வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday, 10 October 2024

கடல் மறவர்


மறவர் என்று குறிக்கப்பட்ட பரதவர் சமுகம்...!
 
சான்று:1

கி.பி. 1802 ஆம் ஆண்டில், டச்சுகாரர்களிடமிருந்து இலங்கை தீவை ஆங்கிலேய அரசு கைப்பற்றிய பிறகு பத்தொன்பதாம் காலாட்படைபிரிவு இராணுவ அதிகாரியான "ராபர்ட் பெர்சிவல்" என்பவர் இலங்கை தீவை பற்றி தாம் கண்டு எழுதியவற்றை எல்லாம் கி.பி. 1803 ஆம் வருடம், Duke of York (அதாவது ஆங்கிலேய அரச குடும்பத்தின் இளைய இளவரசருக்கு வழங்கப்படும் பட்டம்) அவர்களுக்கு சமர்ப்பித்திருந்த குறிப்பொன்றில்....

"ஒவ்வொரு வருடமும் மன்னார் தீவிலே நடைபெறும் முத்துக்குளித்தலில் பங்கேற்க வரும் பெரும்பாலானவர்கள் தூத்துக்குடி கடற்கரையிலிருந்து வரும் ரோமன் கத்தோலிக்க பரதவர்களே ஆகும். மன்னார் தீவில் அமைந்துள்ள முத்தரிப்புத்துறை தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் அவர்கள் பலி பூசையில் பங்கேற்கின்றனர்.
 
புயல் சமயத்திலும் இந்துக்கள் மற்றும் முகமதியர்களின் பண்டிகை நாட்களிலும் அந்த நேரத்தை ஈடுசெய்ய கத்தோலிக்க பரதவர்களை ஞாயிற்றுகிழமையிலும் முத்துக்குளிக்க கட்டாயபடுத்த முத்துகுளித்தலின் பொறுப்பாளர்கள் விரும்புவர், ஆனால் ஆங்கிலேய அரசாங்கத்தால் அங்கு முத்துக்குளித்தலின் மேலதிகாரியாக நியமிக்கப்பட்டவரின் உத்தரவின்றி அவர்களால் அதனை செய்ய இயலாது" என்று குறிப்பிடுகிறார்.
 
மேற்கூறிய ஆங்கிலேய இராணுவ அதிகாரி "ராபர்ட் பெர்சிவல்" தமது குறிப்பில் பரதவர்களை, மறவர் என்ற பெயரிலேயே குறிப்பிடுகிறார்.

சான்று:2

கிறிஸ்தவ சமயத்திலுள்ள உட்பிரிவுகளுள் ஒன்றான ஜெர்மானிய லூதரன் திருச்சபையின் மிஷனரியான ''எட்வர்ட் ரைமண்ட் பெயர்லின்'' தமது நூலில் பரதவர்கள் கத்தோலிக்கரான வரலாற்றையும் பிறகு கி.பி. 1542 ஆம் வருடம், புனித பிரான்சிஸ் சேவியர் தென்னக கடற்கரைக்கு பரதவர்களை சந்திக்க வந்ததையும் குறிப்பிடுகிறார்.
 
மேற்கூறிய ஜெர்மானிய லூதரன் திருச்சபையின் மிஷனரி ''எட்வர்ட் ரைமண்ட் பெயர்லின்'' தமது குறிப்பில் பரதவர்களை, மறவர் என்ற பெயரிலேயே குறிப்பிடுகிறார்.
 
சான்று:3
சேது நாட்டு அரசன் ரெகுநாத தேவன் என்ற கிழவன் சேதுபதியால் கொலை செய்யப்பட்ட போர்சுகீசிய ஏசுசபை பாதிரியாரான புனித அருளானந்தர் (JOHN DE BRITTO) அவர்கள் தமது குறிப்பில்.....
 
"முத்துக்குளித்துறை என்று அப்பகுதி (பரதவர் நாட்டு பகுதி) அழைக்கப்பட காரணம் அங்கு வாழும் பரதவர்கள் முதன்மையாக முத்துக்குளித்தலில் ஈடுபடுகின்றனர். முத்துக்குளித்தலில் அவர்களுக்கிருக்கும் திறமை இந்தியாவில் வேறெந்த மக்களுக்கும் கிடையாது. ஸ்பானிஷ் மிஷனரி புனித பிரான்சிஸ் சேவியர் கத்தோலிக்க சமய கோட்பாடுகளை அவர்களுக்கு போதித்தார்" என்று குறிப்பிடுகிறார்.

மேற்கூறிய போர்சுகீசிய ஏசுசபை குருவான புனித அருளானந்தர் தமது குறிப்பில் பரதவர்களை மறவர் என்ற பெயரிலேயே குறிப்பிடுகிறார்...

இப்படி பல்வேறு நாட்டவர்கள் பல்வேறு காலகட்டங்களில் தங்களுடைய நூல் குறிப்புகளில் பரதவர்களை மறவர் என்று குறிப்பதன் மூலம் பரதவர்களுக்கு மறவர் என்ற மற்றொரு பெயர் இருந்தது என்பதனை ஆதாரபூர்வமாக அறியமுடிகிறது.
 
००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००००

ஆதாரம்:-

சான்று: 1
An Account Of The Island Of Ceylon By Robert Percival. Pg 62
சான்று: 2
The Land Of Tamulians and it's Missions,By The Rev. E. R. Baierlein. Page 107-9.
சான்று: 3
The Lives Of Father Paul Segneri, S.J., Father Peter Pinamonti, S.J., And The Ven. John de Britto, S.J., With An Essay On Catholic Home Missions, By The Rev. F. Faber, Priest Of The Oratory by Faber, Frederick William, 1814-1863 , Page 419-22


















- UNI
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com