/ஊர்: திருநெல்வேலி
அரசு: பாண்டிய பேரரசு
அரசன்: சுந்தர பாண்டியன்
வரலாறு ஆண்டு: 13 ஆம் நூற்றாண்டு
இடம்: நெல்லையப்பர் கோவில் மூன்றாம் பிரகாரம் திருச்சுற்று வடகிழக்கு மூலை நூற்றுக்கால் மண்டபம் தூண் மேற்கு தூண் கிழக்கு பக்கம்
கல்வெட்டு குறிப்புரை: குருகுலத்தரையன் தன் பெயரில் சந்தி ஏற்படுத்தியதைத் தெரிவிக்கும் பாடல் கல்வெட்டு.

குருகுலபரதர் கல்வெட்டு: 3
மாவட்டம்: கன்னியாகுமரி
வட்டம்: அகஸ்தீஸ்வரம்
ஊர்: வாரியூர்
அரசு: சோழ பேரரசு
அரசன்: முதலாம் குலோத்துங்க சோழன்
வரலாற்று ஆண்டு: கி.பி. 1111
இடம்: பத்மநாபபுரம் அரண்மனை அருங்காட்சியகம்
கல்வெட்டு குறிப்புரை: அமரவதி மங்கலத்தை சேர்ந்த குருகுலராயன் என்பவன் சுசீந்திரம் மகாதேவர் கோயிலில் குலோத்துங்க சோழன் பெயரில் திருநந்தா விளக்கொன்று வைத்ததை தெரிவிக்கிறது.

































- UNI

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com