வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday, 18 October 2024

விஜயநகர ஆட்சியில் பாண்டி நாடு


விஜயநகர பேரரசு ஆட்சியில் பாண்டிய நாடு

விஜயநகர பேரரசின் பிரதிநிதியாக கிபி 1529 முதல் கிபி 1623 வரை மதுரையை ஆண்டவர்களின் பெயர் பட்டியல்....
 
1.விசுவநாத நாயக்கர்(1529-1564)
2.குமார கிருஷ்ணப்ப நாயக்கர்(1564-1572)...
3.வீரப்ப நாயக்கர்(1572-1595)
4.இரண்டாம் குமார கிருஷ்ணப்ப நாயக்கர்(1595-1602)
5.முத்து கிருஷ்ணப்ப நாயக்கர்(1602-1609)
6.முத்து வீரப்ப நாயக்கர் (1602-1623)
7.திருமலை நாயக்கர் (சில ஆண்டுகள் மட்டுமே)
 
விஜயநகர பேரரசின் மதுரை ஆளுநர்கள் தங்களுக்கு கப்பம்கட்ட மறுக்கும் நாடுகளின் செல்வங்களை கொள்ளையடித்து வந்தனர். அறிவிப்பின்றி அந்நாடுகளுக்குள் வடுகப்படைகளுடன் நுழைந்து கிராமங்களை சூறையாடி செல்வதாகும். இவ்வாறு, விஜயநகர பேரரசுக்கு வரிகட்ட மறுக்கும் திருவிதாங்கூர் மகாராஜாவின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளை நாயக்கர் படைகள் ஒவ்வொரு வருடமும் கொள்ளையடித்து செல்வது வழக்கம்.

ஒவ்வொரு வருடமும் விஜயநகர பேரரசின் மதுரை நாயக்கர் படைகள் வரி கெட்ட மறுக்கும் பரவர் நாட்டை தாக்கி கிராமங்களை கொள்ளையடித்து செல்லுவது வழக்கமாக இருந்தது. கிபி 1596 ஆம் ஆண்டு பரவர்கள் சார்பில் நல்லுறவை ஏற்படுத்த மதுரை சென்றிருந்த போர்சுகீசிய ஏசுசபை பாதிரியார் கொன்சாலோ பெர்ணான்டஸை மன்னர் இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர்(1595-1602) வரவேற்று தன் தலைநகர் மதுரையில் தங்கியிருந்து வணிகம் செய்து வரும் பரவர்களின் வழிபாட்டு தேவைகளுக்காக அங்கேயே தேவாலயம் மற்றும் மடாலயம் கட்டி கொள்ள அனுமதி வழங்கினார்.

புதிதாக கட்டப்பட்ட இத்தேவாலயத்தில் பங்கு தந்தையாக பணியாற்றியது மட்டுமின்றி பரவர்கள் சார்பில் நாயக்கர் மன்னர் அரசவையிலும் போர்சுகீசிய ஏசுசபை பாதிரியார் கொன்சாலோ பெர்ணான்டஸ் இடம்பெற்றிருந்தார். அடுத்து வந்த விஜயநகர பேரரசின் மதுரை ஆளுநர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர்(1602-1609) பரவர்களுடன் சுமுகமான போக்கினை கைகொள்ளவில்லை. இம்மன்னரின் தளவாய்களில் ஒருவராக சடையக்க தேவர்(எ) உடையான் சேதுபதி என்னும் தமிழர் நியமனம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.(சேதுபதி மன்னர் வரலாறு Dr. எஸ். எம். கமால் பக்கம்.20)

கிபி 1606 ஆம் ஆண்டு போர்சுகீசிய வணிக கப்பல் விபத்துக்குள்ளாகி தூத்துக்குடி அருகில் சேதமடைந்த நின்று விட்டது. கப்பலில் இருந்து பொருட்களை பரவர்கள் மீட்டனர். இதற்கு நன்றியாக மீட்கப்பட்ட பொருட்களில் நான்கில் ஒரு பகுதியை பரவர்களுக்கு விட்டுதருவதாக போர்சுகீசியர்கள் வாக்களித்திருந்தனர்.

இதனை கேள்வியுற்ற முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் தனது அரசவையில் இருந்த மேற்கூறிய போர்சுகீசிய ஏசுசபை பாதிரியார் கொன்சாலோ பெர்ணான்டஸை பரவர்களிடம் தூதனுப்பி கப்பல் மீதும் அவற்றிலுள்ள பொருட்கள் மீதும் உரிமை கோரி 5,00,000 போர்சுகீசிய நாணயங்களை கேட்டு மிரட்டினார். தரவில்லையெனில் கொன்று விடுவதாகவும் அச்சுறுத்தினார்.

பரவர்கள் மறுக்கவே முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் தமது படைகளை அவர்களுக்கெதிராக போருக்கு அணிவகுத்து சென்றார். பரவர்களுடன் இரண்டு மாதங்கள் கடுமையாக மோதி பின்வாங்கினார் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர். இதற்கு அடுத்து வந்த முத்து வீரப்ப நாயக்கர் (1609-1623) தமது விஜயநகரபேரரசு படைகளுடன் வரிகெட்ட மறுத்த பரவர் நாட்டை கிபி 1612 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தாக்கி, கிராமங்களை கொள்ளையடித்து சென்றார். இம்மன்னருக்கு அடுத்து வந்தவரே திருமலை நாயக்கர். இந்த திருமலை நாயக்கரின் ஆட்சியின் தொடக்கத்திலேயே விஜயநகர பேரரசின் ஆட்சி பாண்டி நாட்டில் முடிவுற்று தன்னாட்சி உருவானது. 

----------------------------------------

Foot Notes:-

Travels of Jesuit in to various parts of the world by John Lockman. Pg 367.
Aravidu Dynasty of Vijayanagar by Jesuit Henry Heras. Pg 363-64
Goa Portuguese Doc,HAG,MDR,livro 12,Codice 15/3/4.








- UNI
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com